ஒவ்வொரு வருடமும் வருட ஆரம்பத்தில் நடைபெறும் குவிகம் நண்பர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்ற வருட முடிவில் (31.12.23) நடை பெற்றது.

2024 ஜனவரி முதல் குவிகம் மின்னிதழில் சில புதுமையான மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று யோசிக்கிறோம் !

உங்கள் ஆலோசனைகளத்  தெரிவியுங்கள் என்று போன இதழில் ஒரு அறிவிப்பு செய்திருந்தோம்.  

அதற்கு சில கருத்துக்கள் வந்துள்ளன. அவற்றுடன் நாம் திட்டமிட்டு வரும் சில செயல்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். அவற்றை ஒவ்வொன்றாகச் செயல் படுத்துவோம்.

1. புத்தகங்கள் பற்றி நிறைய எழுதவேண்டும் ( இந்த இதழில் அதை ஆரம்பித்துவிட்டோம்.   இந்த ஜனவரி இதழ் கிட்டத்தட்ட புத்தகச் சிறப்பிதழ். )

2. குவிகம் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் மாதாமாதம் வரவேண்டும். (அதை இம்மாதம் முதல்  தயார் செய்து அனுப்ப உத்தேசித்துள்ளோம்)

2. SHORT FORM OF BOOKS என்று ஓர் உலகாளாவிய அமைப்பு உள்ளது. அதைப் போல தமிழிலும் புத்தகச் சுருக்கங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுளோம்.

3. ஆடியோ புத்தகங்கள் கொண்டு வரத்திட்டம் உள்ளது.

4.  ஒலிச்சித்திரத்தில் புத்தக விமர்சனம்

5. மாணவர்களுக்கான குவிகம் சிறப்பிதழ் வரவேண்டும்.

6. கட்டுரைப் போட்டிகள் வைக்கவேண்டும்.

7. குறுக்கெழுத்து மாதிரி இன்னும் நிறைய சொல் விளையாட்டுக்கள் அறிமுகப் படுத்தவேண்டும்.

8. துணுக்குகள் – TIDBITS நிறைய வரவேண்டும்

9. உலகின் சிறந்த கதைகளின்  மொழிபெயர்ப்புகள் குவிகத்தில் வரவேண்டும்.

10. இலக்கியச்  செய்திச் சுருள் என்று இலக்கியம் பற்றிய நிகழ்வுகள் பற்றி எழுதவேண்டும்.

11. புத்தக விமர்சனங்கள் வரவேண்டும்.

12. புத்தகம் படித்தல் அது பற்றிய கலந்துரையாடல் நிகழத்தவேண்டும்.

13. நகைச்சுவைச் சிறப்பிதழ் கொண்டுவரவேண்டும்.

14. சுஜாதா எழுதியது போல ‘ஏன் எப்படி எதற்கு’ போன்ற புதிய செய்திகள் வரவேண்டும்.

15.  ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேண்டும். 

 

அளவளாவல்/நேர்முகக் கூட்டம் :

  1. ஏற்கனவே செய்த காந்தி நாடகம்  மாதிரி ஜுமில் நாடகங்கள் நடிக்கப்படவேண்டும்,
  2. தற்போது தொலைக்காட்சியில் வருவது போல panel discussions நிகழ்த்தலாம்.
  3. ஒவ்வொரு ஊரைப் பற்றிய (உ. ம் – மதுரை, தென்காசி, உதகை) சிறப்புச் செய்திகள்  நிகழ்த்தலாம்.
  4. நகைச்சுவை நிகழ்வுகள் இடம்பெறவேண்டும்.
  5. இலக்கியத்துடன்,   மற்ற துறைகளில் சிறந்து விளங்குவோரின் உரைகளும் (டாக்டர், வக்கீல், போலீஸ் அதிகாரி)  நிகழ்த்தப்படவேண்டும்.
  6. குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு பற்றிய உரை மாதாமாதம் நடைபெறவேண்டும்.
  7.  குவிகம் புத்தகங்கள் மற்றும் குவிகம் நண்பர்களின் மற்ற பதிப்பக வெளியீடு பற்றி அறிமுகக் கூட்டங்கள் நடத்தலாம். 

குறும்புதினம்:

1. குறும் புதின இதழ் படங்களுடன் வரவேண்டும்.

2.   மொழிபெயர்ப்பு, நாவலின் சுருக்கம் ஆகியவை வெளிவரவேண்டும்.குவிகம் நண்பர்கள்  கதைகள் பற்றிய தகவல் வழங்கலாம். முடிந்தால் கதைகளின் குறிப்புகள் /pdf அனுப்பலாம். 

3. சிலர் குறும் புதினம் இதழில் சிறுகதை, கவிதை, துணுக்குகள் வெளியிடலாம் என்றனர். இன்னும் சிலர் அதனை மறுத்து குறும் புதின இதழில் கூறும் புதினங்கள் மட்டும் வெளிவருவதுதான் சரி என்று வாதிட்டனர்.

4. நகைச்சுவைக் கதைகள் வரவேண்டும் .

5.  குவிகம் குறும் புதின இதழில்  கடந்த 4 மாதங்களாக விளம்பரம் அட்டையின் உள்ளே வருவதைக் கவனித்திருப்பீர்கள். விளம்பரக் கட்டணம் 1500 ரூபாய். அதிகரித்துவரும் அச்சு, தபால்  மற்றும் மற்றைய செலவுகளுக்காக நண்பர்கள் வழங்கும் அன்புத் தொகையே இந்த விளம்பரங்கள்.

5.  இந்த ஆண்டு கூறும் புதினப்போட்டிகக்கான பரிசுத் தொகையை 100 சதவீதம் அதிகரித்திரிக்கிறோம். 5000, 3000, 2000 என்று இருந்தது 10000, 6000, 4000 என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. நண்பர் சந்திரசேகர் மற்றும் டாக்டர் முருகு சுந்தரம் இந்த ஆண்டுக்கான  பரிசுகளைத்  தர முன்வந்திருக்கிறார்கள்.

 குவிகம் குறும் புதின இதழிற்கான அடுத்த ஆண்டு சந்தா ஏப்ரலில் துவங்க உள்ளது.   இப்போது 150 பேர் இருக்கிறார்கள். இது 200 ஆக வளரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

குவிகம் ஒலிச்சித்திரம்:

1. நமது இசைபுதிது, சொல்புதிது நண்பர்களின் பாடல்கள் கவிதைகள் இடம்பெறவேண்டும்.

2. வெளிவந்த ம பொ சி  கண்ணதாசன், கலைஞர்  இவர்கள் குரலுடன், உ வே சா, தெ  பொ மீ, ஆறுமுக நாவலர், திருக்குறள் முனுசாமி, அறிஞர் அண்ணா, செம்மங்குடி, அரியக்குடி, செம்பை, காருகுறிச்சி,மதுரை மணி அய்யர், டி கே எஸ் , எம்  ஆர் ராதா, சோ , மனோகர் போன்றோர் குரலும் வரவேண்டும்.  ( நண்பர்கள் இதற்கான ஆடியோ அல்லது யூடியூப் லிங்க் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்)  

 

குவிகம் இலக்கியத்தகவல் வாட்ஸ் ஆப் குழு: 

இதனை குவிகம் நிகழ்வுகள், மற்ற இலக்கிய நிகழ்வுகள் , விமர்சனங்கள் ஆகியவை வருவதற்கான தளமாக மட்டும் இருக்கவேண்டும். கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை இங்கு பதிவிடுவதைத்  தவிர்க்கவேண்டும். 

 

மற்றவை:

1. குவிகம் குறும் படப்போட்டி நடத்தலாம்

2. குவிகம் ஒரு முழு மேடை நாடகத்தை அரங்கேற்றலாம்.

3. குவிகம் தொடர்ந்து நடக்க டிரஸ்ட் போன்ற அமைப்புப் பற்றி யோசிக்கவேண்டும்.

4. இன்னொரு ஆவணப்படம் எடுக்கலாம்.

5. மத்ஸ்யா  உணவக குவிகம் சந்திப்பு போல 3 மாதத்திற்கொருமுறை சந்திப்பு நிகழ்வுகள் நடத்தலாம்.  

 

 

சென்ற ஆண்டு (2023 இல்) குவிகம் அளவளாவலில் பேசியவர்கள்:

பேச்சாளர்

ஸ்ரீதர் நாராயணன்
M D முத்துக்குமார்
வ வே சு கவியரங்கம்
அன்னபூரணி
டாக்டர் தைலாம்பாள்
ஒளிவண்ணன்

மந்திரமூர்த்தி

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
இந்திரநீலன் சுரேஷ் ,இந்திரா ஜவஹர்
பானுமதி பாஸ்கர் கிரிஜா நாகேந்திரபாரதி ராய செல்லப்பா
ஞான வடிவேல்
ஸ்ரீ வாசிரேடி நவின்
கவிதைக்காரன் இளங்கோ
மீ விஸ்வநாதன்
சௌரிராஜன்
கிரிஜா ராகவன்
சதீஷ் சத்யா
ஜெய் சக்திவேல்
ராம குருநாதன்
அன்பாதவன்
வாசுதேவன் பார்த்தசாரதி
கலாவள்ளி அருள்
க வை பழனிசாமி
சாய் அனுஷா

கு வை பாலசுப்பிரமணியன்
தாரிணி கோமல்

ராஜாமணி ஆர்க்கே

வாஸந்தி
வளவ துறையன்
கலா பாலசுந்தரம்
ராய செல்லப்பா சுந்தரராஜன்
சதுரபூஜன்
வேதா கோபாலன்
ஆத்மார்த்தி
பானுமதி

 

இவை தவிர , சிவசங்கரி குவிகம் சிறுகதைத் தேர்வு – 2 நிகழ்வுகள்,  கலந்துரையாடல்கள் –  7, வினாடி வினா -4, நேர்காணல்கள் – 4 ஆகியவை நடைபெற்றன. 

 

மாதாமாதம் நடைபெறும் நேரடி நிகழ்வுகள்: 

புத்தக அறிமுகம்: சுரேஷ் ராஜகோபால்,யாஸ்மின், கிரிஜா பாஸ்கர்

புத்தக அறிமுகம்:சமுத்ரா – கௌரிசங்கர்

பிரபா ராஜன் சிறுகதைப் போட்டி – விழா

குவிகம் சிவசங்கரி சிறுகதைத்தேர்வு பரிசளிப்பு விழா

உதயம் ராம் உரை 

மொழிபெயர்ப்பில் சவால் – அக்களுர் ரவி, குமரி நீலகண்டன், இராய செல்லப்பா
பட்டிமன்றம் : தென்காசி கணேசன், , ஈஸ்வரி, கிருஷ்ணகுமார்,ஞான வடிவேல், சுப்பிரமணியம்

புத்தக அறிமுகம்: எஸ் பி முத்துராமன் , அல்போன்ஸ் ஜெயபாலன், கௌரிசங்கர்

TMS  அவர்களின் நூற்றாண்டு விழா :  TKS கலைவாணன், நல்லி குப்புசாமி, J பாலசுப்பிரமணியன் லேனா தமிழ்வாணன், என் சி மோகன்தாஸ், மதி

 


குறும் புதினம் 2023-24

 

ஏப்ரல் :

  1. Rs 5000 பரிசு பெரும் ஆ ஆனந்தன் அவர்களின் “கோழைகள்”
  2. கமலா முரளி –  “போண்டா வடையா …பாய்காட்டா ?
  3. ராஜாமணி அவர்களின் “எல்லைகளுக்கு அப்பால்”

 மே

  1. ஆயிஷா நடராஜன் எழுதிய ரோஸ்
  2. க. இராஜசேகரன் அவர்கள் எழுதிய “பொலிகாளையும் கன்றுக்குட்டியும்” இரண்டாம் பரிசு
  3. எஸ் வி வேணுகோபாலன் அவர்கள் எழுதிய “இந்திரா”

 ஜூன்

  1. யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள் எழுதிய “சம்யுக்தா” என்ற கதையைத் தமிழில் கௌரி கிருபானந்தன்
  2. சிக. வசந்தலெட்சுமி அவர்கள் எழுதிய “நீ நீயாக இரு”! – மூன்றாம் பரிசு
  3. வசந்தா கோவிந்தராஜன் எழுதிய “தலைமுறைகள்”

 ஜூலை

  1. எஸ்.வெங்கடராமன் அவர்கள் எழுதிய “எனக்கு ஏன் இப்படி?”  
  2. HNராமகிருஷ்ணன்எழுதிய “ஏமாற்றாதே ஏமாறாதே”
  3. செல்லம்ஜரீனாஅவர்கள் எழுதிய “ நிலவொன்று கண்டேன் “

 ஆகஸ்ட்

  1. ஐ கிருத்திகா எழுதிய “மூன்றாவது வழி”
  2. சோ. சுப்புராஜ் எழுதிய “மரணம் என்னும் தூது வந்தது”
  3. ஆன்சிலா ஃபெர்னாண்டோ வழங்கும் ‘தரை இறங்கும் பறவைகள்’.

 செப்டம்பர்

  1. கு பா ராஜகோபாலன் சிவாஜி
  2. யுத்தகாண்டம் – புவனா சந்திரசேகரன்,
  3. முதல் பயணம் – மீ.மணிகண்டன்

 அக்டோபர்

  1. இரண்டுகலர்கோடு – அரவிந்த் சச்சிதானந்தம்
  2. பச்சைப் பெட்டி – யாரோ (ராமமூர்த்தி)
  3. உன்னையன்றியாருமில்லை – ஹரிஹரன்

நவம்பர்

  1. எதிலும் அவள் குரலே” – ஷைலஜா
  2. பெருமாள்சாமி எனும் நான்.. சந்துரு மாணிக்கவாசகம்
  3. துன்பக் கேணி – புதுமைப் பித்தன்

 டிசம்பர்

  1. ஜெய் சீதாராமன்’ அவர்கள் இல் எழுதிய ‘ராஜநட்பு’
  2. சிவகுமார் கே – போஸ்ட்மேன் !
  3. அனுராதா ஜெய் சங்கர் – உயிரில் மலர்ந்த சுடர்கள்’

  

மகா கவியின் மந்திரச் சொற்கள் –

 ஜனவரி 3 இல் 87 வது நிகழ்வு

டிசம்பர்  27 இல் 138 நிகழ்வு

52 வாரங்கள்

பாரதி சுயசரிதை , பாரதி 66, பாரதியின் ஞானப் பாடல்கள்

ஏற்கனவே  நாம் பார்த்தது – பாஞ்சாலில் சபதம், கண்ணன் பாட்டுகள், புதிய ஆத்திசூடி, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை

மகாகவியின் மந்திரச் சொற்கள் வரிசையில் வந்த கருத்துகளைத்  தொகுத்து அச்சு/மின்/ஆடியோ  புத்தகங்களாகக் கொண்டுவரத் திட்டம் ஒன்று உள்ளது.  

வ வே சு வின் மகா கவியின் மந்திரச் சொற்கள் வரிசையில்  எதை – எழுத யார் தயாராக இருக்கிறார்கள் ?

 புத்தக கண்காட்சி

 விருட்சம் அழகியசிங்கருடன் இணைந்து தொடர்ந்து புத்தக கண்காட்சியில் நமது குவிகமும் இணைந்து செயல் படுவது அனைவரும் அறிந்ததே.  இந்த ஆண்டும் அது இன்னும் விமர்சையாகத் தொடரும்.

 

குவிகம் ஒலிச்சித்திரம்

 

01.01.23 இல் குவிகம் ஒலிச்சித்திரம் – 36 வது நிகழ்வு ஒலிபரப்பப்பட்டது.

31.12.23 இல் 86 வது ஒலிபரப்பு நடைபெற்றது

 இசை புதிது குழுவினர் நிறைய இதற்கு உதவுகிறார்கள் ,நன்றி 

 குவிகம் மின்னிதழ் 10 வது ஆண்டு முடிந்த 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

ஆர் வி ராஜன் அவர்கள் பிரபா ராஜன் அறக்கட்டளைக்காக நடத்திவரும்  – பெண்களை மையப்படுத்திய சிறுகதைகள் போட்டி – இந்த ஆண்டும் நடைபெறுகிறது. 

       250 கதைகள் தேர்விற்குச் சென்றுள்ளன.  மூன்று நடுவர்கள்.

       லதா ரகுநாதன்

       பானுமதி

      வைதேகி

முதல் மூன்று பரிசுகளை எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் தேர்ந்தெடுப்பார்

பரிசு விழாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவும் பிப்ரவரி 2024  இல் நடைபெறும்.

 

 

குவிகம் பதிப்பகம்

 

2017 ஜூலை மாதம் முதல் புத்தகம் வெளியிடப்பட்டது

 இதுவரை நூற்றுத் தொன்னூறு புத்தககங்கள் அச்சிலும் ஒரு மின்-புத்தகமும் வந்துள்ளன.

எழுபத்து எட்டு எழுத்தளர்களின் புத்தககங்கள் தவிர ஏழு தொகுப்புகள்.

2022 ஆண்டில் நாற்பது  

2023ல் நாற்பத்து நான்கு புத்தகங்கள்– (முப்பத்தெட்டு எழுத்தாளர்கள்  -கதைகள் 22 கவிதைகள் 6 கட்டுரைகள் 12 நாடகங்கள் 2 தொகுப்புகள்  2)

 ஏழு புத்தகங்கள் தயாரிப்பில் பல்வேறு நிலைகளில் உள்ளன. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அவையனைத்தும் வெளிவந்துவிடும் என நம்புகிறோம்