
1. இமய மலையின் உயரம் மீட்டர் அளவில் 8848
2. எட்டுக்கால் கொண்ட பூச்சியின் பெயர் சிலந்தி
3. சிலந்தி மனிதன் (spiderman) நிஜப்(!!)பெயர் பீட்டர் பெஞ்சமின் பார்க்கர்
4. பார்க்கர் பேனாக்களை கென்னடி முதல் கிளின்டன் வரை அடுத்தடுத்த ஜனாதிபதிகள்
பயன்படுத்தினர்.
5. ஜனாதிபதி அரண்மனைக்கு ஜிம்பாப்வே நாட்டில் வழங்கப்படும் பொதுவான பெயர் ப்ளூ ரூஃப்.
6. ரூஃப் டாப் உணவகங்கள் 1880 முதலே இருக்கிறது.
7. 1880 பிப்ரவரி மாதம் முதலாவது தபால் வண்டி சேவையை யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஆரம்பித்தது.
8. பருத்தித்துறையின் சிறப்புப் பண்டம் தட்டை வடை.
9. வடை திருடிய காகத்தை, நரி பாடச் சொன்னது பிரபலமான சிறார் கதை.
10. சிறார்கள் செய்யும் குற்றச் செயல்களுக்காக. அவர்களை தங்க வைக்கும் இடம் சிறார் கூர்நோக்கு இல்லம்.
11. இல்லம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் இயக்குனர் I V சசி.
12. சசி வர்ணம் என்பது வெள்ளை நிறத்தை குறிக்கிறது.
13. வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை எளிதாக்கக்கூடிய பழங்களில் ஒன்று ஆரஞ்சு.
14. ஆரஞ்சு நெதர்லாந்தின் தேசிய நிறமாக இருக்கிறது.
15. நிறம் மாறும் தன்மை கொண்ட விலங்கு பச்சோந்தி.
16. பச்சோந்தியின் கண்கள் ஒரு பொருளின் உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் காணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.
17. முப்பரிமாணத் தொலைக்காட்சி 1935ல் உற்பத்திசெய்யப்பட்டது.
18. தொலைக்காட்சி ஒளிபரப்பு 1999 வரை பூடானில் சட்ட விரோதமாக இருந்தது.
(சங்கிலி நீளும்..)

அருமையான பதிவு
LikeLike