நன்றி: தினமணி

இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆா்.வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!!
அவரது நன்றி உரை:
https://www.facebook.com/share/v/1GM5V2zTZs/
இவ்விருது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன் அகிலன் , ஜெயகாந்தன் இருவருக்கும் கிடைத்துள்ளது.
இலக்கியம், படைப்பாற்றல், கவிதைக்கு அவா் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் பாரதிய ஞானபீடம் அமைப்பானது, 2025-ஆம் ஆண்டுக்கான அதன் 60-ஆவது ஞானபீட விருதை அறிவித்துள்ளது.
இணையத்திலிருந்து செய்திகள்:
1972இல் ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியிருக்கிறார்.
இலக்கிய சிந்தனை விருது – மூன்றாம் உலகப் போர்
கலைமாமணி, பாவேந்தர் விருதுகள்
முனைவர் பட்டம்
சினிமாவில் கிட்டத்தட்ட 7500 பாடல்கள் எழுதியிருக்கிறார்
விருதுகள்:
கள்ளிக்காட்டு இதிகாசம்’ படைப்புக்கு சாகித்ய அகாடமி விருது
இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசுகளுள் ஒன்றான சாதனா சம்மான் விருது
இலக்கியப் பங்களிப்புக்காக பத்மஸ்ரீ – பத்மபூஷண் விருது
சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் இவர்தான்.
சில நூல்கள்:
தமிழாற்றுப்படை – ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல்
வைரமுத்து சிறுகதைகள்
மூன்றாம் உலகப் போர்
ஆயிரம் பாடல்கள்
ஆயிரம் பாடல்கள்
கருவாச்சி காவியம்
ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்து கவிதைகள்
பெய்யெனப் பெய்யும் மழை
தமிழுக்கு நிறம் உண்டு
கவிராஜன் கதை
இன்னும் பல
பாடலாசிரியாருக்கான தேசிய விருது ”
1985: முதல் மரியாதை – அனைத்துப் பாடல்களும்
1992: “சின்ன சின்ன ஆசை” – ரோஜா
1994: “போறாளே பொண்ணுத் தாயி – கருத்தம்மா ; உயிரும் நீயே – பவித்ரா
1999: “முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்” – சங்கமம்
2002: “ஒரு தெய்வம் தந்த பூவே” – கன்னத்தில் முத்தமிட்டால்
2010: “கள்ளிக் காட்டில் பிறந்த தாயே” – தென்மேற்குப் பருவக்காற்று
2016: “எந்தப் பக்கம் “- தர்மதுரை
