


அமேசான் இணைய வெளிக்காட்டில் எனது இலக்கியப் பயணத்தில் கிண்டில் மின்புத்தகங்கள் 151
நூற்று ஐம்பத்தொன்று வெளியிட்டிருப்பதன், எனது அனுபவப் பகிர்வு இது .
பத்து வயதில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்து , கவிதை எழுத்து உலகில் பொன் விழா நிறைவு பெற்றுள்ள நிலையில் , கணையாழி, நவீன விருட்சம், கல்கி , குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி, தினத்தந்தி குடும்ப மலர் போன்ற பல பத்திரிகைகளில் எனது கதைகள், கவிதை, கட்டுரைகள் வெளிவந்திருந்த நிலையில், தமிழ் ஆங்கில பிளாக்குகளிலும், நண்பர்கள் அழகியசிங்கர், சுந்தர்ராஜன், கிருபானந்தன், கவிதை வனம் கண்ணன், பாரியின் பாணர்கள் போன்ற குழுக்களில் எனது படைப்புகள் பதிவு செய்திருந்த நிலையில், அறுபது வயதுக்கு மேல் வந்த ஆசை , இவை அனைத்தையும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்கிற ஆசை.
அப்போதுதான், முன்பே எனது கணிணி நண்பர்கள் மூலம் தெரிய வந்திருந்த அமேசான் கிண்டில் மின்புத்தக வெளியீடு பற்றிய விபரத்தின் முழுமையான தகவல்கள் நண்பர்கள் சுந்தரராஜன், கிருபானந்தன் ஆகியோருடன் ஒரு அளவளாவலின் போது அறிய முடிந்தது. அவர்கட்கு என் நன்றிகள் .
நானும், அந்த இணைய வெளி சென்று முயற்சி செய்து பார்த்த போது அது மிகவும் எளிதாகவும் , விரைவாகவும் மின்புத்தகம் வெளியீடு செய்ய சிறந்த வழி என்று தோன்றியது .
என்னைப் பொறுத்தமட்டில் , புத்தகங்களை நிரந்தரமாக பாதுகாத்து வைக்கவும், விரும்பும் நண்பர்கள் எளிதாக இறக்கிப் படிக்க வசதியாகவும் இருக்கிறது என்ற காரணத்தால் , இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
எனது தமிழ் ஆங்கில பிளாக்குகளில் இருந்த அத்தனை படைப்புகளையும் ( தமிழில் இரண்டாயிரத்திற்கும் மேல் , ஆங்கிலத்தில் ஆயிரத்திற்கும் மேல் ) தொகுத்து , இருபத்தைந்து முதல் முப்பது பக்கங்கள் உள்ள சிறிய புத்தகங்களாக ( ஒவ்வொரு புத்தகத்திலும், கவிதைகள் என்றால் 25 , கதைகள், கட்டுரைகள் என்றால் 10 ) , ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்கு எளிதாக இருக்கும்படி , கதை, கவிதை , கட்டுரை, ஆங்கிலம், தமிழ் என்று பிரித்து இன்றுவரை மொத்தம் 151 ( நூற்று ஐம்பத்தி ஒன்று) மின்புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன் .
தமிழ்க் கவிதைப் புத்தகங்கள் – 84
தமிழ்க் கதைப் புத்தகங்கள் – 13
தமிழ்க் கட்டுரைப் புத்தகங்கள் – 7
தமிழ் நகைச்சுவைப் படைப்புகள் – 6
ஆங்கிலக் கவிதைப் புத்தகங்கள் – 11
ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் -1
ஆங்கிலக் கவிதைப் புத்தகங்கள் – 29
மொத்தம் – 151 மின்புத்தகங்கள்
அதில் அதிக பட்சமாக தமிழ்க் கவிதைப் புத்தகங்கள். கவிதைத் தொகுப்பு 84 (எண்பத்து நான்கு), சென்ற வாரம் வெளிவந்துள்ளது .
அமேசான் இணைய வெளிக் காட்டில் எனது இலக்கியப் பயணம் தொடர்கிறது .
அத்தனை புத்தகங்களையும் பார்ப்பதற்கு எனது இந்த இணைய வெளி முகவ்ரிக்குச் செல்லலாம் .
https://www.amazon.com/author/nagendrabharathi
எனது புத்தகங்களை இறக்கிப் படிப்பதற்கு இந்த இணைய வெளி முகவரிக்குச் சென்று ‘ தேடுதல் ‘ இடத்தில் ‘நாகேந்திர பாரதி’ அல்லது ‘nagendra bharathi ‘ என்று டைப் செய்து தேடி விரும்பும் புத்தகங்களைத் தேர்வு செய்து இறக்கி படித்துக் கொள்ளலாம்.
https://www.amazon.in/
இந்த கிண்டில் புத்தகங்களை இலவசமாகப் படிப்பதற்கு , இந்த அமேசான் தளத்தில் சென்று subscribe செய்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சந்தா செலுத்தி சேர்ந்து கொள்ளலாம்.
https://www.amazon.in/
மற்றும் தாங்களே மின்புத்தகங்கள் வெளியிட , இந்தக் கிண்டில் மென்பொருள் பற்றி அறிந்து கொள்ள இந்த இணைய வெளி முகவ்ரிக்குச் செல்லலாம்.
https://kdp.amazon.com/
நண்பர்கள் இதை உபயோகப்படுத்தி , தங்கள் அச்சுப் புத்தகங்களோடு மின் புத்தகங்களும் வெளியிட்டு உலக வாசகர்களை அடைய முயற்சி செய்யலாம்.
வாழ்த்துகள்

அருமையான பதிவு. ஆற்றுப்படுத்தும் பதிவு. நன்றி நண்பரே.
LikeLike
அருமையான பதிவு. ஆற்றுப்படுத்தும் பதிவு. நன்றி நண்பரே.
LikeLike