குவிகம் காதல் கவிதைப் போட்டி  (பிப்ரவரி 2024) 

Love Quotes: மனதை கவரும் தமிழ் காதல் கவிதைகள்..!

இந்தப் போட்டியில் 69 கவிஞர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைவருக்கும் பாராட்டுதல்கள் . 

சிறந்த இரு கவிதைகளுக்கு  ரூபாய் 500   பரிசு  என அறிவித்திருந்தோம். 

வந்திருந்த கவிதைகளை இரு வகையாகப் பிரித்தோம். 

ஒன்று,       குவிகத்துடன் தொடர்பு கொண்ட நண்பர்கள் எழுதியவை . 

                      இந்தப் பெட்டகத்தில்   26    கவிதைகள் இணைந்தன. இந்த 26  கவிதைகளில்

                     பரிசுக்குரிய ஒரு கவிதையைத்  தேர்ந்தெடுத்தோம்.

                      இந்த வரிசையில்  வெற்றி பெற்று ரூபாய் 500 பரிசு பெறும் கவிஞர் 

              தாமோதரன் 

இரண்டு , மற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளை இன்னொரு பெட்டகத்தில் இணைத்தோம் . 

                      இந்த வரிசையில் 43 கவிதைகள் அமர்ந்தன. இந்த 43 கவிதைகளில் பரிசுக்குரிய ஒரு

                      கவிதையைத் தேர்ந்தெடுத்தோம். 

                      இந்த வரிசையில்  வெற்றி பெற்று ரூபாய் 500 பரிசு பெறும் கவிஞர் 

              யசோதா சுப்பிரமணியன் 

அது சரி, நடுவர் யார் என்று அறிய உங்களுக்கு ஆவல்  இருக்கும் ! அவர் வேறு யாருமல்ல!

உங்கள் நண்பர் – கவிஞர் – விருட்சம் ஆசிரியர் – அழகியசிங்கர் அவர்கள் ! 

அவருக்கு யார் எழுதியது என்று தெரியாத வகையில் இரு பிரிவுகளாகக்  கவிதைகள் அனுப்பி வைத்தோம் .

நான்கே நாட்களில்  69 கவிதைகளைப் படித்துவிட்டு முதல் இரு கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். 

அவருக்கு எங்கள் இதயபூர்வமான  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.   

 

பரிசு பெற்ற கவிதைகள் இதோ: 

 

குவிகம் நண்பர்கள் எழுதிய கவிதைகள் அனைத்தையும்  (25) இந்த இதழின் அடுத்த பக்கத்தில் இரசிக்கலாம் . இவற்றைப் பற்றிய உங்கள் கருத்துக்களை குவிகம் இலக்கியத் தகவலில் பதிவிடவும்.