இந்த மாதமும் வங்கியிலே, மண்டலங்களுக்கு இடையேயான நாடகப் போட்டியில் பங்கு பெற்று, நாடக எழுத்தாளருக்கு பரிசு பெற்றுத் தந்த ஒரு நாடகம்…

சினிமா: ரோஜா படத்திற்கு பிறகு 30 ஆண்டுகளில் முஸ்லிம்களை காட்டும் விதம் எப்படி மாறியுள்ளது? - BBC News தமிழ்
இதில் மேலும் ஒரு விஷேசம் இருக்கிறது. அப்படி பரிசு வாங்கிய எழுத்தாளர், நம் அனைவருக்கும் தெரிந்த, சமீபத்தில் அமரரான நம் நண்பர் திரு C R ஈஸ்வரன் அவர்கள். அவரின் நினைவுக்கு அஞ்சலியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

 ஒரு பெரிய அதிகாரி தீவிரவாதிகளால், காஷ்மீரில் கடத்தப்படுகிறார். சிறையில் இருக்கும் சில பயங்கரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை. 3 நாட்களில் விடுவிக்காவிட்டால், அவரை சுட்டுக் கொன்று விடுஎன்வோம்  சொல்ல நாடு முழுவதும் பரபரப்பு. அடுத்த நாள் ஒரு மந்திரி கடத்தப் படுகிறார். அவர்களின் நிபந்தனை மிக வினோதமானது. தீவிரவாதிகளை விடுவிக்கக் கூடாது. விடுவித்தால் மந்திரி கொல்லப் படுவார் என்று செய்தி வெளியிடுகிறார்கள். அரசுக்குத் திண்டாட்டம். என்ன செய்வது என்று பல கட்ட, உயர் மட்ட ஆலோசனை. பத்திரிகைகளுக்கு கொண்டாட்டம். வித விதமான செய்திகள்.

மந்திரியைக் கடத்தியவர்கள் சாதாரண மாணவர்கள் சிலர். அவர்கள் மந்திரியை கட்டி வைத்திருக்கிறார்கள். மிக மிக கண்ணியமாக, நன்றாக நடத்துகிறார்கள். அந்த இடத்திலிருந்துதான் நாடகம் ஆரம்பம். மந்திரிக்கு உணவு கொடுக்கிறார்கள். “வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்கிறார்கள். மந்திரி “ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ? நீங்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர ஏற்பாடு செய்கிறேன். என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். நீங்கள் எளிதில் மாட்டிக் கொள்வீர்கள். முட்டாள்தனம் செய்கிறீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு, கண்டிஷன்  என்ன ” என்று கேட்கிறார்.

அப்போதுதான் அவர்கள் மேலே சொன்ன விஷயங்களை விளக்குகிறார்கள். “எந்த காரணம் கொண்டும், தீவிரவாத, பயங்கரவாதிகள் விடுவிக்கப் படக்கூடாது. நூற்றுக் கணக்கான அப்பாவிகளை கொன்றவர்கள், முடமாக்கியவயவர்கள், அனாதையாக ஆக்கியவர்களை விடுவித்தால், அவர்கள் மேலும், மேலும் இது போலவே செய்வார்கள். யாருக்கும், பயமில்லாமல், மேலும் பலர் பயங்கரவாதிகளாவார்கள். அதை தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. அதைவிட முக்கியம் எவ்வளவோ கஷ்டப்பட்டு சில ராணுவ, போலீஸ் அதிகாரிகளும் உயிர்த் தியாகம் செய்து அவர்களை பிடித்திருக்கிறார்கள். அவர்களை சிறையில் அடைக்க எவ்வளவு சட்டப் போராட்டம்… உங்களைக் கொல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை. என்ன ஆனாலும் அப்படி செய்ய மாட்டோம். பின்னர் அந்த பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இது ஒரு புது முயற்சி. வெற்றி பெரும் என்று நம்புகிறோம்.” என்று அந்த மாணவர்களில், தலைவன் போல இருப்பவன் சொல்வான்.

மந்திரி அசந்து போய். “சபாஷ் நல்ல திட்டம். இப்போ என்ன நடக்கும்? அரசு என்ன செய்யும் ?.”

“அவர்கள் இப்போது ,அதிகாரியை கடத்தியவர்களை நம் ராணுவம் மற்றும் மற்ற எஜன்ஸி  சேர்ந்து திட்டமிட்டு பிடித்து விடுவார்கள். அதிகாரி பிடிக்கப் படுவார்”

“எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்”

நம் ராணுவம் மற்றும் மற்ற அதிகாரிகளும் மிகத் திறமையானவர்கள். அரசியல் காரணமாக அவர்களை செயல்பட விடாமல் தடுத்து விடாமல் இருந்தால் கட்டாயம் அவர்கள் ஜெயிப்பார்கள். நீங்களும் இங்கிருந்து போய் விடுவீர்கள்.”

அப்போது ஒருவன் உள்ளே வந்து “அதிகாரிகள் இரண்டு கடத்தல்காரர்களையும் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுவரும், விரைவில் பிடித்து விடுவோம் என்று நம்புகிறார்களாம். கடத்தல்காரர்களுடன் சந்தேகம் வராமல் இருக்க பேச்சு வார்த்தையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம்” என்று சொல்கிறான்.

மந்திரி குறுக்கிட்டு “செய்திச் சேனலில்கூட வராத செய்தி உங்களுக்கு எப்படி…?

“அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் “

“எல்லாம் சரி அவர்கள் அந்த அதிகாரியை கொன்று விட்டால், அந்த குடும்பம், அவரின் உறவினர்கள்…”

ஒரு பெரிய இழப்பை சமாளிக்க சில சிறிய இழப்புகளை தாங்கிக் கொள்ள வேண்டும். நம் ராணுவ வீரர்களின் குடும்பம் போல”

உனக்கு சம்பந்தம் இல்லாததால், சாதாரணமா பேசுகிறாய். நீ அந்த குடும்பத்தில் ஒருவனாக இருந்தால்…?

மற்று ஒருவன் குறுக்கிட்டு, “ஐயா.. இவன் அந்த குடும்பத்தில் ஒருவன்தான். ” மற்றொருவன் அவனை அடக்குவான்.

“அவனை விடு. நானே சொல்லிவிடுகிறேன். கடத்தப்பட்ட அதிகாரி என் அப்பாதான். சில நாட்கள் முன்னால் இங்கே வந்தபோது என்னிடம் பேசினார். தனக்கு இது போன்ற ஒரு ஆபத்து இருக்கிறது. ஆனால் நான் ஒரு ராணுவ வீரன் போல இதை எதிர் கொள்ளப் போகிறேன். தப்பானவர்களை பிடிக்க நான் கருவியாக இருக்கப் போகிறேன். அப்படி நடந்தால், நான் என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னார். எல்லாம் சரியாகவே நடக்கும்.”

மந்திரி.. “சபாஷ். நானும் உங்களுடன் இருக்கிறேன். கட்டை அவிழ்த்துவிட்டு” என்கிறார்.

பிறகு தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது போல… வேறு ஒரு செட்டில் திட்டம் சிலர் அமர்ந்து பேசுவது போல வெறும் இசையில், லைட்எஃபெக்ட்டில் காட்டப்படும்.

கடைசியில் கடத்தியவர்களில், சிலரை சுட்டும், சிலரை சிறை பிடித்தும் அதிகாரி விடுவிக்கப்பட்டார் என்று வானொலி, தொலைக்காட்சியில் செய்தி வரும்.

மந்திரி அந்த மாணவர்களிடம் கை குலுக்கி விடை பெறுவார். “உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்கள் பெயர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதை செய்கின்றேன் ” என்று சொல்லி மீண்டும் கை குலுக்கி விடை பெறுவார்.

 இந்த நாடகம் நடந்த சில மாதங்கள் கழித்து “ரோஜா” என்ற மணிரத்னம் படம் வெளிவந்தது. “அதிலும் கடத்தல் நடக்கும். தீவிரவாதிகளுக்குப் பணியக்கூடாது” என்ற கருத்தில் இந்த நாடகமும் அந்தப் படமும் ஒத்துப் போவதைப் பற்றி எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.