நாம் குழந்தையாக இருந்த போது நடந்த எதுவுமே நம் நினைவில் இல்லாதது ஏன்? - BBC News தமிழ் வெட்கம் கலந்த சிரிப்பு பளிச்செனக் கவர்ந்து ஆழமாக மனதில் பதியும் அது போன்றதொரு அழகான சிரிப்பு இது :)மகிழ்ந்த போது மலர்ந்த சிரிப்பு மறைந்த போதும் மனதில் நிலைத்த #அவள் #சிரிப்பு!! #கவிதை #காதல் #rammu24Thaai Kizhavi Movie Photos - Cinema Arattai

கடிகாரம் சிலிர்த்தது.

தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளையைக் கடைமையாகச சத்தம் போட்டு செய்து முடித்தது.

பொழுது புலர்ந்தது.

நானும் என் கடைமைகளைச் செய்ய பளிச் என்றுஎழுந்தேன். காபி குடிக்க டைனிங் டேபுள்க்கு என் கணவர் வந்தார்.

“என்னங்க இன்னிக்கு ஸ்கூல்ல புரோகிராம், மதியம் 1 மணிக்குபோகணும். நீங்களும் வரீங்களா ? ஆபீசில் பர்மிஷன் போட முடியுமா?“என்றேன்.

“என்னால வரமுடியாது. இந்த வாரம் ஆடிட்டிங் நடக்கிறது. நீமட்டும்போய் வா” என்றார்.

“நான் போன மாதம் நிறைய பர்மிஷன் போட்டேன். இன்று நான் லீவு தான்போடணும்.” என்றேன்.

“நீயே எப்படி சமாளித்துக்கொள்” என்று சொல்லிவிட்டு விரைவாகஅலுவலகம் சென்று விட்டார்.

இந்த பதில் தான் சொல்லுவார் என்று எனக்குத் தெரியும். என் மனம் சொன்னது. ‘எப்போது எந்த கெடுபிடியானவேலை வந்தாலும் என் தலையில் தான். அவர், அவர் வேலைக்குகொடுக்கும் முக்கியத்தை என் அலுவல்களுக்கு கொடுக்க மாட்டார். என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு இல்லை. இவரிடம் எதிர்பார்த்து பலமுறை ஏமாற்றம் பெற்றதுண்டு. வாக்கு வாதம் தான் மிச்சம். சண்டைச் சச்சரவை தவிர்க்க நான் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டேன், ’முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் குறுக்க வந்து பேசாதே’ என்பார். நான்பேசுவதைக் குறைத்துக்கொண்டேன். டிவியில் காமடி வந்தால் சிரிப்பேன். “இந்த மொக்கை ஜோக்குக்கு எல்லாம் நீ சிரிப்பாயா ? கொஞ்சம் மெச்சூராக நடந்துக்கொள்.” என்று சுருக்கென்று கேட்பார். டிவி பார்ப்பதை நிறுத்திக்கொண்டேன். அவர் எதிரில் சிரிப்பதையே விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் என் அலுவலகத்தில் யாரேனும் ஜோக் சொன்னாலும் சிரிப்பு வர மாட்டேன்கிறது.

வி ஜி பி தங்க கடற்கரையில் வாயிலில் ஒரு வாயிற்காப்பாளன் அசையாமல்நிற்பார். அவரை யாரேனும் சிரிக்க வைக்க வேண்டும் என்று பலர் முயற்சி செய்வார்கள்.என்று நினைவுக்கு வந்தது.

ஓகே ஓகே! ரேஷன் கடைக்கு சென்று சாமான் வாங்கி விட்டு, எனக்கு பல்டாக்டரை பார்த்துவிட்டு ஸ்கூலுக்கு சென்றேன். என் மகன் இரண்டாம்வகுப்பு படிக்கிறான். அவன் ரைம்ஸ் பாடும் போட்டி நடந்தது. நன்றாகப் பாடினான் .அடுத்து மாறு வேட போட்டி. சிறுமிகள் சிறுவர்கள் பல வேடங்களில் வந்துசென்றார்கள்.ஆடியன்ஸ் பெற்றோர்கள் சேரில் அமர்ந்து இருந்தோம். அப்பள்ளி மாணவமாணவிகள் சற்று முன் வரிசையில் சின்ன சேரில் அமர்ந்து மேடையைபார்த்துக் கொண்டிருந்தார்கள்.மேடையில் ஒரு மாணவன் ஜோக்கர் வேடம் போட்டு குதித்துக்கொண்டே வந்தான்.அவன் தோற்றம், பெருத்த வயிறு, மூக்கின் மேல் சிவப்பு நிற பந்து.அவ்வளவுதான் அந்த ஜோக்கரை பார்த்து இங்கே சிறாக்கள் ஒரே ஆரவாரம். அனைத்து மாணவி மாணவர்களும் ஒவ்வொருவராக எழுந்துகொண்டு அவர்களும் மேலும் கீழும் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

“ஜிம்கு ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜிம்கு ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்டையான் டப்பான் டையான் டப்பான் டமுக்கு டிப்புட்டான்” என்றுமேடையில் அவன் குதிக்க, இங்கு அனைத்து மாணவ செல்லங்களும் சேர்ந்திசை பாடினார்கள், ஆடினார்கள். ஒரு பெண் குனிந்து குனிந்து எழுந்து சிரிக்கிறாள். ஜோக்கரைப் பார்த்தால் அத்தனை சந்தோஷம். ஆசிரியர்கள் கூட இதை எதிர் பார்க்கவில்லை போலும். அதனால்அவர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்தவும் இல்லை.

அடுத்து ஒரு மாணவன் வந்தான் – நீள வாலுடன். ஆம்.“ஜெய் ஜெய் ஶ்ரீராம். ஜெய் அனுமான், ஜெய் அனுமான்.” என்று தாவித் தாவிக் குதித்தான்.பலத்த கை தட்டலுடன் குழந்தைகள் பூரிப்பு. அந்த அனுமான் மேடையிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டான். எல்லா மாணவசிறாக்களும் அனுமான் வாலைப் பிடித்துக்கொண்டு ஓடினார்கள். மகிழ்ச்சி, ஆரவாரம். தேர் வடம் இழுப்பது போல் இருந்தது.நான் ஆடிப்போய் விட்டேன். அந்த கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு. தூய்மையான சிரிப்பு. பூ மொட்டுக்கள் விரிந்து மலர்ந்தது போல் மாணவ செல்வங்கள், நம் கூட்டிச் செல்லங்கள். பளீர் என்ற முக மலர்ச்சி, குதூகலம். ஒரு கவலையும் இல்லாத பிள்ளை பருவம்.“ஓ என்று சத்தமாக பாடினால் -யார் என்ன நினைப்பார்கள் ? குதித்தால்டீச்சர் திட்டுவாரா?”என்று எந்த யோசனையும் வேண்டாத மாணவப் பருவம். அந்த சிலநிமிடங்களை சந்தோஷமாக சிரித்து அனுபவிக்கும் குழந்தைகள். அற்புதம். அற்புதமான தருணம். என்னை அறியாமல் என் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணரைத் துடைத்துக்கொண்டேன்.மனிதனுக்கும் விலங்கிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்-“விலங்குகளுக்கு அழக்கூடத்தெரியும். ஆனால் சிரிக்கத் தெரியாது.மனிதன் மட்டும் தான் சந்தோஷம் என்ற உணர்வை வெளிப்படுத்த சிரிப்பு என்ற பாவத்தை முகத்தில் காட்டுவதற்கு வரம் பெற்றுள்ளான்.” என்றுபடித்த ஞாபகம்.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்.

பல பெற்றோர்கள் கை தட்டினார்கள். என் கைகளும் பலமாக ஓசைஎழுப்பியது. எனக்கும் என்னை அறியாமல் சிரிப்பு வந்தது. சிரிப்புடன்கலந்து கேவலுடன் அழுகையும் வந்தது.இருக்கமான என் மனம் லேசானது.யாரும் பார்ப்பதற்குள் துடைத்துக்கொண்டேன்.

பல வடிவமாகப்  பல கேள்விகள் எழுந்தது.“நான் எதைத் தொலைத்து விட்டு நிற்கிறேன் ? சந்தோஷத்தையா ?இல்லை. சிரிப்பை. சிரிப்பு என்ற உணர்வை தொலைத்துவிட்டு நிற்கும் நான் ஒரு முட்டாள். எனக்கு சிரிப்பு வந்தால் நான் – சிரிப்பேன். சிரிப்பது என் உரிமை. என்பழக்கம்.உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீயும் முயற்சி செய். யாருக்காகவும் நான் என் சிரிப்பை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றுமுடிவு செய்தேன். சந்தோஷத்தை ஏன் மனதிற்குள் பூட்டி வைத்துக்கொள்ளணும்? அதுவா அறிவின் முதிற்சி ?இல்லை. இல்லவே இல்லை. முக மலர்ந்தது போல் வெளிப்படையாகச் சிரிக்கணும். என் சந்தோஷம் என் கையில். சந்தோஷத்தை வெளியே தேடுதல் தவறு. நம்மில் எத்தனை பெயர் சிரிப்பை மறந்து வாழ்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இக்கட்டான நேரங்களிலும் சற்று பொறுமையாகச் சிரித்துவிட்டு அமைதியாக இருந்தால் எல்லாக் குழப்பத்திற்கும் விடை கிடைக்கும்.

நான் மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Meta Title: சிரிப்பு சம்பவங்கள் - தமிழர்களின் நகைச்சுவை நிமிடங்கள் | சிரி சிரி கதைகள்