ஆசீவகம்
Aseevagam | ஆசீவகம் | Ajivika | What is Aseevagam? Explained | Aseevagam  History - Documentary - YouTube
நம்மில் பலர் அறியாத அழிந்து ஒழிந்து போன இந்து மதம் ஆசீவகம்.
வைதீக, சமண, பௌத்த மதங்களைப் போலவே ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இம் மதத்தை தோற்றுவித்தவர் மஸ்கரி புத்திரர் அல்லது மக்கலி புத்த என அழைக்கப் பட்டார்.
‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக் காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒரு கூட்டத்தாருக்குப் பெயர் என்றும், அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்க்கு மக்கலி புத்திரர் என்ற பெயர் என்றும் கூறுவர்.
மக்கலி, மகாவீரர்,கௌதம புத்தர் மூவரும் சம காலத்தவர். மக்கலி கி. மு. 500 ம் ஆண்டு வாக்கில் மறைந்தார். இவர் மறைந்த 16 ஆண்டுகளுக்குப் பின் மகாவீரர் மறைந்தார். அதன் பின் சில ஆண்டுகளில் கௌதம புத்தரும் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர் என்ற பெயரே அவர்களை இழிவாக கருதியவர்கள் அவர்களுக்கிட்ட பெயரெனக் கூறுவர். மகாவீரர் ‘ பெண்ணோடு கூடினாலும் துறவி தீங்கொன்றும் செய்தவன் ஆகான் என்பது ஆசீவர்கள் கொள்கை’ என்கிறார்.

சமணர்களில் திகம்பரர் போல ஆடையின்றி திரிந்து இரந்துண்டு வாழ்ந்தனர் ஆசீவகர்கள். ஞான சம்பந்தர் இவர்களையும் விட்டு வைக்காது ‘ ஆசீவகப் பேய்கள்’ எண்கிறார்.

இந்த மூன்று மதத்தினர்க்கும் எப்பொழுதும் சமயப் பகை இருந்து கொண்டே வந்தது.

ஆசீவகம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டில் சமதண்டம் எனும் ஊரில் இம்மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ எனும் நூல் கூறுகிறது. கண்ணகியின் தந்தை மாநாய்கன் , கோவலனும் கண்ணகியும் உயிர் நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது செல்வமனைத்தையும் தானம் செய்து விட்டு ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவு பூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

கி. பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஆசிவகர்கள் பற்றிய சரித்திரம் ஏதுமில்லை. இருப்பினும் 13 ம் நூற்றாண்டு வரை ஆசீவகர்கள் பேசப் பட்டு வந்தனர்.

ஆசிவர்களைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டும் ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஆடை உடுக்காது, குளிக்காது சுற்றித் திரிந்த சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆசிவரகர்களை தவறாக அந்தக் காலத்திலேயே கருதியது உண்டு. இவர்கள் கொள்கைகளால் மாறுபட்டனர். மண்ணில் பிறந்த அனைவர்க்கும் விதிக்கப் பட்டது ஒரே அளவிலான பிறவிகள். எவ்வளவு முட்டி மோதினாலும் அனைவரும் அத்துனை பிறவிகளையும் எடுத்த பின்னரே பிறவா நிலையையை அடைய முடியும் என்பது அவர்களது கொள்கை. எனவே எப்படியெல்லாமோ வாழ்ந்து விரைவில் அழியவும் தொடங்கினார்கள்.

கடந்த சில பகுதிகளில் நம் நாட்டில் குறிப்பாக வேங்கடம் முதல் குமரி வரையிலான தமிழ் நாட்டில் வைதிகம், சமணம் , பௌத்தம் ஆகிய மதங்கள் நுழைந்து நம்மை எவ்வாறு ஆட்டி வைத்தன என்று சுருக்கமாக பார்த்தோம்.

நாம் புத்திசாலிகள் மேலே கூறிய மதங்களில் இருந்து நல்லவைகளை எடுத்துக் கொண்டு சைவ, வைணவர்களாக அடையாளம் காட்டினோம். சிறிய சண்டைகள் ஆங்காங்கே சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் தோன்றினாலும் மொத்தத்தில் ஒற்றுமை எங்கும் காணப்பட்டது. காரணம் நம் உணர்வில் கலந்த சகிப்புத்தன்மை .
அத்தன்மையே  பின்னர் வந்த முகமதிய, கிறித்துவ மதத்தினரையும் சகோதரர்களாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
இருப்பினும் அசோக சக்கரவர்த்தியால் இமயம் முதல் பாரதம் மட்டுமல்லாது கடல் கடந்து இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளில் சுலபமாக நுழைந்து பௌத்த மதத்தை பரப்ப முடிந்தது. ஆனால் வேங்கடம் தாண்டி தெற்கே தமிழ் நாட்டிற்குள் நுழைய முடிய வில்லை.
அதுபோல நினைத்த இடத்தில் தன் சாம் ராஜ்யத்தை பரப்ப முடிந்த ஔரங்க சீப் தமிழ்நாட்டில் கால் பதிக்க தடுமாற வேண்டி வந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை கண்டோம்.
எனவே சமய சண்டை சச்சரவுகளால் நாம் பெரும் பாதிப்படைய வில்லை.

பொதுவாக மேம்போக்காக படித்து மேம்போக்காகவே ஒரு சில கட்டுரைகள் எழுதிய நான் சமயம் பற்றிய கட்டுரைகள் எழுத சற்று மெனக்கட வேண்டி வந்தது. சில புத்தகங்களை தேடிப் படித்தேன். இது போன்று படிக்கும் வாய்ப்புகளுக்காக சற்று சீரியஸாக எழுதினாலும் தவறில்லை என்று எண்ணுகிறேன்.