சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடுஎதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கடந்த பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் கவிஞருமான சரண், “படைப்பு ஒன்றை எழுதி முடித்தபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை” என்று தனது அனுபவப் பகிர்வில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் சந்துரு மாணிக்கவாசகம் தலைமையேற்றார். கவிஞர் மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.

இயக்குநர், கவிஞர் சரண் எழுதிய ‘நீர் மேல் எழுத்துகள்’ ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் திறனாய்வு செய்து உரையாற்றினார்.

நிகழ்வில் பங்கேற்ற இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, “நண்பர் சரண் மிகப்பெரிய  இயக்குநர். அஜித் போன்ற  நடிகர்களை வெற்றிகரமான வணிக ஹீரோவாக நிலைநிறுத்தியவர்.படப்பிடிப்பின்  தளத்தில் வைத்து  அவ்வப்போது   வசனங்களை எழுதி,  வெற்றிப்படங்களைத்தொடர்ந்து இயக்கிய திறமை படைத்தவர்.

குருநாதர் எஸ்.பாலச்சந்தர் போன்ற மிகப்பெரிய ஆளுமையின் பட்டறையில்  இருந்து வந்ததால் மிகப் பெரிய திறமை வாய்ந்தவர் எப்படி இருப்பார்? “ஹைக்கூவிற்கு அறை எடுத்து அமர்ந்தயோசிக்கக்கூடாது. அது தானாக நிகழ வேண்டும்”என்றார் அப்துல் ரகுமான். பாஷோ போன்ற முன்னோடிகள் இயல்பான ஹைக்கூ அனுபவங்களுக்காக நிறையப் பயணங்களை மேற்கொண்டார்கள் ஹைக்கூவிற்காகப் பாஷோ பயணம் மேற்கொண்ட இடங்கள் இன்று ஜப்பானின் வரலாற்றுச் சின்னங்களாக, சுற்றுலாத்தளங்களாக மாறிவிட்டன.

இயக்குநர் சரண் புதிதாக ஒரு தளத்தில் பயணிக்கிறார். ஆனால், அதில் ஆகச்சிறந்த முனைப்போடு எப்படி செயல்படுகிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கும். அதன்பிறகு, அவரின் படைப்புக்களைததொகுப்பாகக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.  திரைத்துறையில் சரண எங்களுக்கெல்லாம் முன்னோடி. பிரமிப்பூட்டும் கப்பெரிய ஆளுமைகளோடு பணி செய்தவர் அன்றுமுதலே அவருடைய தோற்றம், பேச்சு, திரைக்காட்சி அமைப்பு எல்லாமே மிகவும் நாகரீகமான  தரத்தில் இருக்கும். அவரின் உருவாக்கங்கள் உண்மையான கலைமுயற்சியின் நுட்பம் கொண்டவை இத்தகு சிறப்புமிக்க படைப்பாளி எங்களோடு இணைந்து ஹைக்கூவில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது  என்று வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

‘நானும் ஹைக்கூவும்…’ எனும் தலைப்பில் இயக்குநர், சரண் பேசும்போது, “நான் சிறுவனாக இருந்தபோது
எதிர்வீட்டில் இருந்த தாத்தா ஒருவர் என்னை வாரியணைத்துத்  தூக்கிக்கொஞ்சுவார்.  நாங்கள் வீடுமாறியபோதும், அம்மாவோடு எங்காவது சந்திக்க நேரும் போதெல்லாம் என்னிடம் அத்தனை வாஞ்சையுடன் விசாரிப்பார். அவர் கைகளின் வழியாக எனக்கு இலக்கிய ஆர்வமும் கவிதையின் பால் ஈர்ப்பும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். என்னுடைய ‘தாடித்தாத்தா’தான்  புதுக்கவிதைகளின் முன்னோடியான பெரும் கவிஞர் ந.பிச்சமூர்த்தி என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. 

அம்மா என்னைச் சிறுவயதிலேயே நூலகத்திற்கு அழைத்துச்சென்று வாசிக்கப் பழக்கியிருந்தார்.மூன்றாம் வகுப்புப்  படிக்கும்போதே தனித்து வாசிக்கத் தொடங்கிவிட்டேன். கவிதைகளை வாசிப்பதும்எழுதுவதும் எனக்குப்  பிடித்தமான செயலாக மாறியது. 

இயக்குநர் சிகரம் பாலசந்தர், நான் வியந்துபார்த்து என்றும் ரசிக்கும் மனிதர். அவரிடம் பணியாற்றிய தருணம் அவருடைய எழுத்தையும், காட்சிகளையும் முதல் பார்வையாளனாக நான் ரசித்தது இன்றுவர  நான் பெருமைப்படுகிற விஷயம். ஒரு படம் இயக்கி முடிக்கும்வரை    அதே சிந்தனையில், கதையில்,காட்சியில் எண்ண ஓட்டத்தில் தவம் போன்று திரைப்படப் பணிகளை மேற்கொள்வேன். படம் முடிந்த பிறகு,அதனை அப்படியே தவிர்த்துவிடுவேன். இதுதான் என் தனித்துவம்.

நண்பர் லிங்குசாமியின் ஹைக்கூ உருவாகும் தருணங்களையும் முதலில் நான்தான் கேட்டு ரசிப்பவன்என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்வும் பெருமையும் உண்டு. ஹைக்கூ கவிதைப்போட்டி பற்றிச் சந்திக்கும்  தருணங்களில் உடனிருந்த அனுபவத்தில் அவரின் ஹைக்கூவைக் கேட்டு வியந்திருக்கிறேன். அந்தத்தாக்கத்தில் நானும் சில ஹைக்கூ எழுதிக் காட்டியதும், சிலவற்றை சிலாகித்து அருமையாக இருப்பதாகப்பாராட்டுவார். கலைஞனுக்குப் பாராட்டுதலைவிட உற்சாகம் தருவது வேறென்ன இருக்க முடியும்? 

படைப்பு ஒன்றை எழுதிய பின் படைப்பாளன் அதைப் பற்றிய  விமர்சனங்களைப் பொருட்படுத்தஅவசியமில்லை என்றே கருதுகிறேன். ஒருவருடைய கவிதையின் சாயல் வேறொருவர்  படைப்பில்இருப்பது இயல்பு. அதை ஏற்றுக்கொள்வதுதான் பெருந்தன்மையாக  ” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கவிஞர்கள் ஜெயபாஸ்கரன், பிருந்தாசாரதி, என்.குமார், சா.கா.பாரதிராஜா, சக்திமான்அசோகன், புதுகை ஆதீரா, அன்புத்தோழி ஜெயஸ்ரீ, அனுராதா செளரிராஜன், வ.ரகுநாத், பா.ஸ்ரீகுமார்,விஞ்ஞானி மாசிலாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

கேள்வி: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா ?