Poseidon • Facts and Information on Greek God Poseidon

 

ஓடிசியஸ் எப்படியாவது நிலத்தை அடைந்து தப்பித்துச் செல்ல வேண்டும் என்று ஆவலுடன் கரையை நோக்கி முன்னேறினான் ஆனால் அவனைப் பார்த்துவிட்ட பொசைடன்  ஓடிசியசை  இன்னும் அலக்கழிக்கத் தீர்மானித்தான்.  அதற்கு முக்கிய காரணம் இருக்கவே செய்தது. டிராய் போரில் தன்னை ஏமாற்றி டிரோஜன்கள் பெறவேண்டிய வெற்றியை ஓடிசியஸ் தட்டிப்பறித்து கிரேக்கர்களுக்கு வெற்றியை தந்ததனால் அவன் மீது கடும் கோபம் கொண்டிருந்தான். அதைவிட முக்கியக் காரணம் தன் மகனின் ஒரு கண்ணைக்  குத்தி அவனைப் பாதிக் குருடாக்கியவன் ஓடிசியஸ். அதனால் பொசைடன் ஓடிசியசை மன்னிக்கத் தயாராயில்லை. இவன் மூர்க்கக் கடல் அரக்கன் ஆதலால் கடவுளர்களும் அவனை எதிர்க்கத் துணிவில்லாமல் இருந்தனர்.

அப்பொழுதுதான் காலிப்சோ தீவிலிருந்து ஜீயஸ் உதவியால் ஓடிஸியஸ் சுகமாகச் செல்வதைப் பார்த்தான்.  தான் வேறிடம் சென்றபோது  கடவுள்களின் உதவியால்  ஓடிசியஸ் தப்பிக்க முயல்வதைப் பார்த்த பொசைடன் கனகோபம் கொண்டான். “ இவனைச்  சும்மா விடக் கூடாது. இவன் தப்பித்துப் போக வழியே இல்லாமல் இவனுக்கு இன்னும் பயங்கரமான தொல்லைகள் தரவேண்டும்’ என்று முடிவுகட்டினான்.   தன் கைவசம் உள்ள சூறாவளிகளை மீண்டும் அவன் மீது ஏவினான் புயல்கள் அவனை வளைக்கச்  செய்தான் சூறைக்காற்றுகக்கு  அவனைத்  தாக்கும்படி உத்தரவிட்டான். மலை போன்ற உயரத்திற்கு அலைகள் உயர்ந்தன.

கடவுளர் ஆசிகளுடன் காலிப்சோ ராணியிடமிருந்து தப்பி ஒருவழியாகத் தன் நாட்டிற்குச் செல்லலாம் என்ற ஓடிஸியஸ் எண்ணம் சின்னா பின்னமானது. டிராயில் போரிட்டு வீர சுவர்க்கம் அடைந்த வீரர்களுடன் தானும் மடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ண  ஆரம்பித்தான். அப்போது பொசைடன் அனுப்பிய பேரலை அவன் கப்பலை உடைத்து சின்னா பின்னமாக்கியது. ஓடிஸியஸ் தண்ணீரில் தூக்கி எறியப்பட்டான். இருந்த போதிலும் அவன் கப்பலின் ஓரத்தை  இறுகக் கைகளால் பற்றிக் கொண்டு மன உறுதியைக் கைவிடாமல் பேரலைகளின் தாக்குதலைச் சமாளித்தான்.அலைகள் சற்று ஓய்ந்தபோது கப்பலில் அமரவும் செய்தான்.

 

ஓடிஸியஸின் இந்த ஜீவ மரணப் போராட்டத்தை அங்கிருந்த கடல் தேவதை ஒருத்தி கவனித்தாள்.அவளுக்கு ஓடிஸியஸ் மீது அனுதாபம் ஏற்பட்டது. அவனுக்கு அருகில் பறந்து சென்று இந்தக் கப்பல் சுக்கு நூறாக உடையப் போகிறது.  நீ உன் உடைகளை அவிழ்த்து எறிந்துவிட்டு நான் தரும் இந்தக் கவசத்தை மட்டும் அணிந்து கொண்டு கடலில் குதித்து நீந்திச் செல்லவேண்டும்.  கரையை அடைந்ததும் கவசத்தைக் கடலில் எறிந்துவிடவேண்டும். பின்னர் அந்ததீவில் இருக்கும் பீஷியன் நகருக்குச் சென்றால் அவன் தப்பிக்கலாம்” என்று கூறினாள்.. அவளை நம்பவதா வேண்டாமா என்று யோசிக்கும்போது பொசைடன் அனுப்பிய புயல் அவன் இருந்து கப்பலை நொறுக்கியது. ஓடிஸியஸ் கடல் தேவதை சொன்னபடி அந்தக் கவசத்தை மட்டும்  அணிந்துகொண்டு நீந்தத் தொடங்கினான். ‘இனிமேல் இவனால் தன் சொந்த ஊர் போகமுடியாது’ என்ற திருப்தியுடன் பொசைடன்   அங்கிருந்து அகன்றான்.

 

பொசைடன் செல்வதற்காகவே காத்துக்கொண்டிருந்த அதினாதேவி அவன் மறைந்தவுடன் அங்கே அமைதியை நிலை நாட்டினாள் .அவன் அதிக சிரமமின்றி நீந்திக் கரைய அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்தாள்.  இரண்டு நாட்கள் நீந்தி அருகில் உள்ள கரைக்கு அடைந்தான். தேவதை சொன்ன படியே அவள் அளித்த கவசத்தைக் கடலில் வீசி எறிந்தான். சோர்வும் மயக்கமும் அவனைத் துவட்டியது.  உடம்பில் ஆடையின்றி உண்ண உணவின்றி  யாரும் இல்லாத அந்த தனித் தீவில் தனி ஒருவனாக நின்று கொண்டிருந்தான்.ஓடிஸியஸ்.  ஆனால் அவன் எப்பொழுதும் தன்னம்பிக்கை இழக்காதவன்.  அங்கே தூரத்தில் சில மரங்கள் இருப்பதை பார்த்து அதன் அருகில் சென்றான் அங்கே பெரிய இலை குவியல்களுக்கு நடுவே நிறைய மனிதர்கள் இருப்பதைப் பார்த்தான் அங்கிருக்கும் இலைகளை இவன் அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தன் மேல் ஒரு போர்வை போல் போத்திக்  கொண்டான் அந்த நிலம் தந்த அமைதியில் அந்த இலைகள் தந்த இளம் சூட்டில் அந்த தீவிலேயே நிம்மதியாக அன்று உறங்கினான்.

 

ஆனால் தேவி அதீனா அவனுக்காக நல்ல செயல்களை புரிந்து வைத்திருந்தாள் . அவள் நேராக பீஷியன் நகரை அடைந்து அந்த நாட்டு இளவரசியிடம் கனவில் சென்று ‘ நீ உன் தோழிகளை உடனே  அழைத்துக் கொண்டு  கடல் அருகே உள்ள நல்ல நதியில் உன் உடைகளைத் தோய்த்து அழகாக வைத்துக்கொள் ;உனக்கு நல்ல கணவன் கிடைப்பான் என்று கூறினாள். தான் தாய் தந்தையாரிடம் அவள் விஷயத்தைக் கூற அவர்கள் அவளுக்குத் தேவையான உணவு மது கொடுத்து நிறைய தோழிகளுடன் கடற்கரைக்கு அனுப்பி வைத்தனர்.

Nausicaa Brings The Shipwrecked Odysseus' Clothes Painting by Wilhelm Marstrand - Pixelsஇளவரசி தன் தோழிகளுடன் கடற்கரைக்கு சென்று அழகான ஆறு கடலில் கலக்கும் இடத்தில் துணிகளைத் தோய்த்தபின் நீந்தி விளையாடி குளித்துக் கொண்டிருந்தாள்.  அந்த இடம் தான் ஓடிஸியஸ் கரையில் ஒதுங்கிய இடம் அவள் குளித்து முடித்து எழுந்து கரைக்கு வந்தவுடன் அங்கு நிர்வாணமாக இலைகளைச் சுற்றிக்கொண்டு ஒரு அழகன் நிற்பதை பார்த்து அதிசயத்துப்  போனாள் . மற்ற பெண்கள் அவளைக் கண்டதும் பயந்து ஓடினர். ஆனால் இளவரசி மட்டும் பயப்படாமல் நின்றாள்.

அப்போது ஓடிஸியஸ் அவள் அருகே சென்று மண்டியிட்டு , நீ யார் ஒரு தேவதையோ அரசியோ இளவரசியோ நான் அறியேன் ஆனால் உன்னை போல் ஒரு அழகியை நான் என் கண்ணால் கண்டதே இல்லை. நான் கடந்த இருபது நாட்களாக நடுக் கடலில் மரணத்துடன் போராடிய கடலோடி. என் மீது இரக்கம் கொண்டு எனக்கு உதவுவாய்”  என்று வேண்டிக் கொண்டான். தான் நிர்வானத்தை மறைக்க உடைகள் தருமாறும்  வேண்டிக் கொண்டான்.

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவன் அழகில் மயங்கிய இளவரசி   அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வாக்களித்தாள். தன் தாய் ஆரிட்டாதேவியின் கருணையை அவன் பெற்றுவிட்டால் அவள் தந்தை அவனுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம்  செய்வார்  என்று சொல்லி அவனுக்கு உடை உணவு மது எல்லாம் கொடுத்து அவனைத் தன்  தலை நகரத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அவளின் உபசாரத்திற்குப் பிறகு நல்லுடை அணிந்த ஓடிஸியஸ் பேரழகனாகக் காட்சியளித்தான். இளவரசிக்கு அவன் மீது காதல் இன்னும் அதிகம் பொங்கியது. அதீனா  ஆசிதர அனைவரும் அரண்மனைக்குச் சென்றார்கள்.

 

“ நான் முன்னே செல்கின்றேன் நீ நேராக என் அரண்மனைக்கு வா . அங்கே என் அம்மா இருக்கும் தோட்டத்தில் அவளைச் சந்தித்து  தைரியமாக உதவி கேள் “  என்று சொல்லி அவள் விரைவாகச் சென்றாள்.

அவள் சொன்னபடியே ஓடிஸியஸ் அவள் குறிப்பிட்டபடி அந்த அரண்மனைக்குள் சென்றான்.  செல்வச் செழிப்புடன் சிறந்த வேலைப்படுடன் விளங்கியது அந்த அரண்மனை. அதன் அழகைக் கண்டு ஆச்சரியப் பட்டான் ஓடிஸியஸ் .

அங்கே அரசியும் அரசனும் உல்லாச வனத்தில் அமர்ந்திருந்தார்கள். பளிங்கு போன்ற தண்ணீர். திராட்சை மரங்களும் பூஞ்செடிகளும் நிறைந்த எழிலான தோட்டம் அது.  அரண்மனை மக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

ஓடிஸியஸ் அரசியின் காலில் விழுந்து வணங்கினான். தன் துயரக் கதையைக் கூறி தனக்கு உதவும் படி பணிவுடன் வேண்டிக் கொண்டான் .தான் நெய்த உடையை  அணிந்துவந்து வந்திருக்கும்  ஓடிஸியஸைக் கண்டதும் ஆரிட்டோ அரசி அனைவரையும் அனுப்பிவிட்டு அவன் கதையை முழுவதும் கேட்டாள்.

Temptation in the Odyssey: Dangerous Tests  டிராய் நகர யுத்தத்தை வென்ற பிறகு சொந்த ஊர் புறப்பட்டு வரும் வழியில் புயலினால் தாக்கப்பட்டு கப்பல் உடைந்து சிதறி , உடன் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்ததைக் கூறினான். பின்னர் ஒரு பயங்கரமான தீவில் தனி ஒருவனாக அடைந்து அங்கிருக்கும் அழகிய தலைமுடி கொண்ட பயங்கரப் பெண்மணி காஸிப்சோ அவனைத் தன் கட்டுக் காவலில்  வைத்திருந்தாள். அந்தத் தீவு, கடவுளும் வர அஞ்சும்படியான ஊர். ஆனால்  கப்பலை இழந்து மாலுமிகளையும் இழந்து தன்னந்தனியாக இருக்கும் ஓடிஸியஸைத் தனக்கு கணவணாக இருக்கும்படி ஆணையிட்டாள். எனக்குத் தேவையான உணவு வழங்கினாள். என் மீது தீவிரமான அன்பு செலுத்தினாள். ஆனால் என்னை என் நாட்டுக்குச் செல்லக் கூடாது என்று உத்தரவும் இட்டாள். எனக்கு முதுமையே வர இயலாத சக்தியைப் பெற்றுத் தருவதாகவும் கூறினாள். ஆனால் என்னால் அவளை நேசிக்க முடியவில்லை. தப்பிக்க வழியும் இல்லை. ஏழு ஆண்டுகள் அவள் ஆதிக்கத்தில் இருந்தேன். ஜீயஸ் கடவுலரின் உத்தரவால் 20 நாட்களுக்கு முன் என்னை சொந்த நாட்டிற்கு அனுப்ப அரை மனதுடன் ஒப்புக் கொண்டாள்.

ஆனால் மீண்டும் மீண்டும் என் மீது கோபம் கொண்ட பொசைடன் என் கப்பலை உடைத்து என்னை நீரில் எறிந்தான்.கடல் தேவதையின் உதவியால் கரை வந்து சேர்ந்து உங்கள் இளவரசியின் கருணையால் இங்கு வந்து சேர்ந்தேன்.” என்று கேட்போர் நெஞ்சம் உருக்கும்படி தான் துயரக் கதையைக் கூறினான் ஓடிசியஸ் .

அவன் கதையைக் கேட்டு உருகிய அரசியும் மன்னரும் அவனுக்கு தேவையான எல்லா உதவிகளையும் தருவதாக வாக்களித்தனர்.

அந்த அரண்மனையில் சுக போகங்களுடன் அன்றைக்கு ஓடிஸியஸ் நிம்மதியாக உறங்கினான். .