‘டிங் டாங்’
‘மேம், நீங்கள் அதிதி ஜா?’
‘ஆமாம்’
‘உங்களுடைய சாப்பாட்டு பார்சல்’
‘எனக்கு வேண்டாம்’
‘மேம், நீங்கள் எங்கிருந்து இதற்கு ஆர்டர் பண்ணினீர்களோ அந்த இடத்திலிருந்துதான் இதை கேன்சல் செய்ய முடியும், என்னிடம் இருந்து நீங்கள் வாங்கியே ஆக வேண்டும்’
‘சரி கொடுங்கள்’
‘மேம், ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்குமா?’
‘சாரி நீங்கள் வேற எங்கேயாவது போய் வாங்கிக் கொள்ளுங்கள்’
‘மிகவும் தாகமாக இருக்கிறது, ஒரே ஒரு டம்ளர் ப்ளீஸ்’
அதிதி உள்ளே சென்ற அந்த சமயம் அந்த இளைஞன் வாசலில் இருந்து எதிரில் தெரியும் கண்ணாடியில் தூக்கு கயிறு தொங்கிக் கொண்டிருப்பது தெரிவதைப் பார்க்கிறான். வியப்பும், துக்கமும் எட்டிப் பார்க்கிறது.
‘இந்தாருங்கள் தண்ணீர்’
‘மேம், நீங்கள் ஏதாவது துக்கத்தில் இருக்கிறீர்களா?’
‘ஏன் அப்படி கேட்கிறாய்?’
‘இல்லை, உங்களை ஏதாவது கலக்கப்படுத்துகிறதா?’
‘நீங்கள் தண்ணீர் கேட்டீர்கள், கொடுத்துள்ளேன், குடித்துவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்’
‘நான் சிறிவனாக இருக்கலாம், பெரிய வார்த்தைப் பேசுவதாக நினைக்க வேண்டாம், ஆனாலும் ஏதாவது துக்கமாக இருந்தால் என்னிடம் கூறுங்கள்’
‘நீங்கள் தண்ணீர் குடித்துவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்’
‘ரொம்பவும் சாமர்த்தியமாகப் பேசுவதாய் நினைக்காதீர்கள், துக்கம் பகிர்வதால் குறைகிறது’
‘யார் சொன்னார்கள் நான் துக்கத்தில் இருக்கிறேன் என்று!’
‘நீங்கள் துக்கமாய் இல்லாவிடில் ஏன் அந்தத் தூக்குக் கயிறு அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது? சந்தோஷம் எப்பொழுதும் பகிர்வதால் அதிகமாகிறது, துக்கம் பகிர்வதால் குறைகிறது, கேட்பவர்கள் யாராவது இருந்தால் எவ்வளவு பெரிய துக்கமாக இருந்தாலும் அது குறைந்து விடும்’
அதிதி விசும்புகிறாள்.
‘அழாதீர்கள், அழாதீர்கள், எனக்கு நீங்கள் எந்த மாதிரி துக்கத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியாது, ஆனால் நீங்கள் என்னுடன் பகிர்வதால் அதற்கு ஏதாவது என் மூலமாகவோ இல்லை தன்னாலேயோ ஒரு நிவர்த்தி கிடைக்கலாம்’
‘இல்லை எனக்காக யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு சாவதைத் தவிர வேறு வழி இல்லை’
‘ஏன் கிடைக்காது? தேடினால் எப்போதுமே ஏதாவது வழி கிடைக்கும், என்னிடம் சொல்வதால் ஒருவேளை அதற்கு ஏதாவது தீர்வு நான் கொடுக்கலாம் அல்லது தன்னாலயே ஏதாவது தீர்வு தென்படலாம்’
‘இல்லை யாரும் எனக்காக எதுவும் செய்ய முடியாது, சாவதைத் தவிர வேறு எதுவுமே இல்லை’
‘வழி தேடினாலே கிடைக்கும், ஒரு தடவை என்னிடம் சொல்வதால் ஒருவேளை வாழ்வதற்கு ஏதாவது வழி தென்படலாம்’
‘நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும், நீ என்ன செய்து விட முடியும், நான் சொல்லிவிட்டேன் எனக்கு யாரும் உதவி செய்ய முடியாது’
‘இந்த நிலைமையில் என்னால் எதுவும் செய்ய முடியாது, ஒருவேளை நீங்கள் சொல்வதால் என்னால் ஏதாவது தீர்வு சொல்ல முடியும், எப்படியும் நீங்கள் சாவதற்குத் தயாராக உள்ளீர்கள், என்னிடம் துக்கத்தைப் பகிர்ந்து விட்டு அதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காவிட்டால் உங்களுடைய முடிவை நீங்கள் தேடிக் கொள்ளலாம், தயவு செய்து சொல்லுங்கள்’
‘நான் கடன் என்கிற சமுத்திரத்தில் விழுந்துள்ளேன், சிறிது காலத்திற்கு முன்பு என்னுடைய ஒரு படிப்பிற்காக சிறிது கடன் வாங்கினேன், அதை கட்டுவதற்கு மறுபடியும் ஒரு கடன், மறுபடியும் ஒரு கடன் என்று கடன் வாங்கிக் கொண்டே இருந்தேன், எனக்கு பணத்தின் தேவை இருந்தது, அதனால் நான் தனியார் கம்பெனியில் இருந்தும் கடன் வாங்கினேன் அதிக வட்டியில், அதை இப்பொழுது கட்ட முடியாமல் தவிக்கிறேன்’
‘ஏன் உங்களுடைய வேலை என்ன ஆயிற்று?’
‘நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் அந்தக் கம்பெனியில் நஷ்டம் வந்ததால், என்னையும் என்னைப் போல சிலரையும் வேலையிலிருந்து நீக்கி விட்டனர்’
‘ஏன் வேறு இடத்தில் வேலை தேடி இருக்கலாமே?’
‘நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், நான் மற்ற இடத்தில் வேலை தேடி இருக்க மாட்டேன் என்றா? தேடினேன், எனக்கு இந்த ஆட்குறைப்பினால் எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை, உன்னை மாதிரி டெலிவரி செய்பவர்களுக்கு என்னுடைய கஷ்டம் எப்படி புரியும்?’
‘ஆம் மேம், நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள், எனக்கு இதைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது’
‘வேலை போனவுடன் என்னால் இந்த பண கஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் நெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள், எப்போதும் எனக்கு போன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், தனியார் கம்பெனி ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள், எனக்கு இப்பொழுது தற்கொலை தவிர வேறு வழி தென்படவில்லை’
‘ஏன் வழி இல்லை, நீங்கள் இந்த விஷயத்தை உங்கள் வீட்டில் சொன்னீர்களா? உங்கள் அப்பாவிடம் சொல்லலாமே’
‘முடியாது’
‘ஏன் மேம், ஏன் முடியாது?’
‘நான் என் அப்பாவிற்கு இதை கூற முடியாது, ஏனென்றால் அப்பா ரிட்டயர் ஆகிவிட்டார், வீட்டு நிர்வாகம் முழுவதும் அவர் தோளிலே, என்னுடைய கல்யாணத்திற்காகவும் அவர் பணம் சேமித்து வருகிறார், நான் எப்படி அவரிடம் போய் பணம் கேட்க முடியும், என்னைப் படிக்க வைப்பதற்கும், வெளிநாடு அனுப்புவதற்கும் அவர் உறவினர்களின் பேச்சுக்களை சமாளித்துள்ளார், இப்பொழுது நான் சென்று என் நிலைமையைக் கூறினால் உறவினர்கள் என்ன சொல்லுவார்கள், என்ன சொல்லி ஏசுவார்கள்?’
‘மேம், நீங்கள் அப்பாவிடம் இருந்து பணம் வாங்கப் போகிறீர்களா, அல்லது அந்த உறவினர்களிடம் இருந்தா? உறவினர்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள்’
‘ஆனால் நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எனது அப்பாவிடம் மேலும் பணம் கேட்க முடியும்? இந்த வயதில் நான் அவருடைய கஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும், தோள் கொடுத்து அரவணைக்க வேண்டும், நான் எப்படி அவருக்கு மேலும் சுமையாக முடியும்?’
‘நான் உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா, சிறிய வயதில் உங்களுக்கு என்ன பிடித்தமாய் இருந்தது?’
சிறிது வெட்கமும், நாணமும் கலந்து ‘சிறிய வயதில் எனக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது மிகவும் பிடித்தமானதாக இருந்தது’
‘அப்படியா, உங்களிடம் சைக்கிள் இருந்ததா? உங்களுக்கு சைக்கிள் எப்பொழுது கிடைத்தது?’
‘ஓர் எட்டு வயது இருக்கும் போது எனக்கு கிடைத்தது’
‘கேட்டவுடன் கிடைத்து விட்டதா?’
‘இல்லை, நீ கீழே விழுந்து விடுவாய், அடிபட்டு விடும் என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தார்’
‘பிறகு எப்படி உங்களுக்கு சைக்கிள் கிடைத்தது?’
‘நான் மிகவும் பிடிவாதம் பிடித்தேன், மிகவும், சாப்பாடு தூக்கமில்லாமல் முரண்டு பிடித்தேன்’
‘ஒரு சைக்கிளுக்காகவா நீங்கள் அப்பொழுது அப்பாவிடம் இவ்வளவு பிடிவாதம் பிடித்தீர்கள்? உங்களுக்கு அவமானமாக இல்லை?’
‘இது என்ன கேள்வி!? அப்பாவிடம் அடம் பிடிப்பதில் என்ன அவமானம்? வேறு யாரிடம் சைக்கிளுக்காக கேட்க முடியும்?’
‘சிறிய வயதில் சைக்கிளுக்காக அடம் பிடிப்பதற்கு அவமானம் இல்லை என்றால் இப்பொழுது அப்பாவிடம் பணம் கேட்பதிலோ அல்லது உங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதிலோ என்ன தயக்கம்? ஒரு தடவை நீங்கள் துக்கத்தை உங்கள் அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், அவரை விட சிறந்த நண்பன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது, ஒரு தடவை, ஒரே ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்,
நடுங்கும் கரங்களுடன் அதிதி தனது அப்பாவிற்கு ஃபோன் செய்கிறாள்.
‘ஹலோ, சொல்லு குழந்தாய், என்ன விஷயம்?’
‘அப்பா எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், அப்பா நான்’
‘சொல்லு குழந்தை, ஏன் தயங்குகிறாய்?’
‘நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்’
‘சொல்லு கண்ணே, எது உன்னை சங்கடப்படுத்துகிறது? என்ன விஷயம் அதிதி, ஏன் அழுகிறாய்? சொல்லு என்ன ஆயிற்று?’
‘நான் வங்கியில் இருந்து படிப்பிற்காக கடன் வாங்கி இருந்தேன் அல்லவா?’
எல்லா விஷயங்களையும் விவரிக்கிறாள்.
‘குழந்தாய் எது நடந்ததோ அது நடந்து விட்டது, இப்பொழுது நீ எதற்கும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன் அல்லவா, உன்னுடைய அப்பா இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார், நான் நாளைக்கே உன்னை வந்து பார்க்கிறேன், நீ துளி கூட கவலைப்பட வேண்டிய அவசியமில்லை’
‘அப்பா கண்டிப்பாக நீங்கள் வந்து விடுங்கள் நாளைக்கு’
‘மேம், பார்த்தீர்களா உங்களுடைய அப்பா உங்களுடைய ஒரு ஃபோனுக்காக உடனே ஓடி வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள், நீங்கள் தனியாக இத்தனை நாட்கள் சங்கடப்பட்டு கொண்டு இருந்தீர்கள், பெற்றோர்களை விட இந்த உலகத்தில் சிறந்த நண்பன் இருக்கவே முடியாது, அவர்களை ஒரு தடவை நீங்கள் நண்பர்களாக கருதுங்களேன்’
‘ஆம், நீங்கள் சரியாக சொல்கிறீர்கள், மிகவும் நன்றி, மிகவும் நன்றி’
‘இந்தாருங்கள் உங்களுக்காக என்னிடம் உண்மையில் ஒன்று இருக்கிறது, இது உங்களுக்காக’
‘என்னது இது, பகவத்கீதையா!
நீங்களும் இதை படியுங்கள், ஒருவேளை உங்களுக்கு வேறு விஷயங்களும் இதில் புலப்படலாம், ஆனால் எது ஒன்று கிடைத்தாலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், ஏனென்றால் ஞானம் பகிர்வதால் வளர்கிறது’
ஆம், இப்பொழுது நடந்த கோர விமான விபத்தில் கூட ஒரு கீதை புத்தகம் ஒரு சேதமும் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டதாக நாம் பார்க்கிற ஓர் அதிசயம் அன்றோ!

Excellent story. திறமையான எழுத்தாளர்.
ஒரு நல்ல கதையின் பண்பு கடைபிடித்ததால் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
LikeLike
ஒரு தெய்வம் நேரில் வந்தது என்பது போல, உதவிகள் யார் மூலமோ கிடைத்து நிவாரணங்கள் பெறப்பட்டு விடுகின்றன.
எங்கள் பிளாக் ஸ்ரீராம்
LikeLike
எந்த நிலையிலும் பெற்றோரைப் போல் உதவ வேறு யாரும் இல்லை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார் கதை ஆசிரியர்.
LikeLike
Blessing in disguise அதிதிக்குத் தகுந்த நேரத்தில்!
கீதா
LikeLike