6mm Plastic Chain - 5M (White)

1. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று சொன்னார் ஓளவை.
2. அவ்வை சண்முகம் சாலை என்பது, ஓளவையார் வேடமிட்டு நடித்துப் புகழ் பெற்ற டி.கே.சண்முகத்தின் வீடு அந்தப்பகுதியில் இருந்ததால் சூட்டப்பட்ட பெயர்.
3. பெயரெச்சம் என்பது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம்.
4. புறா எச்சங்கள் கடுமையான நுரையீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்
5. நுரையீரல் பிரச்சினையால் தொடர்ந்து சளியில் அவதிப்பட்டு வருபவர்கள் வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.
6. வடிகட்டி கருவி பெரும்பாலும் சமையலறை முதல் ஆய்வுக் கூடங்கள் வரை முதன்மையாக பயன்படுகிறது.
7. ஆய்வுக்கூடம் ஒன்றை நிலவில் அமைக்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.
8. நிலவின் விட்டம் பூமியின் விட்டத்தில் கால் பங்காகும்.
9. கால்பந்து விளையாடுபவர்கள் புவிக் கோளமெங்கும் 25 கோடி வீரர்கள் இருக்கிறார்கள்
10. 25 கோடி ரூபாய் கேரள லாட்டரித் துறையில் ஓணம் பம்பர் பரிசுத்தொகையாக உள்ளது.
11. ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளாகக் கொண்டாடுகின்றனர்
12. சக்கரவர்த்தி திருமகன் நூலின் முடிவுரையில் இராஜாஜி, குழந்தைகள் தாங்களே படித்து
புரிந்து கொள்வதற்காகவே எழுதப்பட்ட நூலாகக் குறிப்பிடுகின்றார்.
13. உலக குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகளால் கொண்டாடுகின்றன
14. யுனிசெப் இந்தியா அமைப்பு 1949 இல் இந்தியாவில் தனது பணியை மூன்று ஊழியர்களுடன் தொடங்கியது.
15. மூன்று தெய்வங்கள் 1971 தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்
16. திரைப்பட அரங்கங்கள் இடையில் 35 வருட காலம் இல்லாமால் இருந்த நாடு சௌதி அரேபியா
17. சவுதி அரேபியாவின் தம்மாமில் அமைந்துள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாகும்
18. விமான நிலையம் இல்லாத நாடுகளில் ஒன்று வாடிகன்