ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான புத்தகங்கள்
- பொன்னியின் செல்வன் – பல பதிப்புகள் – பல லட்சங்கள்
- ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க – கோபினாத் – சிக்ஸ்த் சென்ஸ் 2 லட்சத்திற்கு மேல்
- ‘பெண் ஏன் அடிமையானாள்?’ – தந்தை பெரியார்
- ஆயிஷா – இரா நடராசன் – 2 லட்சத்திற்கு மேல்
- நேரம் நல்ல நேரம் – லேனா தமிழ்வாணன் – 4.5 லட்சம் – மணிமேகலை
- சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ – காலச்சுவடு
- சோம வள்ளியப்பனின் ” அள்ள அள்ளப் பணம் ( 10 Series) – 3 லட்சத்திற்கு மேல் – கிழக்கு
- கி மு கி பி – மதன் -கிழக்கு
- பணம் சார் உளவியல் – 2,5 லட்சம்
- உலக சினிமா – செழியன் -விகடன்
- துணையெழுத்து – எஸ் ராமகிருஷ்ணன் – தேசாந்திரி
- வேள் பாரி – சு வெங்கடேசன் – விகடன்
- அர்த்தமுள்ள இந்துமதம் – கண்ணதாசன் – கண்ணதாசன் பதிப்பகம்
- அக்னிச் சிறகுகள் – அப்துல்கலாம் – கண்ணதாசன் 5 லட்சம்
- ஜெய ஜெய சங்கரா – ஜெயகாந்தன்
இன்னும் எத்தனை இருக்கிறதோ? வாசகர்களே கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்.
உலக சினிமா (செழியன்)



செழியன் (Chezhiyan) தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆவார்.
இவர் உலக சினிமா குறித்த நிகழ்வுகளைத் தொடராக 2005 முதல் 2007 வரை ஆனந்தவிகடனில் எழுதினார். இத்தொடர் ”உலக சினிமா” என்ற நூலாக வெளிவந்தது.
கார்மோனியம் (2004) என்ற சிறுகதைக்காக கதா விருதினைப் பெற்றார்.
”தமிழ்ச் சிறுகதைகளில் உளக்காட்சிகள்” (2004-2006) என்ற ஆய்வுக்காக இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் விருது பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர் செயகாந்தன் ஆகியோர் பற்றிய ஆவணப் படங்களைத் தயாரித்துள்ளார்.
இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியாக தெற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள நூல்களை வெளியிட்டுள்ளார். தெற்கத்திய இசை, பேசும் படம், முகங்களின் திரைப்படம் ஆகிய பத்து தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.
2012இல் நார்வே தமிழ் சினிமா திருவிழாவில் ”கள்ளத் தோணி” குறும்படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினைப் பெற்றார்
இவர் இயக்கிய டூலெட் தமிழ்த் திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.[3]
திரைப்படத்துறை
கல்லூரி (2007)
ரெட்டச்சுழி (2010)
மகிழ்ச்சி (2010)
தென்மேற்கு பருவக்காற்று (2010)
பரதேசி (2013)
தாரை தப்பட்டை (2016)
சவாரி (2016)
ஜோக்கர் (2016)
டுலெட் (2017)
குறும்படங்கள், ஆவணப்படங்கள்
திருவிழா (2002)
எல்லைகள் விசாரித்த எழுத்துக் கவிஞன் (2011)

