புத்தகக் கண்காட்சி 49: இந்த ஆண்டும் (2026) புத்தகக் கண்காட்சி வழக்கமான கோலாகாலத்துடன் ஜன 8 முதல் 21 வரை நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டால்கள். நெடுஞ்சாலையிலிருந்து கண்காட்சி இடத்திற்கு வர மினி பஸ்கள்.  

“வாசிப்பின் வாசம் வீசும் புத்தகக் கண்காட்சி!புத்தகக் கண்காட்சி என்பது வெறும் புத்தகங்களை வாங்கும் இடம் மட்டுமல்ல. அது அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு மேடை” என்று சொல்கிறது கல்கி ஆன்லைன். 

விகடன் :

13 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 15 முதல் 20 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி புத்தகங்களில், சுமார் 40% முதல் 50% வரை (சுமார் 40 முதல் 50 லட்சம் புத்தகங்கள்) விற்பனையாகியுள்ளன.

விற்பனையான புத்தகங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் அதிக அளவில் விற்பனையாகின.

“தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் புத்தகத்திற்கு என்று ஒரு நிரந்தரப் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. அதை நடத்தும் பபாஸி  சங்கத்தில் இன்று 489 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் மற்றும் விற்பனை செய்யும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் உள்ளனர். இந்தக் கூட்டமைப்பு இதுவரை சென்னையில் 41 ஆண்டுகளும், மதுரையில் 12 ஆண்டுகளும், கோவையில் 4 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை வருடந்தோறும் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறது” – என்று கூறுகிறது பபாசி. 

இந்த முறை அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரைகண்காட்சி நடைபெற்றது. 

 புத்தகக்  கண்காட்சியில் முதல்முறையாக பார்வையாளர்களுக்கு இலவச  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  அறிவித்துள்ளது.

 

அதன்படி,

கவிதை – கவிஞர் நா. சுகுமாரன்

சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

நாவல் -எழுத்தாளர் ரா.முருகன்

உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி)

நாடகம் – கே.எஸ். கருணா பிரசாத்

மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நண்பர் அழகியசிங்கரின் ஸ்டாலில் நமது குவிகம் நண்பர்கள்சென்று  புகைப்படம் எடுத்து வாங்கிய புத்தகங்களையும் தங்கள் அனுபவங்களையும்  முகநூல் வாட்ஸ் அப் தளங்களில் பதிவு செய்து   மகிழ்ச்சியடைந்தார்கள்.

(ஒரு பழைய புகைப்படம் நினைவிலிருந்து இங்கு வந்துள்ளது.) 

No photo description available.

 

 

நண்பர் ராஜாமணி குவிகம் வாசகர்களுக்கென்று ஒரு நேரடி ஜூம் நிகழ்ச்சியைச் சிறப்பாகச்  செய்தார். வெளியூரில்  இருக்கும் புத்தகப் பிரியர்களுக்கு நேரில் சென்ற உணர்வை ஏற்படுத்தினார். அதன் காணொளி இதோ: