எத்தனை பேருக்கு இது – கவிதை ஞாபகம் இருக்கிறது?

கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
தாயை மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே,
கோலிருக்கும் மரமே,
மரத்திலுள்ள கொக்கே,
கொக்கு வாழும் குளமே,
குளத்தில் இருக்கும் மீனே,
மீனைப் பிடிக்கும் வலையா ,
வலையன் கைச் சட்டியே,
சட்டி செய்யும் குயவா,
குயவன் கை மண்ணே,
மண்ணில் விளையும் புல்லே,
புல்லை தின்னும் குதிரையே—என் பெயரென்ன. ?
உன் பெயரா.? ஈஈஈஈஈஈஈஈஈ- என்றதாம் குதிரை.
தன் பெயர் அறிந்த மகிழ்வில் பறந்ததாம் ஈ.
ஊர் ஊர்
என்ன வூர்
மயிலாப்பூர்
என்ன மயில்
காட்டு மயில்
என்ன காடு
ஆற்காடு
என்ன ஆறு
பாலாறு
என்ன பால்
கள்ளிப்பால்
என்ன கள்ளி
எலைக்கள்ளி
என்ன எலை
வாழையிலை
என்ன வாழை
ரஸ வாழை
என்ன ரஸம்
மொளகு ரஸம்
என்ன மொளகு
வால்மொளகு
என்ன வால்
நாய் வால்
என்ன நாய்
மர நாய்
என்ன மரம்
பலா மரம்
என்ன பலா
வேர்ப்பலா
என்ன வேர்
வெட்டிவேர்
என்ன வெட்டி
மணம் வெட்டி
என்ன மணம்
பூ மணம்
என்ன பூ
மாம்பூ
என்ன மா
அம்மா!

சின்னஞ்சிறு வயதில் படித்த இந்த பாட்டுக்களை இன்றும் நான் கவனம்
வைத்திருக்கிறேன் ! இதனை கற்பித்த ஆசிரியர்கள் “தெய்வங்கள்”என போற்றப்பெறுவர் “.அது ஒரு பொற்காலம்.
இதனை பதிவேற்றிய தங்களுக்கு நன்றிகள் கோடி !
LikeLike
கொழு கொழு கன்றே வரிகளை என் 84 வயது தாயும் நினைவில் வைத்து ஒரு வரி மாறாமல் கூறுகிறார். என்னே தங்களின் ஞாபக சக்தி. ஆண்டவனின் அருள் பெற்றவர்கள் மட்டுமே இம்மாதிரியான திறமையைப் பெறுகிறார்கள். தாங்கள் கூறியதுபோல் கற்பித்த ஆசிரியர்கள் தெய்வத்திற்கு சமம்.
LikeLike
Can you share the audio of this Kozhu Kozhu kandre?
LikeLike