மணியன்

இதயம் பேசுகிறது இதழில் மணியன் எழுதிய தொடர்கதை "என்றும் உன்னுடைய" - தொகுப்பு நூல் விற்பனைக்கு.. Binded book for sale.. Contact inbox.பத்திரிகை உலகில் ஒரு சகாப்தமாக ஜெலித்தவர் மணியன். இயற்பெயர் சீதா ராம வேங்கட சுப்பிரமணியன்.ஆனந்த விகடனில் நீண்ட காலம் பணியாற்றி அந்த இதழின் அபரித வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் ‘இதயம் பேசுகிற’து பயணத் தொடர் தனி அடையாளத்தை அவருக்குப்  பெற்றுத்தந்தது.சினிமா பாடல் வரிகளில் தொடர்கதைகள் 1970-80-களில் உச்சத்தில் இருந்தது’.உன்னை ஒன்று கேட்பேன்’, ‘உண்மை சொல்ல வேண்டும்’, ‘என்னைப் பாடச் சொன்னால், ‘என்னப் பாடத் தோன்றும்?’  உள்ளிட்டவை அந்த வகையில் மணியன் எழுதிய நாவல்கள்.

மணியனின் ‘இதய வீணை’ நாவல் எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் திரைப்படமானது. ‘நினைவு நிலைக்கட்டும்’ நாவல் ‘இதயமலர்’ என்ற பெயரிலும்  ‘மோகம் முப்பது வருஷம்’ நாவல் அதே பெயரிலும் திரைப்படமானது. ‘இதயம் பேசுகிறது’ என்ற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக வெற்றிகரமாகச் செயல்பட்டார். ஞானபூமி,சிறுகதை களஞ்சியம்,பாலஜோதிடம், மணியன் மாத இதழ், மயன் உள்ளிட்ட இதழ்களை வெளியிட்டார்.

சென்னையில் மாதம் தோறும் நடைபெறும் பத்திரிகை உலக முன்னோடிகள் பற்றிய பதிவில் மார்ச் 10-ம் தேதி மணியன் பற்றி எழுத்தாளர் இந்துமதி பேசினார். புத்தகங்கள் வெளியிடும் உரிமை பற்றிய கருத்து வேறுபாட்டால் அகிலன் ஆனந்தவிகடனில் கதைகள் எழுதுவதைத் தவிர்த்தார்.எழுத்தாளர் தேவனுக்காக குரல் கொடுத்தார்.  இந்த சர்ச்சையில் ஆனந்த விகடன் நிர்வாகம்- அகிலனிடம் மணியன் தொடர்ந்து பேசி சுமுகத் தீர்வை எட்டச் செய்தார். அகிலன் விகடனில் எழுதிய ‘சித்திரப்பாவை’  ஞான பீட விருது பெற்றது. ஆனந்த விகடனில் தி.ஜானகிராமனை ‘உயிர்த்தேன்’ என்ற சிறந்த நாவலை எழுதச் செய்தவரும் மணியன்தான்’ என்றார் இந்துமதி.

‘சிறுகதைப் போட்டியில் மூத்த நடுவர்கள் பரிசுக்கு தேர்ந்தெடுக்க தயங்கிய போதும் புதியவர்களை ஊக்குவித்தவர் மணியன். அவ்வாறு அவர் நேர்மையாக நடந்து கொண்டதால்தான் அனுராதா ரமணன், ஸ்டெல்லா புரூஸ் உள்ளிட்ட புதிய சிறந்த எழுத்தாளர்கள் கிடைத்தனர் ‘என்றும் இந்துமதி பதிவு செய்தார்.பழமையைப் போற்றி புதுமையை ஊக்குவித்த மணியனை மறந்துவிட்டோம் என்று ஆதங்கப்பட்டார் அவர். பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரிக்கு எழுத்துலகம் பாராட்டு விழா நடத்தி கெளரவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சாவியும் மணியனும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். சாவி வீட்டில்தான் மணியனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.’ இதயம் பேசுகிறது’ என்ற பெயரிலேயே பத்திரிகை தொடங்குமாறு மணியனுக்கு ஆலோசனை சொன்னவரும் சாவியே என்ற தகவலை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் மாலன்

ஜெகசிற்பியன்.

ஜெகசிற்பியன் - தமிழ் விக்கிப்பீடியாபிரபல எழுத்தாளராக 1950-80-களில் வலம் வந்தவர். இயற்பெயர் பாலையன். இவரது முதல் நாவல் ‘ஏழையின் பரிசு’. ஆனந்த விகடன் வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் இவரது ‘நரிக்குறத்தி’ சிறுகதை முதல் பரிசு வென்றது. நாவல் போட்டியில் இவரது  ‘திருச்சிற்றம்பலம்’ சரித்திர புதினம் முதல் பரிசு வென்றது. இது போன்ற சிறப்பு வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடைத்தாகத் தெரியவில்லை.சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர்.

சென்னை நகரத்து சேரிப்பகுதியை பின்னணியாக வைத்து ‘ஜீவகீதம்’ நாவலை கல்கியில் எழுதினார். 13 மொழிகளில் இந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டது.’மணணின் குரல்’,’ கொம்புத் தேன்’,’ மோக மந்திரம்’, ‘ஞானக்குயில்’, ‘கிளிஞ்சல் கோபுரம்’ உள்ளிட்டவை ஜெகசிற்பியனின் சமூக நாவல்கள்.’ ஆலவாய் அழகன்’,’ நந்திவர்மன் காதலி’, ‘பத்தினிக் கோட்டம்’ உள்ளிட்ட வரலாற்றுப் புதினங்களும் இவருக்கு புகழ் தேடி தந்தன.

சிறந்த சிறுகதை எழுத்தாளருமான  இவரது சிறுகதைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ‘சிந்தனையாளர் டார்வி’ குறித்த புத்தகம் இன்றும் வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.’சதுரங்க சாணக்கியன்’ என்ற நாடக நூலையும் எழுதியுள்ளார்.

சாருகேசி

மூத்த எழுத்தாளர் சாருகேசி காலமானார்தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் ஆற்றல் பெற்றவர்.சங்கீதம், நடனம்,சித்திரம் என நூற்றுக்கணக்கில் விமர்சனம் எழுதியுள்ளார்.இயற்பெயர் எஸ்.விஸ்வநாதன். சிததார்த், எஸ்.வி.என். நம்பி என்ற பெயரிலும் எழுதினார். கண்ணன்.சிறுவர் இதழில் ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக ஏராளமாக எழுதியவர். மொழிபெயர்ப்பில் வல்லவர்.

சுதா மூர்த்தியின் படைப்பு தமிழாக்கம் செய்து பாராட்டைப் பெற்றார்.

பயணங்கள் பல மேற்கொண்டு கல்கி தீபாவளி மலர்களில் கட்டுரைகள் எழுதினார் ‘.சில பயணங்கள் சில அனுபவங்கள்’ என்ற தலைப்பில் அது நூல் வடிவம் பெற்றது.

நகைச்சுவை உணர்வோடு பல கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். 1980-ம் ஆண்டு கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ‘உலக மாமியார்களே ஒன்று சேருங்கள்’ சிறுகதையை இன்று வாசித்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. ‘கழுதைக்கும் தெரியும் கற்பூர வாசனை’, ‘சங்கீத சர்க்கரைக் கட்டி, சாஸ்திரி ஹால் அணில் குட்டி’, ‘ஒரு’ நாய’ மான காதல் உள்ளிட்டவை இவரது சிறந்த நகைச்சுவை நூல்கள்.ஏராளமான மருத்துவக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழ் நூல்கள் விமர்சனக் கூட்டங்கள் நடைபெறுவதில் முக்கியப் பங்கு வகித்தார். தென்னாங்கூர் ஆலயத்தின் விதானப் பகுதியில் ஓவியர் நடனத்தின் பாரம்பரியச் சித்திரங்களை வரைய ஏற்பாடு செய்தார்’சங்கீத இசை மலர்’ பொறுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.

விக்கிரமன்

YENI - இன்றைய வரலாறு எழுத்தாளர் விக்கிரமன் பிறந்த தினம் வரலாற்று புதின எழுத்தாளர்களில் புகழ்பெற்றவரான மற்றும் நந்தப்புரத்து நாயகி ...எழுத்தாளர்களை வளர்த்த எழுத்தாளர் விக்கிரமன். இயற்பெயர் வேம்பு. கல்கியை குருவாகப் போற்றியவர். கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலின் நாயகனின் பெயரைப் புனை பெயராகக் கொண்டவர்.அரை நூற்றாண்டுக்கும் மேல் ‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியராக இருந்தவர்.

‘நந்திபுரத்து நாயகி’, ‘உதயசந்திரன்’, ‘கோவூர் கூனன்’,’ ராஜராஜன் சபதம்’, ‘சித்திரவல்லி’, ‘தெற்கு வாசல் மோகினி’ உள்ளிட்ட 30 வரலாற்று புதினங்களை எழுதியுள்ளார். ஆறு சமூக நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்.யார் தன்னை பார்க்க வந்தாலும் அவர்களை எழுந்து நின்று வரவேற்கும் பண்பாளர்.பிழை திருத்தும் பணியை அர்ப்பணிப்புடன் விரும்பிச் செய்தவர். பத்திரிகை ஆசிரியர் என்ற  பந்தா இல்லாத எளிமை விரும்பி. ஆசியர் குழு வாசித்து திரும்ப அனுப்ப வைத்திருக்கும் படைப்புகளையும் வாசித்து அதில் இருந்தும் பரிசு படைப்புகளைத் தேர்வு செய்த நேர்மையாளர்.

கெளதம நீலாம்பரன்

பசுபதிவுகள்: 835. கௌதம நீலாம்பரன் -1தீபம்,  ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம் இதழ்களில் பணிபுரிந்த எழுத்தாளர். இயற்பெயர்  கைலாசநாதன்.

ஆனந்த விகடன் நடத்திய பொன்விழா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து 25 வாரங்கள் தொடராக வந்த இவரது சரித்திர நாவல் ‘சேது பந்தனம்’. திருமலை நாயக்கர் காலத்தில் நிகழ்ந்த மைசூர்-தமிழகப் போர்கள், போர்ச்சுகீசியர்-டச்சு வியாபாரிகள் தங்கள் மதத்துக்காகவும் விபாரத்துக்காவும் செய்த அட்டூழியங்கள் ஆகிய நிலைக் களங்களில் கதையின் நிகழ்ச்சிகள் இருக்கும். கதையின் நாயகன் இளைய பெருமாள் திருச்செந்தூர் கந்தப் பெருமானை மீட்க நடத்திய கடல் போர், வாசிப்பில் நம்மை சிலிர்க்க வைக்கும்.

‘மோகினி கோட்டை’, ‘ஈழ வேந்தன் சங்கிலி’, ‘கலிங்க மோகினி’, ‘நிலா முற்றம்’,’ உதய பூமி’, ‘விஜய நந்தினி’,’அதியமான் கோட்டை’ உள்ளிட்டவை அவரது பிற சரித்திர நாவல்கள்’காவியமாய் ஒரு காதல்,’’ கலா என்றொரு நிலா’ உள்ளிட்ட சமூக நாவல்களையும் எழுதியள்ளார்.புத்தரின் வாழ்க்கை  வரலாற்றை ‘புத்தர் பிரான்’ என்ற பெயரி்ல் முத்தாரம் இதழில் மூன்றரை ஆண்டுகள் தொடராக எழுதினார்.அவரது மாஸ்டர் பீஸான இந்த படைப்பு ஆதித்தனார் அறக்கட்டளை விருது பெற்றது.

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜன்: புது வெளிச்சம்எழுத்தாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக வாழ்ந்து மறைந்த சிறந்த படைப்பாளி நாகராஜன்.ஆங்கிலத்திலும் கணிதத்திலும் அசாத்திய புலமை மிக்கவர். சமூகம் ஒழுக்கக் கேடு என்று சொல்லும் அனைத்துப் பழக்கங்களும் கொண்டவர் என்பது முரண். பாலியல் தொழிலாளிகள், குற்றச் செயல் செய்து பிழைப்பவர்கள் போன்ற விளிம்பு நிலை மாந்தர்களை தமிழ்  கதைப் பரப்பில் கொண்டு வந்தவர். ‘வாழ்வின் முட்கள் மீது நானே விழுந்தேன், குருதி கொட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்று சுயவிமர்சனம் செய்து கொண்டவர்.

இவரது ஆகச் சிறந்த படைப்புகள் ‘குறத்தி முடுக்கு’ குறு நாவலும்,’ நாளை மற்றுமொரு நாளே’ நாவலும். ‘கண்டதும் கேட்டதும்’ இவரது முதல் சிறுகதைத் தொகு்ப்பு.’குறத்தி முடுக்கு’  குறுநாவலில் வரு்ம் தங்கம், பத்திரிகை நிருபர் பாத்திரங்கள் வாசிப்புக்கு பின்னும் மனதில் அசைபோடும் சிரஞ்ஜீவிகள். கந்தன் கதாபாத்திரத்தின் ஒரு நாள் பொழுதுதான்  ‘நாளை மற்றொரு நாளே’ நாவல்.தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருககும் கயமை, சுரண்டல், இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் படைப்பு.

எழுதியது சொற்பமே என்றாலும் அதில் மேதமை, கலை நுட்பத்தை வெளிப்படுத்திய எழுத்தாளுமை. விமர்சனத்திற்கான சுய பாதுகாப்போடு படைப்பை உருவாக்கும் கோழைத்தனம் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை’.நாட்டில் நடப்பதைத் தான் சொல்லியிருக்கிறேன். நான் விரும்பும் அளவுக்கு சொல்ல முடியவில்லை என்பதான் என் வருத்தம்’- இது நாகராஜனின் சுய விளக்கம். ‘மனிதன் மகத்தான சல்லிப் பையல்’- இது மனிதனைப் பற்றிய அவரது விமர்சனம்..

கந்தர்வன்

கந்தர்வன்/துண்டு – விருட்சம் நாளிதழ்திரிலோக சீதாராமின் கந்தர்வ கானம் நாவலில் வரும் கந்தவர்ன் என்ற பெயரைப் புனைபெயராகக் கொண்டு கவிதைகள், கதைகள்,கட்டுரைகள் எழுதினார். இயற்பெயர் நாகலிங்கம்.மாவட்ட கருவூல அதிகாரியாகப் பணியாற்றி  ஓய்வு பெற்றார். மார்க்ஸீய கோட்பாடுகளில் ஈர்க்கப்ட்ட தொழிற்சங்கவாதி.

தாமரை, செம்மலர்,  சுபமங்களா, விகடன், குமுதம் இதழ்களில் எழுதினார். ‘கிழிசல்க’, ‘மீசைகள்’,’ சிறைகள்’,’ கந்தர்வன் கவிதைகள்’ இவரது நான்கு கவிதைத் தொகுதிகள்.இவரது ‘மைதானத்து மரங்கள்’ சிறுகதை பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற்றது. பல பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. ‘சாசனம்’,’ பூவுக்கு கீழே’, ‘கொம்பன்’, ‘ஒவ்வொரு  கல்லாய்’, ‘அப்பாவும் மகனும்’ இவரது சிறுகதைத் தொகுதிகள்.’காவடி’ இவரது குறு நாவல்.

வாசிப்பவரோடு இயல்பாகக் கலந்துவிடும் கதைகள் எழுதுவதில் வல்லவர்.மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்துவிடும் நபரை காப்பாற்றுவதில் உடலாலும் பணத்தாலும் உதவி செய்வதுடன் ரத்த தானமும் செய்கிறான் கந்தவர்னின் ‘தான்’ சிறுகதை நாயகன். தானே பெரிய மனிதாபிமானி என்று கர்வம் கொள்கிறான். சோர்வைப் போக்கிக் கொள்ள வெளியே வந்து  ஜூஸ் குடித்து விட்டு பணம் கொடுக்க அவன் முற்படும் போது’ ரத்தம் கொடுத்தவர்களிடம் காசு வாங்கறதில்ல சார் ‘என்று ஆச்சரியப்பட வைக்கிறான் கடைக்காரன். அற்புதமான கதை.

தமிழின் பெரும் கதை சொல்லி என்று கந்தர்வனை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். கந்தர்வனின்,’ தாத்தாவும் பாட்டியும்’, ‘காளிப்புள்ளே’ சிறுகதைகள் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு என்றும் ஜெயமோகன் பரிந்துரைக்கிறார். ‘சாசனம்’ சிறுகதை மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக வந்துள்ளது. கந்தவர்வன் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

 


கேள்வி: மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே?