அந்த நாலு பேரின் உரையாடல்.
என்ன இன்னும் நம்ம நிதீஷக்காணும். திடீர்னு உயிர் வாழணும்னு ஆசை வந்துடுச்சா?
அப்படி இருக்காது. இப்படி ஒண்ணா சேந்து தற்கொலை செஞ்சுக்கலான்னு சொன்னதே அவன்தானே.
சரிதான், நாம கொஞ்சம் தயங்கிய போது – நாம உயிரோட இருந்து என்ன பயன். நம்ம கிட்டெ காசு இல்லை. நம்மளை யாரும் மதிக்கிறது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எவ்வளவு போராட்டம். அடுத்த வேளை பசிக்குமே எங்கே, என்ன கிடைக்கும்னு தெரியாம எவ்வளவு காலம் தவிக்கிறது. நாமம் வாழ்க்கைதான் ஒரு கவனிப்பும் இல்லாமல் போச்சு. சாவாவது ஒரு பெரிய விஷயமா இருக்கணும்.
ஆமாம் எல்லா பத்திரிகையிலும் முதல் பக்கத்தில நம்ம படத்தோட வரணும்னு சொன்னது அவன்தானே. ஒரே சமயத்துல 5 பேர் கை கோத்துண்டு தற்கொலை பண்ணின்டா அது எவ்வளவு பெரிய செய்தி. ஒரு பரபரப்பான தெரு நடுவில 5 பொணம் வரிசையா கை கோத்துண்டு கிடந்தால், பாக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும். பத்திரிகைக் காரங்க வருவாங்க வித விதமா படம் எடுப்பார்கள் முதல் பக்கத்துல போடுவாங்க. நாளை முழுவதும் எல்லோரும் இதைப் பற்றித்தான் பேசுவாங்க. முகம் மேல இருக்கிற மாதிரி விழ முடியுமான்னு பாக்கணும். அப்படீன்னு எவ்வளவு அழகா சொன்னான். வருவான் கட்டாயம் வருவான்.
அவன் எவ்வளவு யோசிச்சு இந்த முடிவை எடுத்து நம்பளையிம் சம்மதிக்க வெச்சிருக்கான். வருவான். லேட்டா வரத்துக்கு ஏதாவது காரணம் இருக்கும்.
அவன் சொல்லும் வரை நமக்கும் தோணல. பணம் இல்லாம வாழ்வது என்ன வாழ்க்கை. பணம் இருப்பவர்கள் எவ்வளவு சந்தோசமா இருக்காங்க. நினைச்சதை சாப்பிடலாம், பெரீய வீட்டில இருக்கலாம். மெத்தையில படுக்கலாம். கார்ல ஊர் ஊரா சுத்த லாம். ச இந்த பணம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை பணம் மட்டும் இருந்தால் நாம ஏன் Njoy முடிவுக்கு வரப்போரோம் .
அட அவனே வந்துட்டேன். டேய் என்னடா இது பெரிய பொட்டலம். ஏன் இவ்வளவு லேட்.
வழியில ஒரு கல்யாண ஊர்வலம். கல்யாணம் முடிஞ்சு தம்பதியா கார்ல ஊர்வலமா வராங்க. மேள தாளம், பட்டாசு. என்ன உடை அலங்காரம் தெரியுமா? எத்தனை நகை. பிறந்தா அப்படி பிறக்கணும் வாழ்ந்தா அப்படி வாழணும். அப்படி இருந்தா நமக்கு ஏன் இந்த யோசனை வரப்போகுது?
அது சரி இது என்ன பொட்டலம்.
அதுவா அந்த ஊர்வலத்தில் எல்லாரும் வித விதமா ஸ்வீட்டும் பக்ஷணமும் ஒரு வண்டி முழுக்க இருந்தது. கேட்டேன் கொடுத்தாங்க. சாவரதுக்கு முன்னாலே நல்ல ருசியா சாப்பிடலாமேன்னு கொண்டு வந்தேன். சாப்பிடலாமா?
கொண்டா கொண்டா சாப்பிடலாம். அடுத்த ஜென்மத்துலயாவது இந்த மாதிரி பணக்காரணா பொறந்து எந்த கவலையும் இல்லாம இருப்போம்.
ரொம்ப ருசியா இருக்கு. அட இது என்ன கீழே ஒரே சத்தம் இருக்கு? வாங்க எட்டிப் பாக்கலாம்.
அட அந்த ஊர்வலம் இந்த தெருவுக்கு த்தான் வருது. எவ்வளவு தோராயமாக இருக்கு பாத்தீங்களா. மேள தாளம், வாண வேடிக்கை. எல்லாம் பணம். பணத்தால கிடைக்கிற சந்தோஷம்.
டேய் அந்த கார் நம்ம இந்த கட்டடத்துக் கிட்ட தான் நிக்குது.
ஆமாம் அந்த காரில் இருந்து மணப் பெண்ணும், மணமகனும் இந்த கட்டடத்துக்கள்ளேதான் வராங்க.
ஆமாம் வரும்போதே பாத்தேன் 4 வது மாடியில ஒரு வீட்டிலே கலர் கலரா கோலம் போட்டு விளக்கெல்லாம் ஏத்தி வெச்சுருந்தாங்க. இதுக்காகத் தானா?
அது ஒரு பெரிய வீடு அகப்பட்ட அறைகள் பள பளன்னு இருந்தது.
இன்னிக்கு ரொம்ப ஜாலியா இருப்பாங்க. கவலையே இல்லாத வாழ்க்கை.
பேசிக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.
இந்த ஸ்வீட் சாப்பிடு,
நீ இந்த வடையை சாப்பிட்டுப்பார்.
அதோபார் குழாய் இருக்கு கையை அலம்பிண்டு அப்படியே முகமும் கழுவுக்கொண்டு வருகிறேன். நாளைக்கு பேப்பரில் வரும் போட்டோவில் முகம் கொஞ்சம் பளிச்சுனு இருக்கணும் இல்லையா?
ஒரே சிரிப்பு..
நானும் வரேன்
கொஞ்ச நேரம் கழித்து குதிக்கலாம்.
அட என்ன இது கீழ ஏதோ சத்தம் கேட்கிறதே. எட்டிப் பாக்கலாம்.
டேய் இங்க வந்து பாரேன். என்ன இது நம்பவே முடியல்ல. அடப்பாவமே. ஏன் இப்படி.
ஏன் என்ன ஆச்சு.
அடடா இது இப்போ கல்யாணமாகி உள்ளே போன தம்பதிகள் தானே. என்ன ஆச்சு? இவங்க ஏன் 4வது மாடியிலே இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதே அந்த விலை உயர்ந்த உடைகளோட அப்படியே குதிச்சிருக்காங்க.
பாவமே இவ்வளவு வசதியானவங்களுக்கு என்ன பிரச்சினை?
ஆமாம் இவங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் இப்படி தற்கொலை செஞ்சுக்கணும். கடவுளே. பாவம்பா இந்த இளம் மணமக்கள்
அதுசரி இப்ப நாம தற்கொலை பண்ணிக்தறதும் வேஸ்ட் தான். வசதியான, பணக்காரங்களான இவங்க தற்கொலை தான் நாளைக்கு எல்லா பேப்பர்லயும் வரும். இவங்க போட்டோ தான் போடுவாங்க. நம்ம சாவுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. நம்ம படமும் வராது.
இப்ப என்ன பண்ணலாம்? இன்னும் ஒரு வாரம் கழிச்சு பண்ணிக்கலாமா?
நீ சொல்றதுதான் சரி. நாம வேற நாள், வேற இடம் பாக்கலாம்.
அதெல்லாம் சரி. இவங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கணும்? என்ன பிரச்சனை? எவ்வளவு பணம், எவ்வளவு வசதி. ஏன் இப்படி பண்ணனும்?
என்ன கஷ்டமா இருக்கும்? பணம் இருந்தா போதும் பிரச்சனையே இருக்காது. நம்ம கிட்டெ பணம் இல்லாததுதான் பிரச்சனை. வேர என்ன பிரச்சனை இருக்க முடியும்.
ஆமாம். கொஞ்ச நாள் முன்னால பிரபல நடிகை ‘சஞ்சனா’ கூட தற்கொலை செஞ்சுகிட்டாங்க. எவ்வளவு வசதி, பணம், உடை, சாப்பாடு, பெரிய வீடு. ஆனாலும் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. என்ன காரணம் இருக்கும்.
நீ கேக்கறதும் சரிதான். பணம் இல்லை என்பதைத் தவிர வேறு கஷ்டங்களும், வேர காரணங்களும் இருக்கா?
அது என்னன்னே நமக்கு தெரியல்லயே? அப்போ பணம், வசதி இல்லை என்பதைத் தவிர வேறு ஏதேதோ காரணங்களும் இருக்குபோல.
அந்த கஷ்டமெல்லாம் நமக்கு இல்லையே.
ஆமாம் பணம் இல்லை என்கிற ஒரு கஷ்டத்தைத் தவிர வேற எந்த கஷ்டமும் நமக்கு இல்லையே.
சரிதான். அப்போ இந்த ஒரு கஷ்டத்துக்காக ஏன் சாகணும். நமக்கு வேற கஷ்டமெல்லாம் இல்லை.
இல்லை மட்டும் இல்லை அது என்னன்னுகூட நமக்கு தெரியல்லயே.
ஆமால்ல அப்ப நாம ஏன் சாகணும். வேர எந்த கஷ்டமும் நமக்கு இல்லையே.
ரொம்ப சரி. நாம நம்ம இடத்துக்குப் திரும்ப வரவேண்டாம்.
அதுசரி நாளைக்கு எங்கே சாப்பாடு.
இந்த காளி கோவிலில் அன்னதானமாம். சாப்பாடு நல்லா இருக்கும் என்னடா இது அதுக்கு இல்லாம சாகப்போறோமேன்னு நினைச்சேன். பரவாயில்லை. நீங்களும் வருவீங்களா?
கல கல என்று சிரித்து விட்டு கலைகிறார்கள்.
அந்த மாடி, தெரு, கல்யாணம், ஊர்வலம், அந்த அடுக்குமாடி வீடு, மேலே இருந்து கீழே தெரியும் (ariel view) நிகழ்வுகள் எல்லாம் ரேடியோ நாடகத்திலேயே கண்முன் தெரிந்தது.
எல்லாவற்றையும் விட முடிவு. எவ்வளவு பெரிய உண்மை. எத்தனை விதமான பிரச்சனைகள் இருக்கு அதெல்லாம் நமக்கும் இல்லையே.
