கோலிவுட் பிரபலங்களின் செல்ல மகள்கள்.. க்யூட் போட்டோஸ் இதோ..
எதிரே ஒரு குழந்தை.
மழலையே இன்னும் மாறாத பருவம்.என்னோடு இக்குழந்தை…
இல்லையில்லை… இக்குழந்தையோடு நான் –
நாள்தோறும் ஆடுகிறேன் வார்த்தை விளையாட்டு.ஒவ்வொரு முறையும் நான் தோற்றுப் போகிறேன்.ஒவ்வொரு முறையும் குழந்தை சிரிக்கிறது.
உடன் சேர்ந்து
நானும் சிரிக்கிறேன்.சுற்றி…
எல்லாரும் சிரிக்கிறார்கள்.

எனக்குத் தெரியும்.
நான் தோற்கவில்லை.
தோற்று விட்டதாய் நடிக்கிறேன்.

குழந்தைக்கு குதூகலம்.
சுற்றி உள்ளோர்க்கு மகிழ்ச்சி.
எனக்கும்தான்.
ஆனால்..
எனக்குத் தெரியும்.
நான் தோற்கவில்லை.
தோற்றுப் போனதாய் நடிக்கிறேன்.

எனக்கு தெரியும் –

 

‘மீளவில்லை’.

 

மீள முயல்கிறேன்.
இயலாமல் சுழல்கிறேன்.

இயல்பாய் இருப்பதாய்
இயல்பாக நடிக்கிறேன்.

ஊர் நம்புகிறது.
ஊர் பாராட்டுகிறது.

நானும் நம்புகிறேன். என்னை நானே பாராட்டுகிறேன்.

பிறரால்
ஏமாறுவதைக் காட்டிலும்,
தெரிந்தே
தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதல்….

சிறுபிள்ளை விளையாட்டு, சிறுபிள்ளையோடு என்றால் சரி.

என்னோடு நானே எனும்போது…

ஆழத்தில்,
வெகு ஆழத்தில்
புதைந்து கிடப்பதில்
ஒரு வசதி!

மறைப்பதற்கு எளிதாய் இருக்கிறது.

மறைக்க முடிகிறது. மறக்கத்தான்…