Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA

 

குவிகம் குறும் புதினம் 26-27 கக்கான முதல் கட்ட நடுவர்கள் திரு சதுர்புஜன் , திரு  சாய் கணேசன்  இவர்களுடன் குவிகம் சுந்தரராஜனும் இணைந்து 24 கதைகளைத்  தேர்ந்தெடுத்தார்கள். 

அதன் பட்டியலைச் சென்ற மாதம் இந்த இதழில் வெளியிட்டோம்.

அதை மீண்டும் உங்கள் பார்வைக்குத் தருகிறோம்: 

 

Name of the Story AUTHOR
  1. அரங்கநாதனின் அடுத்த அத்தியாயம்
நந்து சுந்து
அவன்(ள்)கள் கே.ஆனந்தன்
அழுக்காறு எனும் பாவி…. யசோதா சுப்ரமணியன் 
ஆதவன் உதயமானான் சாரதா ஸ்ரீனிவாசன்
உதிராத உறவு தேவகி கருணாகரன்
கண்ணாடி வாழ்க்கை இரா. கலைச்செல்வி
காகித ஓடம் தி வள்ளி
சங்கொலி கவிதா ராமதாஸ்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் மோகனா சச்தேவ்
சீதாயணம் சாதிக் ஐஷ்வர்யன்
சூனியத்தின் அழைப்பு  எம் சங்கர்
டைகர் செல்லம் இரா. சைலஜா சக்தி,
தரிசனம் கணேஷ்ராம்
தூண்டில் புழுக்கள் கல்பனா சன்யாசி
தேடல் ரமணன்.vsv
நங்கவரித் தீவு கார்த்திக் ஸ்ரீநிவாஸ் 
நாகாக்க யாரோ
மணம் மாறும் மலர்கள் அனுராதா ஜெய்ஷங்கர் 
மனிதக் காட்சி சாலை ! ஜனமேஜயன்
யசோதாக்கள் வசந்தா கோவிந்தராஜன்
யார் போட்ட கை விலங்கு ? குரு அரவிந்தன்
வசுதேவ குடும்பகம் H.ராஜாமணி
வலிகளின் ருசிகள் அறிவுச்செல்வன்.
வெள்ளை நிறத்தொரு பறவை முகிலை இராசபாண்டியன்

 

அவற்றுள் , முதல்  மூன்று பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்படி மதிப்பிற்குரிய கலைமகள் இதழின் ஆசிரியர் , எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் பேச்சாளர்,    சமூக சேவகர், ஆலோசகர் என்ற பல துறைகளில் பவனிவரும் திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்களை அன்புடன் வேண்டிக்கொண்டோம்.

அவரும் அதற்கிணங்க மூன்று பரிசுக்குறிய கதைகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே அனுப்பிவைத்தார்.

பரிசுக்குரிய கதைகளைப் பற்றிய அவரது கருத்துக்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.


முதல்பரிசு (ரூபாய் 10,000)          :  சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் –  முனைவர் மோகனா சுகதேவ்

இரண்டாம் பரிசு (ரூபாய் 6000) :  வசுதேவ குடும்பகம்                                   – H.ராஜாமணி

மூன்றாவது பரிசு ரூபாய் 4000) :  தரிசனம்                                                            – கணேஷ்ராம்

பரிசுகள் பெரும்  மூவருக்கும் குவிகம் தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 


கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், குறும் புதினம் நடுவர்

 

 1. சித்திரை  மாதம் பௌர்ணமி நேரம்  – முனைவர் மோகனா சுகதேவ்

கண்ணகி கோட்டம் எனும் மங்களதேவி கோயிலில் நிகழும் ஒரு வரலாற்றுக் குறுநாவலாக சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் கதை உள்ளது.

நல்ல எழுத்து நடை. சிலப்பதிகாரத்தை வைத்து அங்கங்கே தழுவிப் பின்னப்பட்ட அற்புதக் காதல் கதை. கோவலன் கண்ணகியாக – பின் மாதவியாக விஜயனும் அபரஞ்சியும் ஆடும் சிலம்புக் கூத்தை நேரில் கண்டது போலச்  சித்தரிக்கப்பட்டுள்ளது.

விஜயரங்க நாயக்கர், பைந்தமிழ்க் செல்வி, கூடலூர் பாளையக்காரன் கிருஷ்ணராயன், வில்லவன், அபரஞ்சி, விஜயன், பளியர்கள், அவர்கள் தலைவன் பளியஞ்சித்தன், செங்கனி என்ற  கதாபாத்திரங்களுடன்  வரலாற்றுப் பின்னணியையும் சேர்த்து  குறுநாவல் அழகாகப் படைக்கப்பட்டுள்ளது.

சிலம்பு சொல்லும் சிறப்பான  இந்தக் கதை  முதல் பரிசினைப் பெறுகிறது

 

2. வசுதேவ குடும்பகம் – H ராஜாமணி 

பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட கதை.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு              (குறள் 987)

என்ற குறள் வழியில், பாதிக்கப்பட்டவர் எதிரிக்கு இனியன செய்வதைக் கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நல்ல கருத்து அமைந்த கதை.

பாதிக்கப்பட்ட யூத குடும்பங்களின் வாரிசுகளை நேரடியாகச் சந்தித்துப் பெற்ற தகவல்களை வைத்து புனையப்பட்ட உருக்கமான கதை.

தனக்கு ஏற்பட்டத்  துன்பங்களை- வெறுப்பை மறைத்து எதிரியையும் மன்னிக்கும் எஸ்தர் பாத்திரம் அருமை.

மன்னிப்பு ஒரு முடிவு அல்ல; விடுதலையும் அல்ல; அது ஒரு பொறுப்பு.

எதிரியைத் தண்டித்தலும், பழிவாங்குதலும் நோக்கம் அல்ல. எதிரி தவறாகச் செய்த செயல்களுக்குத் தண்டனையோ அல்லது பிராயச்சித்தமோ எது என்பதை எதிரியே முடிவு  செய்துகொள்ளும் நிகழ்வு மனதைத் தொடுகிறது.

புதிய எண்ணத்துடன்  சேவை செய்யப்போவதாக உள்ள முடிவு இன்னும் சிறப்பு.

கதைப்போக்கும் கதையின் முடிவும் அருமை.

வாசுதேவ குடும்பகம்  இரண்டாம் பரிசு பெறுகிறது.

 

3. தரிசனம் –  கணேஷ்ராம் 

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் பற்றிய கதை.

பெருமாளை நாம் பார்ப்பது தரிசனம் இல்லை; அவர் நம்மைப் பார்ப்பதுதான் தரிசனம் என்ற புதிய கோணத்தில் இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.

தன் இரு பட்டை நாமத்திற்கு இடையே கண்ணைக் குறுக்கி, கூர்மையாக, தனது நுனிக்கால்களில் எழும்பி நின்று,  அரை நொடியில் பார்த்தும் பார்க்காத அல்லது ‘பார்த்துவிட்டோம் பெருமாளை’  என்று நம்பும் பக்தனை, பெருமாள்  பார்ப்பதே தரிசனம் என்று சொல்லப்படும் கதை.

கதை முழுக்க பெருமாள் தரிசனம் காண கணேசன் படும் பாட்டைக் கதையாகச்  சொல்லியுள்ளது

சுவையாக  உள்ளது

தரிசனம் – ஒரு திருப்பம்  மூன்றாம்  பரிசு பெறுகிறது.

இதற்கான விழா சிறப்பாக குவிகம் ஜூமரங்கில் இன்று (15.03.26) அன்று நடைபெற்றது.  நடுவர்கள் சதுர்புஜன் , சாய் கணேசன் மற்றும் குவிகம் சுந்தரராஜன் எப்படிக் கதையைத் தேர்ந்தெடுத்தோம் என்று பேசினார்கள். 

பரிசுபெற்ற முனைவர் மோகனா சுகதேவ், ராஜாமணி, கணேஷ்ராம் ஆகிய மூவரும் ஏற்புரை வழங்கினார்கள். 

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்களின் உரையும் மற்ற தேர்ந்தெடுக்கப்பட்டால் கதைகளைப் பற்றிய விவரங்கழியும் கிருபாநந்தன் விளக்க உரை வழங்கினார். 

 


கேள்வி: வெண்ணிலவே  வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?