(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

குவிகம் குறும் புதினப் போட்டி (26 -27 ஆம் ஆண்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்                                 ( அகர வரிசையில் )

 குவிகம்  குறும் புதினப் போட்டி   2026 -27 ஆம் ஆண்டு  
          போட்டிக்கு வந்த கதைகள்   117 
  பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த  கதைகள்    24 
Name of the Story AUTHOR
அரங்கநாதனின் அடுத்த அத்தியாயம் நந்து சுந்து
அவன்(ள்)கள் கே.ஆனந்தன்
அழுக்காறு எனும் பாவி…. யசோதா சுப்ரமணியன் 
ஆதவன் உதயமானான் சாரதா ஸ்ரீனிவாசன்
உதிராத உறவு தேவகி கருணாகரன்
கண்ணாடி வாழ்க்கை இரா. கலைச்செல்வி
காகித ஓடம் தி வள்ளி
சங்கொலி கவிதா ராமதாஸ்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் மோகனா சச்தேவ்
சீதாயணம் சாதிக் ஐஷ்வர்யன்
சூனியத்தின் சிரிப்பு எம் சங்கர்
டைகர் செல்லம் இரா. சைலஜா சக்தி,
தரிசனம் கணேஷ்ராம்
தூண்டில் புழுக்கள் கல்பனா சன்யாசி
தேடல் ரமணன்.vsv
நங்கவரித் தீவு கார்த்திக் ஸ்ரீநிவாஸ் 
நாகாக்க யாரோ
மணம் மாறும் மலர்கள் அனுராதா ஜெய்ஷங்கர் 
மனிதக் காட்சி சாலை ! ஜனமேஜயன்
யசோதாக்கள் வசந்தா கோவிந்தராஜன்
யார் போட்ட கை விலங்கு ? குரு அரவிந்தன்
வசுதேவ குடும்பகம் H.ராஜாமணி
வலிகளின் ருசிகள் அறிவுச்செல்வன்.
வெள்ளை நிறத்தொரு பறவை முகிலை இராசபாண்டியன்

குவிகம் குறும் போட்டிக்கு கதைகள் அனுப்பிய அத்தனை எழுத்தாள நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. 

இந்த ஆண்டு  117  கதைகள் வந்துள்ளன. 

வந்திருந்த அனைத்துக்  கதைகளையும்  ஆராய்ந்து மதிப்பீடு  அளித்த நடுவர்களுக்கு நன்றி.

அவற்றுள் மேலே குறிப்பிட்ட 24 கதைகளை மதிப்பீட்டின் படி பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இவற்றிற்கு ரூபாய் ஆயிரம் சன்மானம் உண்டு.  

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை எழுதிய கதாசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள். 

இவற்றுள் முதல் பரிசு 10000 இரண்டாம் பரிசு 6000 மூன்றாம் பரிசு 4000 பெறப்போகும் கதைகள் எவை?  அதற்கான நடுவர் கதைகளை ஆராய்ந்து முடிவு தெரிவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்.

 பரிசு பெற்றவர் விவரம்  விரைவில் அறிவிக்கப்படும். .

அதேசமயம் தேர்ந்தெடுக்கப்படாத மற்ற  கதைகளும் எந்த வகையிலும் இளைத்தவை அல்ல. மாதம் 2 குறும் புதினம் என்று வருடத்திற்கு 24 குறும் புதினங்கள் மட்டும் பிரசுரிக்க இயலும் என்ற ஒரே காரணத்தால்  மற்றக்  கதைகளை நிராகரிக்க வேண்டி உள்ளது. அந்தக் கதைகளை மற்ற பத்திரிகைக்கு அனுப்பினால் அவற்றிற்குப்  பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை. அதனால் அந்தக்  கதைகள் எழுதிய நண்பர்கள் தொடர்ந்து குவிகத்திற்கு ஆதரவு  அளிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். 

 மேலே தேர்ந்தெடுக்கப்பட்ட 24 குறும் புதினங்களும் குவிகம் குறும் புதினம் இதழ்களில் ஏப்ரல் 2026  முதல்  மார்ச் 2027  வரை மாதம் இரண்டாக வெளிவரும்.