The Times of Indiaமாயவரத்தில் BA முடித்து விட்டு, அண்ணாமலை கல்லூரியில்  எம் ஏ படிக்க ரயில் பயணம் – நண்பர்களுடன பாடல் புனைதல், இசை அமைத்தல், பாடுதல் என இரயில் பயணத்துடன் வளர்ந்தது அவரின் இசையும், கவிதைத் திறமையும்.

கவிஞர் மட்டுமல்லாமல், இளையராஜா, எம்.எஸ்,வி ஆகியோர் கோலோச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தனக்கான முத்திரையை இசையில் பதித்த இசையமைப்பாளரும் கூட.

1980ஆம் ஆண்டு எந்தவித ஆரவாரங்கள் இல்லாமல், ஒரு படம்  வந்தது. கதை, பாடல்கள் என பட்டையைக் கிளப்பிய படம் .

ஒரு தலை ராகம். அந்தப் படம் தந்தவர் தான் டி ராஜேந்தர்.

அவரது இசை மட்டுமல்ல பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை. காதலை காதலுடன் கலந்துறவாடிய வரிகள் அவை.

பாடல்களில் வார்த்தையை வைத்து எழுதுவதைவிட வாழ்க்கையை வைத்து எழுத விரும்புகிறேன் என்பார் ராஜேந்தர.

வாசமில்லா மலரிது – வசந்தத்தைத் தேடுது

வைகை இல்லா மதுரை இது – மீனாக்ஷியைத் தேடுது, 

என்ற வரிகளை கண்ணதாசன் ரசித்துப் பாராட்டினாராம்.

ஒரு தலை ராகத்தைத் தொடர்ந்து, வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், உயிருள்ளவரை உஷா, சம்சார சங்கீதம், உறவைக் காத்த கிளி, மைதிலி என்னைக் காதலீ, என் தங்கை கல்யாணி  என 10 வருடங்களுக்குப் பல படங்கள் – பாடல்கள.

அவரின் எளிய வசனம் (வாடா மச்சி வாழைக்காய் பஜ்ஜி என்றும், தங்கை தங்கை என்பான் – அப்புறம் தங்க, தங்க என்றும் எழுதுவது இவரின் முத்திரை ஆனது)  அதேபோல, ஒரு டப்பாங்குத்து பாடல் என எல்லாப் படங்களிலும் உண்டு.

அவரே கூறுவார் – என்னை டன்டனக்க கவிஞன் என்பார்கள். ஆனால், உணமையில், ரசிகர்கள் என்னை  டன் கணக்காக ரசிககிறார்கள் என்பார்.

80 களில், காதலின் வெற்றி தோல்வி அறியாமல் காதல் உணர்வுகளில் சிக்கி வெம்பித் தவித்த இளைஞர்களின் மனதிற்கு ஒத்தடம் கொடுத்தவர் என்றே கூறுவார்கள்.

\எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

உன்னை பாராமலே மனம் தூங்காதடி

வலம்புரி சங்கை கூட உன் கழுத்து

மிஞ்சுதடி வஞ்சி மலரே…. ஓ…

 

நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு

சொல்லுதடி வைர சிலையே..

பொய்கை தாமரையில்

புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா….

போதை ஏற்றி கொள்ள

தாளம் போடுதடி அம்மம்மா….

 

இன்னொரு பாடலில், காமமும் கவிதையும் இணையும் புள்ளிகள் என எழுதிய,

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட

புதிய தம்புராவை மீட்டி சென்றாய்

கலைநிலா மேனியிலே

சுளை பலா சுவையை கண்டேன்

அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி

மதிதன்னில் கவி சேர்க்குது எந்தன்

மதிதன்னில் கவி சேர்க்குது

 

சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

வேல்போன்ற விழிகள் என் நெஞ்சில் பாய

காயம் வரவில்லை மோகம் பிறக்குது மாயம்தான் என்ன, 

என்ற கற்பனை அபாரம் அல்லவா.

 

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ?

மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ

ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா?

 

தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

 

சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

என்ற வரிகள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.

‘ட்ரம்ஸ்’ வாத்தியத்திற்கு அதிகம் முன்னிலை கொடுப்பார். ஆரம்ப காலத்தில் நிறைய வாய்ப்புத் தந்ததாக சிவமணி கூறி இருந்தார்

பூக்களத்தான் பறிக்காதீங்க

காதலத்தான் முறிக்காதீங்க

கண்களுந்தான் பாத்துக்கொண்டா

காதலங்கே ஊற்றெடுக்கும்

 

கூட்டுக்குள் பறவை வச்சான்

வானத்தில் நிலவ வச்சான்

மலருக்குள் தேன வச்சான்

மதுவுக்குள் போதை வச்சான்

மனசுக்குள் காதல் வச்சான்

 

இயற்கையவன் படைக்கையிலே

இடையில் இவன் பிரிப்பதென்ன

இள மனசு தவிக்கையிலே

இரக்கமற்று தடுப்பதென்ன,  என்ற வரிகள் மிக யதார்த்தம்.

 

அட உண்கொப்பன் மகனே , கூடையிலே கருவாடு கொண்டையிலே பூக்காடு என பல குத்துப் பாடல்களுக்கும் இவர் பிரபலம்.

ஆனாலும், பல இனிமையான பாடல்கள் இவர் தந்ததுண்டு.

இது குழந்தை பாடும் தாலாட்டு – இது இரவு நேர பூபாளம்,

இது மேற்கில் தோன்றும் உதயம் – இது நதியில்லாத ஓடம்,

 

வாசமில்லா மலரிது, வசந்ததத்தைத் தேடுது 

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை!

நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துகில்லை இதுவரை ரோஜா

கடவுள் வாழும் கோவிலிலே கற்பூரம தீபம் , களை இழந்த மாடத்திலே முகாரி ராகம்

தங்க நிலவே உன்னை உருக்கி, தங்கச்சிக்கு தங்க நகை செய்திடவோ?

சந்தேகப் புயல் அடிச்சா – சந்தோஷப் பூ உதிரும்

வைகைக் கரைக் காற்றே நில்லு  – வஞ்சி தனைப் பார்த்தால் சொல்லு

எனப் பல பாடல்கள்.

இசையில், எம் எஸ் வி தான் ஆஸ்தான குரு என்பார்.   பின்னாள் டிஎம்எஸ் குரலை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஒரு இசையமைப்பாளர். அமைதிக்குப் பெயர்தான் சாந்தி, என் கதை முடியும் நேரமிது, நான் ஒரு ராசி இல்லா ராஜா  போன்று  பாடல்கள் இனிமேல் வராது.

ஒவ்வொரு பாடலுமே இலக்கிய தரமாக இருக்கும். நல்ல பாடல் ஆசிரியர். நல்ல இசை அமைப்பாளர். மேலும் அவரின் வசனங்களும் அந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

 

ஒருதலை ராகம் படத்தில் வரும் முரண்பாடான வரிகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்,

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்.

 

அதேபோல. கிளிஞ்சல்கள் படத்தின் இந்தப் பாடல் இசையும் சரி, வரிகளும் சரி மிக அருமை. ரேவதி ராகத்தில் ஒரு அற்புதமான பாடல்.

 

விழிகள் மேடையாம்

இமைகள் திரைகளாம்

பார்வை நாடகம்

அரங்கில் ஏறலாம்!   ஜூலி ஐ லவ் யு

 

மை தடவும் விழியோரம்

மோகனமாய் தினம் ஆடும்

மயக்கம் தரும்

மன்னவன்னின் திரு உருவம்

 

மன வீணிலே! நாதம் இட்டு

கீதம் ஆக்கி நீந்துகின்ற தலைவா!

இதழ் ஓடையிலே! வார்த்தை என்னும்

பூக்களாகி மிதக்கின்ற பாட்டா!

 

 அடாடா ! அற்புத வரிகள்.

 

அதேபோல,

என் கதை முடியும் நேரம் இது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது

அது இதழ் தனில் பிறந்திட தவிக்கின்றது,   என்ற வாழ்வின் தத்துவ வரிகள் இவருடையது.

 

அரசியலில் ஈடுபட்டு, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஆளும் கட்சியான அண்ணா திமுகவை முறைத்துக் கொண்டார்.  தொடர்ந்து அவரின், படங்களுக்கு பல சோதனைகள் –

மீண்டும் கருணாநிதிஉடன்  உரசல்  – படங்கள் – தடைகள்.  எல்லாவற்றிலும்  மீண்டு வந்தார்

 

அப்போது எழுதியது –

 

புயலும் வலுக்கிறது

கடலும் கொதிக்கிரைது

படகைச் செலுத்துகிறேன் வாராயோ என்று,

 

நிறைவாக, அவரே கூறுவார் –

நான் ஒரு கவிஞன் இல்லை – உள்ளத்தின உந்துதலை, உளறல்களை பாட்டாக எழுதினேன என்று.

எப்படியோ,

ஒருதலை ராகத்தில வாழ்க்கையைத் தொடங்கியவர்,

பத்துதலை ராஜேந்தர்  என திரையில் எல்லாப் பரிமாணங்களையும் தொட்டவர் ஆனார்.

 

மீண்டும் அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி.