மனிதச் சங்கிலிப் போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா
1.
இயக்குனர் ராம், மம்முட்டி நடிப்பில் வெளியான “மாமாங்கம்” திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்காக வசனம் எழுதியுள்ளார்.
2.
“வசனமிக ஏற்றி” என்பது அருணகிரிநாதர் பழநி தலத்தில் இயற்றிய திருப்புகழ் பாடல்களில் ஒன்றாகும்.
3.
பழனியின் சங்ககாலப் பெயர் பொதினி. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆவினன்குடி என்று குறிப்பிடார்.
4.
குடியுரிமை சட்டம் இந்தியாவில் இதுவரை ஆறு முறை திருத்தப்பட்டுள்ளது.
5.
ஆறு கனவில் வந்தால் பொதுவாக ஓட்டம், முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் குறிக்கிறது.
6.
“பாதை மாறிய பழமொழிகள்” எனப்படுவது, சில பழமொழிகள் காலப்போக்கில் அவற்றின் உண்மையான பொருளை விட்டு விலகி, வேறு பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்படுபவை
7.
வகையறா என்ற சொல், தொடர்புடைய நபர்கள் அல்லது பொருட்களைக் குறிக்கும் ஒரு சொல்.
8.
பொருட்பால் (திருக்குறள்) அதிகாரங்களில் ஒன்றான
பொச்சாாவாமை மறதியை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
9.
மறதிநோயை (டிமென்ஷியா) தடுக்க நிரூபிக்கப்பட்ட வழிகள் எதுவும் இல்லை . ஆனால் மூளையை ஆரோக்கியமக வைத்திருக்க சமூகத் தொடர்பு உதவுகிறது.
10.
தமிழின் முதல் தொடர்கதை பி.ஆர். ராஜமய்யர் எழுதிய “கமலாம்பாள் சரித்திரம்”, 1895-96ல் “விவேக சிந்தாமணி” இதழில் வெளிவந்தது.
11.
சிந்தாமணி ஒரு செய்யுள் வகை நூல் மற்றும் ஒரு சமண காப்பியம் ஆகும்.
12.
காபி உற்பத்தியில் பிரேசில் முன்னணியில் இருந்தாலும், வியட்நாம், கொலம்பியா போன்ற நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் காபி உற்பத்தி செய்கின்றன.
13.
கொலம்பியப் பெண் தினம் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.
14.
நவம்பர் 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் “நொவெம்” (novem) என்றால் “ஒன்பது” என்று பொருள்.
15.
ஒன்பது துளைகள் நம் உடலில் இருப்பதாக ஞானிகள் கூறுவார்கள். அவை இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் + வாய் + ஜல + மல துளைகள் ஆகும்.
16.
துளையுடலிகள் (போரிபெரா) பல செல்களைக் கொண்ட ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர முடியாத இயங்கும் தன்மையற்ற நீர் வாழ் உயிரிகள்.சங்கிலி நீளும்….