(கோபர்கள் பிருந்தவனத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
ஒரு சரத் காலத்து அந்தி மாலைப் பொழுது …..)
சந்திரன் ஒளியும், கண்ணன் குழலொலியும்
முழுமதி வானில் தோன்றி
மொய்நகை முறுவல் சிந்தும்;
செழுமலர் இதழ்வி ரிக்கும்
தெளிபுனல் பொய்கை அல்லி;
தழுவிய மாலைத் தென்றல்
தளிர்நடை தவழம்; கண்ணன்
குழலிசை தொலைவில் கேட்கும்.
கூதிரும் வருமே மாதோ!
( கூதிர்- சரத் காலம்/ ஐப்பசி- கார்த்திகை)

குழலிசை கேட்ட ஆய்ச்சியர் நிலை
கிளரொலிக் குழலின் ஓசை
கேட்டவர் தமைம றந்தார்.
தளர்நிலை அடைந்தார், செய்யும்
தம்தொழில் அவைது றந்தார் .
உளங்களும் வெண்ணெய் போல
உருகவே ஊன்க ரைந்தார்
வளரிசை வந்த திக்கில்
மயங்கியே மிகவி ரைந்தார்.
காய்ச்சிய பால்ம றந்தார்
கன்றொடு பசும றந்தார்
பீய்ச்சிய மடியின் பாலைப்
பிடித்திடும் கலன்ம றந்தார்
பாய்ச்சிய இசையின் வெள்ளம்
படுசெவி புகுந்த போது
ஆய்ச்சியர் பணிம றந்தார்
அவனிசை நனிக லந்தார்!
நதிக்கரையில் கண்ணன்
நதிக்கரை மணலில் கண்ணன்
நாரைபோல் ஒருகால் கீழே
மிதிக்கவும் மற்றோர் காலை
மேவிமேல் மடித்து வைத்துக்
குதிக்குமோர் பண்ணின் கூட்டம்
குளிர்குழல் மிழற்றிப் பெய்து
விதிக்குமோர் விதிவி திக்கும்
விந்தையைக் காட்டி நின்றான்
.கோபியர் வேண்டுதல்
ஓடியே வந்தோம் கண்ணா,
உன்குழல் ஓசை கேட்டு
நாடியே வந்தோம், யாவும்
நடுவினில் விட்டு வந்தோம்.
வீடிலை மாடும் இல்லை,
வேறெதும் தேவை இல்லை.
தேடிய யாவும் உன்றன்
திருவருள் ஒன்றே கண்ணா!

கண்ணன்- கோபியர் நடனம்

(இராச லீலை)

ஆற்றின் கரையில் வெண்மணலில்
அழகன் கண்ணன் குழலிசைத்து
நூற்றுக் கணக்கில் கோபியர்கள்
நுடங்கும் இடைகள் தாமசைய
மாற்றி மாற்றி அவர்நடுவில்
மகிழ்ந்து கைகள் கோத்திருந்து
போற்றி வானோர் வாழ்த்திசைக்கப்
பொலிவாய் நடனம் ஆடினனே!

(நுடங்கு - வளையும்)

கலைகள் தளர, அணியவிழக்
காலின் சிலம்பு மணிபுலம்ப,
அலையின் அசைவாய்க் கருமுகில்போல்
அடர்ந்த கூந்தல் மேல்தளும்ப,
உலையின் அழலாய் உளம்வெதும்ப,
ஊனும் உருக, நெக்குருக,
நிலையும் நினைவும் நெகிழ்ந்துருக,
நீல வண்ணன் கையணைந்தார்

(கலை - சேலை)
கவிக்கூற்று

உலகம் பிருந்தா வனமாகும்
உலவும் உயிர்கள் கோபியர்கள்.
அலகில் இறைவன் விளையாடும்
அழகே இந்த ஆட்டமென
இலகும் நூல்கள் இயம்புகின்ற
இயற்கை அறிதல் பேரின்பம்
விலகும் துன்பம்,வினையோடும்,
வீட்டுப் பேறும் உடன்கூடும்!
(தொடரும்)

தில்லை வேந்தன் தீட்டுகின்ற
தீஞ்சுவைப் பாக்கள் தெவிட்டாவே
எல்லை இல்லா இனிமைதரும் – அவை
இன்சுவை தன்னொடு தனிமைதரும்
நல்லை ஐயா நும்கவிதை
நாளும் நாடுவன் நானுமதை!
LikeLike
கண்ணன்அருளி காட்சி
கொடுத்து பதித்த மற்றுமொரு
மயில்பீலி
LikeLike
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட கண்ணன் அருளிருக்க நமக்கெள்ள குறை இங்கு அருமை பிருந்தாவனம் சென்று வந்த மனநிறைவு
LikeLike
Very nice nataraj .bear with delayed response
LikeLike