Indian managers are the worst': Techie goes on frustrated rant about working for 'egotistic' boss | Trending - Hindustan Timesசமீபத்தில் டீம் லீடர் வாய்ப்பைப் பெற்றிருந்த நிரஞ்சன் தன்னால் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற முடியுமா எனக் கவலையுற்றார். தன்னுடைய சகாக்களின் செய்முறையைப் புரிந்து கொள்ளத் தவித்தார். உதாரணத்திற்கு, ஒன்று புரியாமல் இருக்கும் போது ஏன் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவதில்லை?

அவர்கள் அலுவலகத்திற்கு மனநலன் மேம்படுத்த நான் போவதுண்டு. மேனேஜர் கோபாலன் நிரஞ்சனை என்னிடம் அழைத்துவந்து பின்னணியை வர்ணித்தார்.

இரண்டு வருடங்களாக நிரஞ்சனை கவனித்து வந்திருந்தார். வேலை ஒன்றை ஒப்படைத்தால்‌ அதில் ஐக்கியமாகி முழு மனதோடு நிரஞ்சன் செய்வான். மற்றவர்கள் புகழ், பாராட்டால் எதிர்பார்க்க மாட்டான். தெரிந்ததைத் தாராளமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வான். இதைத் தலைகனமாக அலுவலகத்தில் பலர் எண்ணியதால் சில சிக்கல் நேர்ந்தது.

நிரஞ்சனின் ஊக்கம் கொள்வதும் செய்முறையை “internally motivated” அதாவது செய்யும் வேலையிலிருந்தே உள்ளூர ஊக்கம் கொள்வோர் என ஆராய்ச்சியாளர்கள் டீசீ, ரயன் (Deci, Ryan) குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்னொன்று, “externally motivated” அதாவது பாராட்டு, பணம், பரிசு, பதவி போன்ற வெளி ஊக்கங்களுக்காகப் பாடுபடுவது என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுபோன்ற பலவற்றைப் படித்திருந்த கோபாலன், எதிர்பார்ப்பு இல்லாத இந்த மனப்பான்மையை மற்றவர்களும் அடையாளம் காணவேண்டும் என்றே நிரஞ்சனுக்கு டீம்‌ லீட் பதவி அளித்திருந்தார். நிரஞ்சன் அதைச் சிறப்பாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்திருந்தார்.

துடிதுடிப்பான நிரஞ்சன் இருபத்தி எட்டு வயதுடையவன். பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தான்.  நுணுக்கமாகப் படித்து, ஆழமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் இயற்கைச் சுபாவம். இதனாலேயே டீம் லீட் பதவியும் கிட்டியது. அப்படியிருக்க, பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இடையூறு என்ன?

இதைப் புரிந்துகொள்ள,  நிரஞ்சனை முதலில் தன் வேலை செய்யும் முறையைக் கூர்ந்து கவனிக்கப் பரிந்துரைத்தேன். நிரஞ்சனின் கவனம் தான் செய்வதிலிருந்ததே தவிர, தான் செய்யும் முறையை அடையாளம் காண்பதில் இல்லை. செய்து முடித்தவற்றை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தோம்.

செய்த ஒவ்வொரு வேலையிலும் முழுதாக மூழ்கி இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை என்றான் நிரஞ்சன். இதை மேலும் பார்க்க, செய்யும்போதே தனக்குப் புரிகிறதா, சரியாகச் செய்கிறோமா என்பதைத் தன்னறியாமலேயே தானே கண்காணித்து, புரியாததைப் படித்துப் புரிந்து கொண்டு, தவறுகளைக் கண்டறிந்து திருத்திக்கொண்டு வேலையை  நல்லபடியாகத் தாம் கொண்டு செல்கிறோம் எனப் புரிந்து கொண்டான். இப்பேர்ப்பட்ட செய்முறை நிலையை உள் உந்துதல் என்பார்கள். இது டீம்மில் உள்ள மற்றவர்களின் செயல்படும் விதத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் காண ஆரம்பித்தான்.

நிரஞ்சன் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதால், பெரும்பாலும் புத்தகப் புரிதல்கள் மூலமும், சுய ஆராய்ச்சியாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி நான் வழிமுறைகளை வகுத்தேன்.

நிரஞ்சன் தம்மிடம் மற்றவர்களுக்கு வழி காட்டும் டீம் லீட் செயல்திறன் உள்ளதா என்று சந்தேகித்தான்.  அதெல்லாம் தனக்கு அப்பா ல் இருப்பதாக நினைத்து விட்டான். சலிப்புத் தட்ட ஆரம்பித்தது. தன் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள அவனை உகந்த அனுபவம் ஆராய்ச்சியை (Optimal Experience theory) பற்றிப் பல கோணங்களில் படிக்கப் பரிந்துரைத்தேன். தெளிவு பிறந்தது.

நிரஞ்சன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அஞ்சுவதை டுத்துக்கொண்டோம். தற்போதைய பொறுப்புகளுக்குச் செயல்பட வேண்டிய வகைகளுக்கும், செயல்களின் விளைவுகளுக்கும் உள்ள  பிணைப்பைப் புரிந்து கொள்ள, இணைப்புகளை வரைபடமாக வடிவமைக்கும் கருவியான  “ஸிஸ்டம் மேப்ஸ்” (System Maps) உபயோகித்தோம். பலன் கிடைத்தது!

நிரஞ்சனின் குறிக்கோள்கள் என்னென்ன, தாம் என்ன செய்கிறோம், ஒன்று செய்தாலோ செய்யாவிட்டாலோ மற்றவர்களின் மீது அதன் தாக்கம் என்ன, தாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பவற்றை அடையாளம் காண முடிந்தது.

தன் டீம் ஊழியர்கள், அவர்களுடன் உறவுகள்; வேலையில் உள்ள அம்சங்களுடன்‌ நிறுவனத்தின் கைகோர்ப்பு; வாய்ப்புகள் மற்றும்  சவால்களின் மீது இவற்றின் தாக்கமும் இருப்பதைக் கண்டறிந்தான். தகவல்களை ஒருங்கிணைத்துப் பார்த்ததில், மாற்றத்திற்கு எது கை கொடுக்கும் என்பதைத் தெளிவாக அடையாளம் கண்டான்!

முன்பைவிட உறுதி சற்று அதிகரித்திருந்தது! நிரஞ்சன், மேற்கொண்டு தன் வேலையை ஆராய்ந்து பார்த்தான். டீமில் உள்ளவர்கள் தாம் செய்யும் தவறுகளை அடையாளம் காணத் தடுமாறுவதைக் கண்டறிந்தான்.

மெடாகாக்நிஷன் (Metacognition) என்ற வழிமுறையில் நம் சிந்தனைகளைப் பற்றியும் சிந்திக்கும் முறைகளைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கண்டுகொள்வதாகும். நிரஞ்சன் இதைப் பயன்படுத்தினான், தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கேள்விகளை எழுப்பி அவற்றிற்குப் பதில் தேடுவதென்று. முக்கியமாக நேர்மறையாகத் திட்டங்களைத் தீட்டி வழிமுறைகளைக் காண்பதும், காலக்கோட்டுடன் செய்வதும் அவசியமே!

இதை உபயோகத்தில் கொண்ட வந்தபின் டீம்மில் பயன் தென்படத் தொடங்கியது. குறிப்பாக வெளி ஊக்கங்கள் தேடுபவர்கள் தவறு செய்ய அச்சப் படுகிறார்கள் என நிரஞ்சன் உணர்ந்தான். தவறு நேர்ந்துவிட்டது என்றால் மற்றவர்களுக்கு அவர்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினால் இந்த பயம். இந்த நிலையை மாற்ற தன் தரப்பில் செய்வதற்கு பல்வேறு வழிகளை நிரஞ்சனை உருவாக்கப் பரிந்துரைத்தேன். செயல் செய்தான்.

தற்போதைய சூழலில், முதலில் தன்னுடைய தவறுகளைப் பற்றி நிரஞ்சன் சிந்தனை செய்வதை (Metacognition of Mistakes) அமல் படுத்தினான். தவற்றைத் தவிர்த்து விடுவதற்கு அல்ல. அதற்குப் பதிலாகச் சிந்தனை செய்து திருத்திக் கொள்வதற்கு. ஓரிரு சிறு வழியில் செயல்படுத்தியதும் நிரஞ்சன் புரிந்து கொண்டான், தான் அடுத்தமுறை தவற்றை‌ நேராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று.

செஷன்களில் அலுவலக ரகசியங்கள் பாதுகாக்கப் பட்டன. ஆக வேலையின் உள்பொருள்களை என்றும் பேசியதில்லை. டீமில் உள்ள நபர்களை தனிப்படுத்தி விவரிப்பதும் இதில் அடங்கும். அவர்களின் தவறுகளை ஒருங்கிணைத்ததில் நிலைமையை மாற்றுவது எப்படி என்பது புதிராக இருப்பதை  நிரஞ்சன் ஒப்புக்கொண்டான். தவறுகளை வகை பிரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

தவறுகள் வகைகளைப் பட்டியலிடுவதைப் பற்றி விவரித்தேன். இதைச் சார்ந்த வழிமுறைகளை அமைக்கப் பல ஆராய்ச்சிகளைப் படித்து அவற்றை செஷன்களில் எடுத்துக் கொண்டோம். அவற்றை உபயோகிக்கத் தொடங்கினான்.

தவறுகளின் வகைகளைப் பிரித்ததில் கவனக்குறைவினால், அல்லது செய்யவேண்டிய நடைமுறையில், அல்லது கருத்துப்பிழையினால் நேர்ந்தது எனப் புரிய வந்தது. இதை டீமில் பகிர்ந்தான். செய்ததில் அவர்களும் தங்கள் சிந்தனைமுறைகளைப் பற்றி சிந்தனை செய்ய ஆரம்பித்தார்கள். செயல்கள் மேம்படுத்த உதவியது.

தன் டீம் உறுப்பினர்களுடன் நன்றாகப் பரிச்சயம் உள்ளதால் நிரஞ்சன் கண்களில் தவறு தென்பட்டால், எடுத்துச் சொல்லவோ, குறிப்பிடவோ பள்ளிக்கூடம் போல ரிப்போர்டில் சிவப்புக் கரையில் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக  ஈமோஜிகள் உபயோகிக்குமாறு செயல்படுத்தினான்.  சகாக்கள் தவறு செய்வதற்கு அஞ்சுவது இதன்மூலம் குறைந்தது.

மேலும் தன் வேலை மற்றும் டீமில் நேர்ந்த தவறுகளை எடுத்துக் கொண்டோம். அலுவலகத்தின் ரகசியத்தன்மை காத்தவாறே தவறுகளின் உள் பொருளைப் பார்த்தோம்.

டீம் லீட் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து, சரியாகச் செய்வோமா என்ற எண்ணமே நிரஞ்சனின் உணர்வுகளைக் கடத்தல் செய்தது. சுயச் செயல்திறன் சரிந்தது. இதை அடையாளம் கண்டதுமே தன் வேலையில் தவறுகள் கவனக்குறைவினால்  நேர்ந்ததை நிரஞ்சன் அடையாளம் கண்டான்.

இதையே டீம்மில் உள்ளவர்கள் வேலையில் நினைவு படுத்திப் பார்க்க அதன் காரணியையும் புரிந்துகொண்டான். தவற்றை மட்டுமல்லாமல் நபரையும் பார்க்க, சூழலில் கண்டிப்புடன் இரக்கமும் சேர்ந்தது. தோழமையும் வேலையைச் செய்ய ஊக்கவைக்கும்! 

அடுத்தாகச் செய்யவேண்டிய நடைமுறை என்ன என்று தெரியாமல் சகாக்கள் சிலர் யாரையும் கேட்காமல் தடுமாறிக் கொண்டிருப்பது நேர்கிறது என்று நிரஞ்சன் அடையாளம் கண்டுகொண்டான்.

டீம்மில் ஒருவர் தன் வேலையில் புதுமைக் கண்டுபிடிப்பு உறுதியாக உள்ளது என இருக்க, அதில் தவறு உள்ளது தெரிய வந்தது. மிகவும் நொந்துபோனார்கள். இதைப் பல செஷன்களில் எடுத்துக் கொண்டோம். போதுமானத் தகவல் அறியாததாலும் செய்முறைப் பிழையைக் காணாததாலும் நிகழ்ந்தது எனப் புரிந்தது. டீம் லீடாக நிரஞ்சன் போதுமான ஆதரவு அளித்ததால், சகாக்கள் தங்கள் அணுகுமுறையை எந்த ஒரு தயக்கமின்றி மாற்றி, வந்து கலந்து உரையாடியதில் செயல் திட்டங்கள் பலன்பெற்றன. தான் இத்தனை நாட்கள் ஆதரிக்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையைப் பார்க்காததைப் பற்றி வருத்தப் பட்டான் நிரஞ்சன்.

மேற்கொண்டு தன் உறுப்பினர்களில் எவருக்கெல்லாம் கருத்துப் புரிதலில் குறைவு உள்ளது என்பதை அடையாளம் கண்டான். பலர், தெரியாததை வெளிப்படுத்தாமல் மறைக்கப் பார்த்தார்கள். டீம் லீட் வழிகாட்டி என்பதால் இவர்களை அடையாளம் காண்பது தன் பொறுப்பு என்று நிரஞ்சனுக்குப் புரிந்தது. இதைச் சுதாரித்துப் பல சவாலான புராஜக்ட் எடுத்துக்கொள்ள இவர்களின் வளர்ச்சியைக் கண்டான்.

யாரேனும் ஒருவர் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால்  கருத்துப்பிழையினால் தவறு நேரலாம். தவறுகளை கற்றலாக ஏற்றுக்கொள்ளக் குழுவில் பகிர்தல் தேவை என நிரஞ்சன் புரிந்து கொண்டான்.

இவ்வாறு செய்ய, தாழ்வாகவோ கேலியாகவோ இல்லாமல் நடைமுறையில் செய்து காட்டத் தொடங்கினார்கள்.

இந்த இலக்கை அடைந்தது எவ்வாறு தெரியும் என்று கணிக்க நிரஞ்சனைப் பரிந்துரைத்தேன். டீமில் உள்ளவர்கள் யார் எதை ரசித்துச் செய்கிறார்கள், எப்போதெல்லாம் முழுமனதுடன் ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள், திருப்தியோடு இருக்கிறார்கள், வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்காணித்து வந்தான். நாளடைவில் இவையெல்லாம் டீம்மில் பிரதிபலித்தது. 

தெளிவு பெற்ற நிரஞ்சன் டீம் லீட் பொறுப்பை வரவேற்றான். தன்னுடன் அனைவரும் மேம்படுவது ஆனந்தத்தைத் தருவதை உணர்ந்தான்.

 “தவறுகளைத் தவிர்க்க வழி தேடல்”

விழிப்புணர்விலிருந்து

வழிமுறைகள்

புரிதலில் முடிந்தது!

*************************