கல்மரம்

நாவல்: கல்மரம் 

ஆசிரியர் : திலகவதி 
விலை ₹₹250
பதிப்பு:  2005
பக்கங்கள்:  191
அம்ருதா பதிப்பகம் 

திலகவதி அவர்களின் கல்மரம் நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது.

இந்நாவல் கட்டடத் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றி பேசுகிறது; எக்காலத்திலும் சமூகத்தில் ஆபத்பாண்டவனாக சமூக சேவகர்கள் தோன்றி ஏழை மக்களின் துயர் போக்குவர்.மகாத்மா காந்தியும அப்படியான ஒரு சமூக சேவகரே!தென்ஆப்ரிக்க மக்களின் அவலம் தீர அங்கு அவர் படாத பாடு பட்டார்.அதன் தொடர்ச்சியாகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அதேபோல் இந்நாவலில் சுசிலா என்னும் கதாபாத்திரம் உலாவுகிறது.கதாநாயகி ராகினிக்கும் அவளது நாத்தனாரான காவேரிக்கும் தைரியத்தை ஊட்டுவதுடன் சட்டம் மற்றும் குடியுரிமை பற்றியும் எடுத்தோதுகிறாள்.

சுமூகத்தில் பெணகள் நினைத்தால் சோம்பேறி ஆணையும் சுறு சுறுப்பு உள்ளவனாயும் தன்மானமி க்கவனாயும் திருந்தி வாழ வைக்க முடியும் என்ற உண்மையை கதாசிரியர் ராகினி மூலம் நிலை நிறுத்துகிறார்.அவள் தன் கணவன் காசியை மது மற்றும் புகைப் பழக்கத்திலிலிருந்து மீட்டெடுக்கிறாள்.தன் அண்ணன் மூலம்;;;;;; அவனுக்கு வேலை ஏற்பாடு செய்து அவனும் அவனது குடும்பமும் வயிற்றுக்கு குறைவில்லாமல் கஞ்சி குடிக்க வழிசெய்கிறாள் ;.இதனால் அவர்கள் தன்மானத்துடனும் வாழ முடிகிறது.

தாய்மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் தந்து அதை தக்க சம்பவத்தோடு வெளிப் படுத்துகிறார் கதாசிரியர்.ஆதிலட்சுமியின் மகன் காசியே கதாநாயகன்.மகன் சோம்பேறி யாயிருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்காது பேசி வருகிறாள் தாயானவள்.வேலைவெட்டி இல்லாத அவனுக்கு பெண் பார்த்து மணமும் முடித்து வைக்கிறாள்.இங்கு தாய் ;பிள்ளை பாசம் பொங்குகிறது. இது அன்னையரிடமுள்ள அன்பின் பிரதிபலிப்பு.

தாயின் வாழ்க்கை அங்கு எந்நேரமும் பயத்துடனே கழிகிறது.கணவனை இழந்த அவள் தன் மக்களை எவ்வாறு கரை சேர்க்கப் போகிறோம் என்ற பரிதவிப்பிலேயே இருக்கிறாள்.மகள் காவேரி வறுமையின் நிமித்தம் எவனையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிவாளோ என்று பயம் கொள்கிறாள்.கடையில் வேலை செய்யும் ரொட்டி மாஸ்டருடன் பேசக் கூடாது என அவளுக்கு தடை போடுகிறாள்.மகளின் கொலுசை ரேசன் வாங்க அடமானம் வைக்க முதலில் நினைத்த ஆதிலட்சுமி பின் மகளின் மனசைக் கெடுக்க நினையாது தனது மூக்குத்தியை அடமானம் வைக்க எண்ணுகிறாள்.கணவன் வீட்டிலிருந்து வந்துவிட்ட தன் மூத்தமகளை நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறாள். இங்கு ஒரு குடும்பத் தலைவியின் பொறுப்புணர்ச்சி நிழலாடுகிறது.

காசி தன் மனைவியான ராகினி அவனை கேட்கும் கேள்விகளால் பொங்கி வரும்;; கோபத்தை குடும்ப நலன் கருதி அடக்குவது சிறப்பு.அவளுக்குப் பயந்து புகை பிடிப்பதைத் துறக்க முயல்வதும் அவள் முன் தன் இயலாமையை வெளிப் படுத்துவதும் அவன் பண்பட்ட மனிதனாக ஆகிவிட்டான் என்பதை ருசுப் படுத்துகிறது.

எம் ஆர் எம் என்கிற கட்டட உரிமையாளரது சுயநலம ;அவனை கொடூரனாக்குகிறது. காரியம் ஆகவேண்டுமென்பதற்காக தொழிலாளர்களுக்கு அவ்வப் போது காசை விட்டெறிகிறான். இது அவனது சரியான முதலாளித்துவத்தைக் காட்டுகிறது. கள்ளப் பணத்தை ராகினி மூலம் ஒளித்து வைக்கிறான். ஏந்தவித திருட்டுப் புத்தியும் இல்லாதவர்களே ஏழைகள் என்பதை ராகினி மூலம் கதாசிரியர் நிறுவி இருப்பது சிறப்பு.

சுசீலா தன் சமூக சேவைப் பணியின் ஒரு கட்டமாக அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட சங்கத்தில் அவர்களை இணைத்து அவர்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறார்.
மொத்த்தில் கட்டடத் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை விலாவாரியாக விவரித்து இந்த நாவலை சமுதாயத்திற்கு அளித்திருப்பது அத்தொழிலாளர்களின் மத்தியில் விழிப்ர்ணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இது போன்ற நாவல்கள் மென்மேலும் எழுதப்பட்டு சமூகத்தில் பரவ விட வேண்டும்.

இதற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கியிருப்பது சாலச் சிறந்தது.

கதாசிரியர் போற்றுதலுக் குரியர்!