“தப்புக் கணக்கு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Aranmanai Kili Serial: ஆஹா... மாமியார் மருமகள் சென்டிமென்ட் கண்களில் நீரை வரவழைக்குதே! | Aranmanai kili serial: the mother-in-law's daughter in the eyes of the sentimental crying! - Tamil Oneindiaமுதல் குழந்தை, சீமந்த புத்திரன் பிறந்தான். அடுத்த நான்கு மாதங்களுக்குத் தூக்கம், சாப்பிடும் உணவு எல்லாம் மாறியது. ஏனோ இதற்குப் பழகிக் கொள்ளக் கஷ்டமாக இருந்தது என்றாள் ஜோதி.

இந்த முப்பது வயதான இல்லத்தரசி, அம்மாவின் வீட்டிலிருந்தாள்.  ஐந்து வருடத்திற்கு முன்னால் அவளுடைய கணவருக்கு வெளிநாட்டில் வேலை அமைந்தது. கர்ப்பம் ஆகி ஆறாவது மாதத்தில், தாய்நாட்டில் தான் தங்களது குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஜோதியும், அவளுடைய கணவரும் முடிவு செய்ததால், பிரசவத்திற்குத் தாய்நாடு வந்திருந்தாள்.

குழந்தை வீரன் பிறக்கும் முன்பே, வெளிநாடு போய் ஒரு வருடம் சென்றதும் ஜோதிக்கு அவ்வப்போது தலைவலி வந்து போகும். வேலை எதுவும் செய்யாமல் ஓய்வு எடுத்தால் உடனே போய்விடும். கர்ப்பிணியான நிலையில், மருந்து வேண்டாமே என்று அம்மா கஷாயம் வைத்துத் தருவாளாம். தன்னுடைய கர்ப்பப் பரிசோதனைக்குப் போகும் போதும் மருத்துவரிடம் தலைவலியைப் பற்றி ஒவ்வொரு முறையும் கூறுவாள். சில பரிசோதனைகள் செய்து பார்த்த பின், எதுவும் பிரச்சினை இல்லை என வந்தது.

குழந்தை பிறந்த பின்னும் வலி இருந்தது. குழந்தை மருத்துவர் அவளுடைய நலனைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் உடல்வலி எனச் சொல்லிக் கொண்டே இருந்தாள். எதாவது பிரச்சினை இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்கையில், எந்த விதமான தொந்தரவும் இல்லை என்றே வந்தது. இந்த முறையும் உடல் நலன் நன்றாக இருப்பதையே காட்டியது. அப்படி என்றால் தன் வலி பொய்யா? ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை? ஜோதி வியந்தாள்.

மனம் வருந்தியது. மறுமுறை குழந்தையை எடுத்துப் போகும் போது ஜோதி துவண்டு இருந்ததைக் கவனித்த குழந்தை மருத்துவர் அவளுடைய கைனகாலஜிஸ்டடை அழைத்து ஜோதி முன்னால் பேசினார். அதைத் தொடர்ந்து, கைனகாலஜிஸிட் கைப்பேசியை ஸ்பீக்கர் வடிவில் போட்டு,  அவர்கள் அவளை ஒர்சில கேள்விகள் கேட்டார்கள். ஜோதியை தன்னுடைய சஞ்சலங்களுக்கு மனநல நிபுணரிடம் சில செஷன்கள் வைத்துக்கொள்ளப் பரிந்துரைத்தார்கள்.

என்னைப் பார்க்கச் சொன்னார்கள். ஏனென்றால் ஜோதிக்கு மருந்து தேவையில்லை, கோளாறு வேறு என்று. எங்கள் துறையான “ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்”ல் இப்படிப் போன்றவர்களைப் பார்ப்போம்.

நாங்கள், க்ளையண்டின்ன் வளங்களை மையமாக வைத்து,  அவர்களுக்குத் தன்னைப் புரிந்துகொள்ள வைப்போம், மனப் பயிற்சிகள் அளவிற்குச் சிகிச்சை தருவோம். இதை விவரித்து, ஜோதியிடம் உளவியல் சிகிச்சை தேவை என்றதை எடுத்துச் சொன்னோம். ஜோதி திகைத்து நின்றாள்.

ஒரு மாதம் ஓடியது. நண்பர்களுக்குத் தெரிந்த சில மருத்துவர்களைப் பார்த்தாள். மூவரும் வெவ்வேறு பரிசோதனை செய்த பிறகு, உடலில் பாதிப்பு இல்லை என்று சொன்னார்கள்.

நண்பர்கள் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு என்னைப் பார்க்கப் பரிந்துரைத்தார்கள். இதனால் மறுபடி வந்ததாக ஜோதி சொன்னாள்.

அவள் தன் கல்யாண வாழ்வைப் பற்றி விவரிக்க ஆர்வமாக இருந்ததால். அங்கேயே ஆரம்பித்தேன்.

இரு குடும்பத்தினர் பார்த்துச் செய்து வைத்த கல்யாணம். தனக்குக் கல்யாணம் என்ற செய்தியை தன்னுடைய உயிர்த் தோழியான சரளாவிடம் பகிர்ந்தாள். அவள் பல ஆலோசனை கொடுத்தாள். கூடவே இதையும் சொன்னாள், முதல் வருடம் முடியும் வரை கணவரிடம் எந்த வேறுபாடு வராமல் பார்த்துக் கொள்ளும்படி.

கல்யாணம் முடிந்த ஐந்தாவது மாதமே வெளிநாடு போக வேண்டியதாயிற்று. ஜோதியின் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.  இதுவரை மாமனார் மாமியார், மற்றும் நாத்தனார் எனக் கூட்டுக் குடும்பத்திலிருந்தாள். தினமும் ஏதோ ஒன்றைத் தவறாகச் செய்து விடுவாள். மாமியார் சமாதானம் செய்து, “பயப்படாமல் செய். நீ, தனியாக இருந்தால் சரியாகச் செய்வாய்,” என்று சமாதானம் செய்வாள். ஆனாலும், இவர்களிடம் பயப்பட்டாள் ஜோதி.

அவளுடைய சினேகிதி சரளா இவளிடம் தன் மணவாழ்வின் பல அம்சங்களைச் சொல்லி வந்தாள். ஒவ்வொரு முறையும் சொல்லி முடிக்கும் போது “எல்லாம் என் மாமியார் காரீயால தான்” என்ற சொல்லைக் கேட்கக் கேட்க, ஜோதிக்கு மாமியார் என்றவளிடம் பயம் வளர்ந்து வந்தது. யாரிடமும் பகிரவோ சொல்லவோ இல்லை. கல்யாணம் ஆனதிலிருந்து ஜோதி தனது மாமியாரின் வார்த்தைகளில் உள் அர்த்தம் இருப்பதாக உறுதியாக இருந்தாள்.

அன்புடன் அந்தரங்கம் 18–09–16 | Dinamalarவெளிநாடு போய் ஒரு வருடம் ஆனதும் மாமனார் மாமியார் இருவரையும் தங்களுடன் சில மாதங்கள் இருக்க அழைத்தார்கள். ஜோதி மனத்தில் பயந்து விட்டாள். கணவனிடம் சொல்லத் தைரியம் இல்லை. சரளாவிடம் பகிர்ந்ததும், “உஷார், உஷார்” என்று என்னவெல்லாம் ஆகலாம் என வர்ணித்தாள்.

அன்று ஆரம்பமானது, எதைச் செய்தாலும் ஒரு சந்தேகம், பயம். சமையலோ, அலங்காரம் செய்வதோ, எல்லாவற்றிலும். சந்தேகம் எழும், வடவட என ஆகும், உடனே உடல் முழுவதும் ஏதோ நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்ததைப் போன்ற வலியும் சோர்வும் சூழ, படுத்துக் கொண்டால் தான் தீர்வு. உடலின் வேதனை அதிகரித்தது.

மாமனார் மாமியார் இருக்கும் போதும் இப்படித் தான். பையன் வருந்தக் கூடாது என்று அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். இது, ஜோதி மனதைச் சுருக்கென்று குத்தியது. குழம்பிப் போனாள்.

கர்ப்பம், குழந்தை பிறந்த பிறகும் இந்த நிலை நீடித்தது. குழந்தை மருத்துவர் கைனகாலெஜிஸ்ட் இருவரிடமும் ஜோதியின் நிலை அட்ஜெஸ்மென்ட் (சமாளிப்பு) டிஸாடர் என விளக்கினேன். இப்போதைக்குத் தகவல்களைப் பரிசோதித்த நிலை முடிந்து விட்டது, சிகிச்சைக்கு ஏறத்தாழ பத்து ஸெஷன்கள் தேவைப்படும் என்பதையும் எடுத்துக் கூறினேன். ஜோதிக்கும் விளக்கினேன்.

ஸெஷன்கள் ஆரம்பமானது. ஜோதி தன்னுடைய மாமியார் சார்ந்த பயத்தைப் பற்றிப் பகிர வேண்டும் என்றாள். அதிலிருந்து தொடங்கினோம். பல சம்பவங்களை விவரித்தாள். ஒவ்வொரு முறையும் சம்பவத்தை முடிக்கும்போது “சரளா சொன்னா மாதிரியே நடந்தது” எனச் சொல்லி முடித்தாள். அதனை ஆழமாக அலசினோம்.

ஒன்றும் குறையில்லை! | Dinamalarஅடுத்த கட்டமாக, கல்யாணம் ஆன பிறகு, ஒவ்வொரு வருடத்தில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள், மாமியார் அதில் இருக்க வேண்டும். இவற்றில் என்ன – ஏன் நேர்ந்தது – மற்ற பாத்திரங்கள் – சமாதானம் ஆன முறை என்று பிரித்து விவரிக்கப் பரிந்துரைத்தேன். ஒவ்வொன்றாய்ச் செய்தாள்.

முதலில் தட்டுத் தடுமாறி முடித்தாள் ஜோதி. இரண்டாவது தடவையும் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. மூன்றாவதில் வியப்பு தட்டியது. என்னைக் கண் பிதுங்கி வருவது போல், முழித்துப் பார்த்தாள். மேற்கொண்டு செய்ய வைத்தேன். அவளாகவே தயங்கிக் கேட்டாள், “மேடம், நடந்தது வேற, இங்கே தெரிவது வேற மாதிரி வருகிறது என்று. ஜோதி குறிப்பிடுவது புரிந்தது, இருந்தும் மேலும் ஐந்து சம்பவங்களைப் பிரித்து எழுதி வரச் சொன்னேன்.

ஜோதி, பரபரப்பாக உள்ளே நுழைந்தாள். அவசரமாகக் குறித்து வைத்த காகிதங்களைப் பரப்பினாள். நான் அவற்றைப் பார்த்து வருகையில் என் கவனத்தைப் பல இடங்களுக்குத் திருப்பினாள். இவற்றை நினைவுபடுத்தி எழுத, அவளுடைய அனுபவத்தை, உணர்வை உரையாடினோம்.

ஜோதிக்கு தன் நிலைமையின் காரணிகள், தன்னுடைய தவறான சிந்தனை செய்யும் விதத்தைப் பற்றிப் புரிய வந்தது. இதை மேலும் அறிந்து கொள்ள, அவள் “சரளா சொன்னாள்” என்று குறித்திருந்த சிலவற்றிலிருந்து  அவள் சரளாவிடம் பேசிய உரையாடல்களை எடுத்துக் கொண்டோம். இதை ஆராய, ஜோதி தான் எந்த அளவிற்குத் தோழி சொன்னதை ஏற்று, அதுதான் சரி என முடிவு செய்து, நடந்து கொண்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள். இவ்வாறு செய்தது மேலும் தெளிவு பட, சரளாவிடம் மறுபடி பேச முடிவானது. இந்த முறை “ஏன் இவ்வாறு செய்தோம்?” என்றதைக் கண்டறிய, பேசினாள்.

 ஜோதிக்கு, இந்த உரையாடலில் மேலும் புரிய வர, எழுதிக் கொண்டாள். சரளா என்னிடம் வரத் தயாராக இருப்பதாகச் சொன்னதால் ஜோதி அவளை அடுத்த ஸெஷனுக்கு அழைத்து வந்தாள்.

இதனால் இரண்டு வித பயன் ஆனது. ஒன்று இருவரும் தாங்கள் பகிர்வதற்குக் காரணியைப் புரிந்து கொண்டார்கள். மற்றவரின் சிந்தனை, பரிந்துரை கேட்டுக் கொள்வது நன்மை, நல்லது தான். ஆனால் இருவரும் ஒரு எளிதான விஷயத்தைக் கோட்டை விட்டதை அடையாளம் காண முடிந்தது. அதாவது, சரளா தன்னுடைய நிலையை வைத்து ஜோதியை “இப்படி இரு, அப்படிச் செய்” என்றாள்.

ஜோதி- சரளாவின் ஒற்றுமை பெண்கள் என்பதனால். இருவரின் சூழல், உறவுகள், குணாதிசயங்கள், வேறுபட்டவை என்றதை மனதில் வைக்காததே அவர்கள் இருவரும் செய்த தவறு. இப்போது, இவற்றை மையமாக வைத்துப் பகிர வைத்தேன். இருவரும் இப்போது தங்களது நிலைக்கு, சூழலுக்கு எது பொருந்தாது / பொருந்தும் என வித்தியாசம் செய்யப் புரிந்து கொண்டார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் இதை வலுப்படுத்தப் பட்டது.

தானாகவே இன்னொரு விளைவு ஏற்பட்டது, சரளாவும் புரிந்து கொண்டாள், இனிமேல் யாருக்கு எடுத்துச் சொல்கிறோம், அதில் உஷாராக இருக்க வேண்டும் என்று. எனக்கு “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்”!

இப்போது, ஜோதி  முழுமையாக உணர்ந்தாள். அதே போல தன்னுடைய உணர்வை மறைத்து வைத்ததின் விளைவே சோர்வு, வலி என்றது தெளிவுபட்டது.

மனம் கேட்கவில்லை, மாமியாரை அழைத்தாள். தன்னோடு வந்து இருக்க வற்புறுத்தினாள். ஜோதி, வீரன் இருவரையும் பார்த்து வெகு நாட்களாக ஆனதால் மாமனார் மாமியார் இருவரும் வந்தார்கள்.

ஜோதியிடம் பல மாறுதலை கவனித்து வந்த மாமனார்- மாமியார் மனநிறைவு அடைந்தார்கள். ஒரு நாள் கோவில் போயிருக்கும் போது இதை அவளிடம் சொன்னார்கள். ஜோதி, என்னை ஆலோசிப்பதைப் பற்றி எடுத்துக் கூறினாள். தனக்கு பெற்ற தெளிவையும் சொன்னாள். பெரியவர்கள் இருவரும் நெகிழ்ந்து போனார்கள். ஜோதி தனக்கு நேர்ந்ததை இப்படி மனம் விட்டு பேசுவதைக் கேட்டு அவள் மீது பாசம் கூடியது.

ஜோதி நிலை நன்றாக ஆனதால் ஸெஷன்களை முடிக்கும் வேளை வந்துவிட்டது. ஸெஷன்கள் இடைவெளியை அதிகரித்தோம். இந்தக் கட்டத்தில் ஜோதி, மாமியார்-மாமனார் வீரன் எல்லோரும் சேர்ந்து வந்தார்கள். ஜோதியின் நிலை சுதாரித்து வர குழந்தை மேல் பாசம் பொழிந்தாள். ஸெஷன் முடியும் வரை வீரனுடன் அவர்கள் நடைப் பயிற்சி முடித்துக் கொள்வார்கள்.

நால்வரும் வருவதிலும், திரும்பிப் போகையிலும் அவர்களுக்குள் உள்ள நெருக்கம், பாசம், அக்கறை நன்றாக தென்பட்டது!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.