இறுதியாக இம்மாதக் கதையாக எனது கணிப்பு

தலைப்பு ‘கதை’                 கதாசிரியர் ஆத்மார்த்தி.

 (வாசக சாலை இணைய இதழ் – ஜூலை 04)


சிறுகதைகள் வாசிப்பது பள்ளி நாட்களிலிருந்தே பழக்கம் என்றாலும் ஒருசேர இவ்வளவு எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கதைகள் குறித்த ரசனையில் இன்னொரு பரிமானம் சேர்த்தது.

 விமர்சனப் பார்வையாக இல்லாமல், ஒரு வாசகப் பார்வையில் படிக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். இருப்பினும் மனதிற்கு நெருக்கமான கதையொன்றைக் கடந்துபோய்விட்டேன்,  கதையம்சம் இல்லாததால்.

கதை சொல்லும்பாணி

 சுஜாதா குறிப்பிடும் ‘தள்ளி எடு’, கதை என்றால் அதில் ஒரு நீதி இருக்கவேண்டும், இறுதி வரிகள் ஒரு ட்விஸ்ட் அல்லது  இந்தக் கதை ஏன் என்ற கேள்விக்கு பதிலாக இருக்கவேண்டும், போன்ற எண்ணங்கள் தெரிகின்றன. படிக்குப்பாதி கதைகள் இவற்றுக்கு விதிவிலக்கு  என்றும் சொல்லலாம்.

சில கதைகள் சொல்லவரும் ‘சஸ்பென்ஸ்’ கதையோட்டத்திலேயே ஊகித்துவிட்டேன்.

கதைகளில் தென்படும் சில விஷயங்கள்

கதையினூடே ஊர் பற்றிய வர்ணனைகள் (தப்புக்கணக்கு – எஸ்ஸார்ஸி – தினமணி கதிர்),

சொந்தங்களின் பாத்திர வர்ணனைகள் (சம்பத்பெரியப்பா -கார்த்திக் பிரகாசம் – வாசகசாலை; அத்திம்பேர்வருகை -மாலதி சந்திரசேகரன்- தினமணி கதிர்)

விளிம்பு நிலை மனிதர்கள் (அவள்-சீராளன் ஜெயந்தன்- குமுதம், வேதனை – உஷாதீபன்- திண்ணை)

கிராமப்புற வாழ்வும் வர்ணனைகளும் ( உரைந்தகாலம்-துரை அறிவழகன்-விகடன்)

சாதி மற்றும் சமூகப் பிரச்சினைகள் (பேச்சாயி, பிறைமதி குப்புசாமி- விகடன், குடிசைக்குள் வெளிச்சம்’        கார்த்தி டாவின்சி- உயிரெழுத்து )

ஒரு சொலவடையை ஒட்டி சொல்லப்படும் கதை (உங்க வீட்ல தங்க விளைய- கண். சதாசிவம்- சொல்வனம்)

மாய எதார்த்தம் (பூர்வ உத்தராங்கம், இரா முருகன்)

விஞ்ஞானம் (வானிலிருந்து பூமி-பானுமதி-குவிகம்,)

இனி குறும்பட்டியல்

1. அன்புள்ள மான்விழி-விஜய நிலா -குங்குமம்

                       உளவியல் ஆலோசகர், அவரிடம் யோசனை கேட்பவர் இடையே மின்னஞ்சல் பரிமாற்றம். இதில்                 நவீன பேசுபொருள் chatGPT இணைத்திருப்பது ஒரு ஆச்சரியம்

2. ம்ம்க்கும்-கவிதைக்காரன் இளங்கோ -வாசகசாலை

                  சினிமா எடுக்கப்படும் பின்னணிகொண்ட கதை. உபதலைப்புகள் எல்லாவற்றிலும்  புறாக்கள் வருவது  சிறப்பு. குறிப்பிடத்தக்க உத்தியில் ரசிக்கத்தக்க கதை

3. பெரிய ஸார்-ஸிந்துஜா- சொல்வனம்

                   பள்ளி அட்மிஷன், கலெக்டர் சிபாரிசில் இடம் கிடைப்பது, அதற்கு நேர்மாறாக தகுதி அடிப்படையில் இடம் கிடப்பது, கடைசியில் ஒரு ‘ட்விஸ்ட்’

4. தண்டவாளக் கரும்பு-சுரேஷ் மான்யா-விகடன்

                   ஒரு சிறுநகரத்தில் வசிக்கும் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும்போது கரும்பு விற்கும் சிறுவன், அவன் பார்க்கும் தொழிற்சாலை- பயணிகளுக்கு பழம் விற்றுக்கொண்டிருந்தபோது விபத்தில் இறந்த தந்தையின் நினைப்பு என்று கதை செல்கிறது.

 

இறுதியாக இம்மாதக் கதையாக எனது கணிப்பு

தலைப்பு ‘கதை’                 கதாசிரியர் ஆத்மார்த்தி.

 (வாசக சாலை இணைய இதழ் – ஜூலை 04)

                    மதுவின் தாக்கத்தில் தனது கதையினைச் சொல்லும் ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். இடைஇடையே ஆழ்ந்து வாசிக்கவைக்கும் வரிகள். இயல்பான நடை மற்றும் வர்ணனைகள். கதையோட்டத்தில் சொல்லப்படாத பரிமானம் கடைசி சிலவரிகளில் தெரிவது இதன் சிறப்பு.  

வாய்ப்பிற்கு கோடானுகோடி நன்றி, குவிகத்திற்கு….      எஸ்.ஜெ. வசுமதி