ஒருவரல்ல இருவரல்ல நம்மக்கள் பல்லாயிரம்
பறங்கியரின் பிடியினின்று நம்நாட்டை மீட்டெடுக்க
ஓரினமாய் ஓர்குலமாய் ஜாதிமத பேதமின்றி
விடுதலையே லட்சியமாய் களமிறங்கி வென்றனரே!
நீர்வளமும் நிலவளமும் பொருள்வளமும் பெருகிடவே
பாரதமும் பாரினிலே முதலாக நின்றிடவே
ஒருமித்து நம்மக்கள் சுதந்திரமாய் வாழ்ந்திடவே
தம்வாழ்க்கை துச்சமென தம்முயிரைத் தந்தனரே!
அன்பதுவும் அரவணைப்பும் சொல்வாக்கும் நாணயமும்
தியாகியவர் கனாக்கண்ட நாட்டினது ஆதாரம்
இன்சொல்லும் பணிவதுவும் பொதுநலப் பாங்குடனே
ஒருமித்து வாழ்வதுவே அந்நாட்டின் வாழ்க்கைமுறை
வன்முறையோ அழுக்காறோ தீதுறு எண்ணங்களோ
இல்லாமை தள்ளாமை அந்நாட்டில் எங்குமிலை
பொன்மாரி பொழிந்திடவே வளங்களும் பெருகிடவே
அமைதியான வாழ்க்கையே அந்நாட்டு மக்கள்நிலை!
முன்னோர்கள் கனாக்கண்ட நம்பாரத நாடெங்கே
குழப்பங்கள் நிறைந்துள்ள இன்றைய நாடெங்கே
அன்னார்கள் அடிபட்ட கொடுமைகள் துயரங்கள்
ஓர்நிமிடம் மனதிருத்தி சிந்தித்துப் பார்ப்போமா?
கனாக்கண்ட நாடுபோல் நம்நாட்டை மாற்றிடவே
ஓர்முகமாய் முயற்சிநாம் செய்வதுதான் எப்போது?
நம்நாட்டை உலகத்தின் சொர்க்கபுரி யாக்கிடவே
வாருங்கள் தோழர்களே கிளம்புவோம் இப்போது!

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:

ஆடித் தள்ளுபடி…!

அந்தக் கடைக்காரர் கிட்டே அந்தக் கஸ்டமர் என்ன தகராறு பண்ணிட்டிருக்கார்’
‘அந்தக் கடைக்காரர், ‘எங்கள் கடையில் பொருள் வாங்கினால் ஆடித் தள்ளுபடி போக, அதுக்கு மேலே முந்நூறு ரூபாய் கிஃப்ட் வவுச்சரும் கொடுக்கப் படும்’னு விளம்பரம் கொடுத்திருந்தார். அந்தக் கஸ்டமர் ஆடித் தள்ளுபடி போக இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு பொருள்
வாங்கிட்டு, விளம்பரப்படுத்தியபடி முந்நூறு ரூபாய் கிஃப்ட் வவுச்சரும் கொடுங்கன்னு’ தகராறு பண்ணிட்டிருக்கார். அந்தக் கடைக்காரர் என்ன செய்வதுன்னு புரியாம முழிச்சிட்டிருக்கார்’
முன்னெச்சரிக்கை
‘அவர் ஒரு ஜோக் சொல்றேன்னுதான்னே சொன்னார்.. இன்னும் ஜோக்கே
சொல்லலியே.. அதுக்குள்ளே அவர் நண்பர் ஏன் இப்படி விழுந்து விழுந்து
சிரிக்கிறார்..!?’
‘ஓ.. அதுவா… அவர் ஜோக் சொன்னப்புறம் சிரிப்பு வரலேன்னா…? அதுதான் எதற்கும் இருக்கட்டுமேன்னு முதல்லேயே சிரித்து வெச்சுட்டார்.. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்..!’

ஹோம் வர்க்..!
‘ஏன்யா.. அவங்க பசங்களுக்கு கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகலியே.. சம்மந்திகள் இப்படி ஒருத்தரை ஒருத்தர் சத்தம் போட்டிட்டிருக்காங்க..?’
‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கறே..? கல்யாணத்துக்கு முன்னாலே ‘பையன் என்ன பண்ணறார்னு’ பெண்ணுடைய அப்பா கேட்டிருக்காரு.. பையன் ‘ஹோம் வர்க்’னு சொல்லியிருக்கான்… ஓ பையன் ஐ.டி கம்பனீலே வர்க் பண்ணறார்.. ‘வர்க் ஃப்ரம் ஹோம் ‘ பண்ணிட்டிருக்கார்னு நினச்சு பெண்ணையும் கட்டிக் கொடுத்துட்டாங்க… இப்பத்தான் தெரியுது .. பையனுக்கு வேலை வெட்டி ஒண்ணுமில்லே… வீட்டு வேலை செஞ்சிட்டு சும்மா இருக்கார்னு..!’

Enjoyed the poem by Kovai Shankar! Nicely done
LikeLike