![]()
குவிகம் குறும் புதினம் பரிசளிப்பு விழா 16 மார்ச் அன்று நடை பெற்றது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 24 கதைகளையும் அலசி ஆராய்ந்து முதல் மூன்று பரிசுகளுக்கான கதைகளை சொல்வனம் இதழின் ஆசிரியர்களில் ஒருவரான பாஸ்டன் பாலா தேர்ந்தெடுத்தார்.
அந்தக் கதைகளின் சிறப்பியல்புகளையும் விளக்கிக் கூறினார்.
முதல் பரிசு – பசி – கே சிவகுமார்
இரண்டாம் பரிசு – நினைவுகள் புனிதமானவை… – எம் சங்கர்
மூன்றாம் பரிசு – இரைச்சல் – பென்னேசன்
பரிசு பெற்ற மூன்று எழுத்தாளர்களை அனைவரும் பாராட்டினர்.
மூவரும் தங்கள் குறும் புதினங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பாராட்டிப் பேசினார்கள்.
இந்தத் திட்டத்திற்குப் புரவலர்கள் சந்திரசேகரன் மற்றும் டாக்டர் முருகுசுந்தரம் .
விழாவிற்கு வந்திருந்த சந்திரசேகரன் தாம் தொடர்ந்து இதுபோன்ற இலக்கியச் சேவையில் பயணிக்க விரும்புவதாகக் கூறினார்.
முதல் கட்ட தேர்வாளர்களில் ஒருவரான சந்திரமோகன் எப்படி இந்தத் தேர்வுப் பணியைச் செவ்வனே செய்ய முடிந்தது என்பதை விளக்கினார்.
மற்ற கதாசிரியர்களும் தங்கள் கதைகளைப் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுத்து பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.





அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
LikeLike