இது ஒரு குவிகம் வெளியீடு !!
இன்னும் இளைஞர்களாகவே இருக்கும் ஐம்பது நபர்களைப் பற்றி எழுதியிருக்கும் இந்த நிகழ்காலப் புத்தகம் புத்தக பயணத்தில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும்.
அதுவும் குவிகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள புலவர் விஜயலட்சுமி, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் , டாக்டர் பாஸ்கரன், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா ராகவன், அழகியசிங்கர், திருப்பூர் கிருஷ்ணன், வாசுகி கண்ணப்பன், வ வே சு, வானவில் ரவி, கீழாமபூர், லேனா தமிழ்வாணன், கெ ஜி ஜவகர், வி எஸ் வி ரமணன் எழுதியிருப்பது போன்றவர்களுடன் இன்னும் பல சாதனையாளர்களைப் பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வரிகள் யாருடையவை? விடை கடைசியில் ..
வேதனையாகத் தானிருக்கும்
வெந்து தணிகிற என்னிதயம்
சித்ரவதை தானென்றாலும் வா
கைவிட்டாய் என்றோ என்னை
அதனாலென்ன துன்புறுத்த வா
உனக்காக எதுவும் பொறுப்பேன்
பழகிய தோஷத்திற்காக
இல்லையென்றாலும் வா
பழைய மூடச் சடங்குகளை
உண்மையில் நிறைவேற்ற வா
மனத் துயரத்தை நான் எத்தனை
பேருக்கு பலமுறை விளக்குவேன்
மனத் தாபம் உண்டென்றாலும்
மண்ணின் நலன் கருதி வா
உன் மீதான எனதன்பின்
ஆழமும் மரியாதையும்
மனதில் வைத்து ஒருமுறை
ஆறுதல் சொல்லிட வா
எனதேக்கத்தின் பரிதாபம்
என்றோ நீக்கி விட்டாய்
எனை அழவைக்க வாவது
எழுந்து மீண்டும் எதிரில் வா
இன்னும் கூட இதயத்தில் சில
எதிர்பார்ப்பு உண்டு தெரியுமா யென்
நம்பிக்கையின் கடைசி யொளியை
அணைத்து விட ஒருமுறை வா
உன் காதலை மௌனமாக்குவது
உண்மையான வழியென்றால் வா
உன் காதலை அமைதியாக
வெளிப்படுத்த அன்பே வா
வராமல் இருக்க காரணம் பல
வந்து தடுத்தாலும் நீ வா
வருவதற்கு சாக்கு போக்கிருந்தாலும்
வந்து அதைச் சொல்ல வா…
இது மொழிபெயர்ப்பு அல்ல… இதயத்தின் பிரதிபலிப்பு – தமிழில் ஒரு முயற்சி – பாலசாண்டில்யன்




வயதானவர்களைப் பற்றிய இந்நூலைப் பாராட்டி, இதில் இடம் பெற்றிருந்த ஒரு வயதானவர், பால சாண்டில்யனுக்கு ஒரு செக் கொடுத்தாராமே, அதில் ஒன்றுக்குப் பின்னால் ஐந்து பூஜியங்கள் இருந்ததாமே!
LikeLike