முதலில் ஒரு மெய்ப்புப் போட்டி —->
அதன் பின் வழக்கமான குறுக்கெழுத்துப் போட்டி
கீழே பிரபல ஆசிரியர் பிழையின்றி எழுதிய நாவலிலிருந்து சில வரிகளைத் தந்துள்ளோம்.
இந்த மெய்ப்புப் போட்டிக்காக அதில் நிறைய இடங்களில் ஒற்றுப் பிழையை நாமே ஏற்படுத்தியுள்ளோம் .
ஒற்று விட்டுப் போயிருக்கலாம் அல்லது தேவையில்லாத இடத்தில் இடப்பட்டிருக்கலாம்.
போட்டி என்னவென்றால் , இதில் மொத்தம் eஎத்தனை ஒற்றுப் பிழைகள் உள்ளன?
குறுக்கெழுத்து விடையுடன்
மெய்ப்புப் போட்டிப் பிழைகள் : XX
என்று எண்ணிக்கையை மட்டும் குறிப்பிடவும்.
வழக்கம் போல சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிக்கு குலுக்கல் முறையில் 100 ரூபாய் பரிசளிக்கப்படும்.
சொல்ல முடியாது – குறுக்கெழுத்து , மெய்ப்பு இரண்டு பரிசுகளும் ஜாக்பாட்டாக ஒருத்தருக்கே 200 ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம்!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்
பொய்யாய் பழங்கதையாய் கற்பனையாய்
மெல்ல போனதுவே!
பிரபஞ்ச பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை! உலகம் முழுவதுமேப் பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடுக் கலந்து வீசும் இதமான மண்காற்றுப் புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதை பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்க தொடங்கவில்லை.
பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டுப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கேப் பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்து தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப் போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.
அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே ப் பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தை கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்தி கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளை போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே!
கண்களில் கசிந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. ‘அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டுக் கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில்? நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சை தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்த தமிழில் இனிமை மணக்கும்!’
இன்று எங்கே அந்தத் தமிழ்? எங்கேயந்த அறிவின் மலை? பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே! அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டு போனாரா? இல்லை… அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டு போயிருக்கிறார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :
http://beta.puthirmayam.com/crossword/D49C703757
சென்ற மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடை:
சரியான விடை எழுதினவர்கள்
- எம் ரவி
- எம் சரஸ்வதி
- பி மாதவன்
- பிரேம்
- சித்ரா ஸ்ரீநிவாசன்
- மெய்யழகி
- வித்யா.
- மகேஷ்.
- நடராஜன் பாலசுப்ரமணியன்.
- மனோகர்
- வைத்யநாதன்
- மாலதி
- சரண்குமார்
- ராஜா
- அவினாஷ்
- கோமதி.
- வள்ளி.
- ஸ்ரீ ராம்
- அனுக்கிரகா
- ஷங்கரன்.
- தமிழரசி
- விஜயலக்ஷ்மி கண்ணன்
- மதிவாணன்
- ராய செல்லப்பா
- கௌரி
- உஷா ராம சுந்தர்.
- ரேவதி ராமச்சந்திரன்.
- ஜானகி.
- தாமோதரன்
- கருணாகரன்
- சிவகாமி
- துரை தனபாலன்
- மஞ்சுளா.
- கல்யாணராமன்
- கமலா முரளி.
- மகேஷ் மாதவன்
- ஜானகி
- ராமமூர்த்தி
- .ராமசாமி
இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி : ராஜா
பரிசு பெற்றவருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்


மெய்ப்புப் போட்டிப் பிழைகள் : 21
LikeLike
மெய்ப்புப் போட்டி பிழைகள்: 10
LikeLike
மெய்ப்புப் போட்டி பிழைகள்: 10
LikeLike
மெய்ப்புப் போட்டி பிழைகள்: 10
LikeLike
மெய்ப்புப் போட்டிப் பிழைகள் : 10
LikeLike
மெய்ப்புப் போட்டிப் பிழைகள் : 10
LikeLike
மெய்ப்புப் போட்டிப் பிழைகள் விடை 17
LikeLike
குறுக்கெழுத்து போட்டு முடித்தவுடன் வரும் குதூகலம் தனிதான்
LikeLike