1.ஈரானின் தேசிய நாணயம் ரியால் (IRR) ஆகும்.
2.
ரியால் நாணயம் சவூதி அரேபியா, ஓமான் மற்றும் கத்தார் நாடுகளில் நாணயங்களின் பெயராக உள்ளது
3.
கத்தாரின் பொருளாதார வளம், ஜப்பான் முத்துக்கள் வளர்ப்பு முறையை கண்டறிந்த பின்னர் சரிந்தது.
4.
சரிவுகள் தொடர்ந்து ஏற்பட்டால், பங்குச்சந்தை, கரடி (bear) பிடியில் உள்ளதாகச் சொல்வார்கள்.
5.
பிடி என்று பெண் யானையை சொல்வார்கள்
6.
உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.
7.
“அனு” என்பது சுமேரிய மதத்தில் வானம், சொர்க்கம் மற்றும் விண்மீன்களுக்கு அதிபதியாகக் கருதப்படுபவர்.
8.
அதிபதிகள், மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கு ஒருவர் என்று உள்ளனர்
9.
“ராசி” (1997) தமிழ்த் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சிற்பி அவர்களின் இயற்பெயர் இரா. நாராயணன்.
10.
நர-நாராயணன் இந்து சமயம் கூறும் இரு தேவர்கள், தர்மதேவதை மற்றும் மூர்த்தி என்பவர்களுக்கு இரட்டை மகன்களாகத் தோன்றினார்கள்.
11.
இரட்டை ஆயுள் தண்டனை என்பது
ஒரு குற்றவாளிக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படுவது.
12.
“விதி விகிதம்” என்பது ஒரே அலகில் உள்ள வெவ்வேறு எண்களை ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.
13.
செயல் வீரர் எனும் நூல் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் வாழ்வினை விவரிக்கும் வகையில் ஆர் வேதவல்லி அவர்களால் எழுதப்பட்டதாகும்.
14.
வல்லின மெய்யெழுத்துக்கள் (க,ச,த,ப) முதல் எழுத்தாக வரும் சொற்களின் முன், சில இடங்களில் வல்லினம் மிகும். அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துக்களின் பின்னும், ‘எ’ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
15.
வினாடி-வினா நிகழ்ச்சிகளில் சொல் புதிர், வார்த்தை விளையாட்டு எனப் பலபல புதுமைகளைச் செய்த திரு.வ.வே.சு அவர்கள், எதிரும் புதிரும் என்ற தொலைக்காட்சித் தொடர் மூலமும் பிரபலமானார்
16.
மூலம் ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுகிறது
17.
அவதாரப் புருஷன் வாலி அவர்கள் கவிதை வடிவில் எழுதிய ராம காவியம்
18.
விராட் ராமாயணக் கோவில் , பீகார் மாநிலத்தில், கேசரியா நகருக்கு அருகில் உள்ள ஜானகி நகரில் கட்டுமானத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கோவிலாகக் கட்டப்பட்டுக் கொண்டுள்ளது.

சங்கிலி தொடரும்…..
இவர்களை மறக்கலாமா? திரையுலகில் ஐம்பதாண்டுக்கும் மேல் பயணம் செய்து வருபவர் பாடலாசிரியர் முத்துலிங்கம். அண்மையில் விழாவொன்றில் பேசுகையில் இரண்டு பழம்பெரும் ஆளுமைகள் குறித்துப் பேசி அவர்களது புகழை மறைக்காதும் மறக்காதும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். புதுமையாகவும் புரட்சிகரமாகும் கவித்துவமாகவும் அந்தக் காலத்திலேயே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் தணிகாசலம் என்ற இயற்பெயர் கொண்ட இளங்கோவன். பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர். ஆகிய ஜாம்பவான்கள் படங்களுக்கு வசனம் எழுதியவர் அவர். அண்ணாவே பாராட்டிய வசனகர்த்தா இளங்கோவன் என்றார் முத்துலிங்கம். பாரதியின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் சின்னையா விஜயரங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ் ஒளி.கவிதைகள். கதைகள். நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எழுதியவர். ஒரு சில திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்று அவர் எழுதிய எழுச்சி மிகு கவிதை அவரது புலமைக்குச் சான்று என்றும் முத்துலிங்கம் சுட்டிக்காட்டினார். தகவல் : பா முத்துக்குமரன் |