குவிகம் அன்பர்கள் தெரிவித்த கருத்துப்படி குறுக்கெழுத்துப் போட்டி நடத்தத் தீர்மானித்திருக்கிறோம். 

இந்த மாதம் உங்களுக்கான போட்டி !

பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து. விடை அடுத்தமாதம் வெளிவரும். 

முதலில் வரும் சரியான விடைக்கு ரூபாய் 100 பரிசு !

இதைத் தயாரித்து வடிவமைத்த நண்பர் சாய்நாத்  கோவிந்தன் அவர்களுக்கு நன்றிகள் பல.   

லிங்கை கிளிக் செய்தால் குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

எண் குறிக்கப்பட்ட கட்டத்தில் கிளிக் செய்தால் குறிப்பு தெரிய வரும். அந்தக் கட்டங்களில் சரியான எழுத்துக்களை  கொடுக்கப்பட்டுள்ள கீ போர்ட்  மூலமே  நிரப்பவேண்டும். 

உதாரணமாக முதல் குறிப்பு:

 இடமிருந்து வலம்: 

1 தியாகவிடங்கரின் புதல்வி, படகோட்டி முருகய்யனின் தங்கை (5)

இதற்கான விடை பூங்குழலி . அதை தட்டச்சு செய்ய கட்டத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விசைப்பலகையை உபயோகிக்கவேண்டும். பூ அடிக்க ‘ப’ அடித்தபிறகு ‘ஊ’ அடிக்கவேண்டும். அதேபோல் ‘ங்’ அடிக்க ‘ங’ மற்றும் புள்ளி ‘.’ அடிக்கவேண்டும். தவறாக அடித்தால் திருத்திக் கொள்ளவும் முடியும். 

Click this link to participate in  Kuvikam Crossword puzzle .

http://beta.puthirmayam.com/crossword/A9E90F2AAA?embed=1

 

இது  சாம்பிள் மட்டுமே. இதில் நிரப்ப இயலாது.