கண்ணதாசன் முதலில் நாத்திகராக இருந்து பின்னர் தீவிர ஆத்திகரானார் என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படிப்பட்ட கண்ணதாசனைப் பற்றி அவருக்கு மாற்று அரசியல் தளத்தில் இருந்த சுபவீயின் உரையைக் கேளுங்கள்.
கொள்கை வேறாக இருந்தாலும் தமிழின் நாயகன் கண்ணதாசனை அவர் போற்றுவது சிறப்பு
திருக்குறளைப் போல ஒரு பொருளும் இல்லை!
மூவாத சிலம்பின்றேல் கூத்துமில்லை!
தப்பாத புறமின்றேல் வீரமில்லை!
தளிர்போலும் அகமல்லால் காதலில்லை!
எப்போதும் தமிழ்மொழி போல் ஒரு மொழியே இல்லை!
இருக்கிறதென்பான் தாய் பெண்ணே இல்லை!
– கண்ணதாசன்
தான் பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம் என்று தான் தாயன்று மாண்டு போனாள்.
தந்தையும் இப்பிள்ளை உருப்படாதென்று தான் தணலிலே வெந்து போனான்.
ஊன் பெற்று உயிர் கொடுத்த இறைவனும் உயரத்தில் நின்று கொண்டான்.
உதிரத்தில் அணுவிலே தமிழன்னை மட்டுமே உறவாக வந்து நின்றாள்.
வான் பெற்ற பேறு போல யான் பெற்ற தமிழிலே வாழ்கிறேன் வண்ணமயிலே!
– கண்ணதாசன்
