Daily Archives: November 2, 2013
விநாயகாய நமஹ !
ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம: ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் மஹாகணாதி பதயே நம:
விநாயகர் பாடல்கள்
- ஐந்து கரத்தனை யானை முகத்தனை
- இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
- நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
- புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
- நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
- துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
- தப்பாமல் சார்வார் தமக்கு.
- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
- நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
- துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
- சங்கத் தமிழ் மூன்றும் தா.
- அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில்பிறந்த
- தொல்லை போம் போகாத்துயரம் போம்
- நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்தில் மேவு
- கணபதியைக் கைதொழுதக் கால்.
- விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
- விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
- விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
- கண்ணிற் பணிமின் கனிந்து.
- மங்கள த்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
- பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
- சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தைச் சங்கரிக்கும்
- எங்கள் குலவிடிவிளக்கே எழில்மணியே கணபதியே
- திருவாக்கும் செய் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
- பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
- ஆதலால் வானவரும் ஆனைமுகத்தானைக்
- காதலால் கூப்புவார் தம்கை.
உள்ளே….
உள்ளே….
ஆசிரியர் பக்கம்
குவிகத்தைப் பற்றி
வரப்போகும் படங்கள்
வாதவூரன் – நாடக விமர்சனம்
கவிதை – செம்மொழி
மெட்ராஸ் ஐ ஜோக்ஸ்
வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்!
தஞ்சாவூர் பெயிண்டிங்
கவிதை – முருகா முருகா
அவர் நடித்த படங்களில் பிடித்தது – சிவாஜி கணேசன்
கவிதை
ராமாயண கிரிக்கெட் (தொடர்)
கவிதை – குருவி குருவி
சிசு கதைகள்
மன்னர் ஜோக்ஸ்
கவிதை – சின்னஞ்சிறு பெண்ணே
பாரதியாரின் வரிகள்
நகைச்சுவை நடிகர்கள்
இந்த மாத ஸ்டார் சிறுகதை சுருக்கம்
கவிதை
மீனங்காடி (தொடர் )
பழைய பேப்பர்
நாலு வரிக் கதைகள்
நாராயணீயாம்ருதம்
ஆசிரியர் பக்கம்
குவிகம் !
நவம்பர்1, 2013
பூ : ஒன்று ————— இதழ் : ஒன்று
இந்த இதழைப் படிக்கும் அனைவருக்கும் நன்றி!
குவிகத்தின் நிறை – குறை பற்றிய
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்!
உங்கள் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் புகைப்ப டங்கள் விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன!
அடுத்த இதழில் – வழக்கமான பகுதிகளுடன்
வாசகர் கருத்து
கேள்வி பதில்
திரை விமரிசனம்
T V சீரியல் – அலசல்
சிறுவர் இலக்கியம்
பொறிக் கணக்குகள்
குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம்
மற்றும்
உங்கள் விருப்பங்கள் இடம்பெறும்!
சுந்தரராஜன்
(ஆசிரியர்)
Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
குவிகத்தைப் பற்றி …
குவிகத்தைப் பற்றி …
குமுதம்- விகடன்- கல்கி- குங்குமம் இவை நான்கும் தமிழ் நாட்டின் தலை சிறந்த இதழ்கள் !
இவை தவிர மற்ற பத்திரிகைகள் தமிழில் ஏராளமாக உண்டு.
இலக்கிய பத்திரிகைகள் – கலைமகள்,கணையாழி,தீபம்,அமுதசுரபி, காலச்சுவடு,மஞ்சரி.
பெண்களுக்கான பத்திரிகைகள் – சினேகிதி,மங்கை,மங்கையர்மலர்,அவள்,தோழி,தேவி
குழந்தைகளுக்கான பத்திரிகைகள் – சுட்டி,கோகுலம்,அம்புலிமாமா
ஜோசிய இதழ்கள் –சுபயோகம்,குமுதம்ஜோதிடம்,பாலஜோதிடம்
அரசியல் இதழ்கள் – துக்ளக்,நக்கீரன்,ஜூனியர்விகடன்,ரிப்போர்ட்டர்
சினிமா இதழ்கள் – சினிமாஎக்ஸ்பிரஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து
பக்தி இதழ்கள் – குமுதம்பக்தி,சக்திவிகடன்,ஆலயம்
பாக்கெட் நாவல்கள் – ராணிமுத்து,மாலைமதி,
மற்றபத்திரிகைகள் – பாக்யா, இந்தியாடுடே, கல்கண்டு, கண்மணி, கல்யாணமாலை, முத்தாரம்,டைம்பாஸ்,கலைக்கதிர், தமிழ்கம்ப்யூட்டர் ,மோட்டார்விகடன்,நாணயம்,பசுமை விகடன்
மற்றும் விட்டுப்போன எண்ணற்ற பத்திரிகைகள் -வலைப் புத்தகங்கள் !
இவ்வளவு இருக்கும் போது குவிகம் ஏன் என்று கேட்கிறீர்களா?
எவ்வளவு புடவை இருந்தாலும் பெண்டாட்டிக்கு ஏன் அடிக்கடி புதுப் புடவை எடுக்கிறீர்கள்? அது மாதிரி தான்!
பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் தனி விதம்!
அப்புறம், கு-வி-க-ம் தலைப்பின் ஒவ்வொரு எழுத்தும் குமுதம், விகடன், கல்கி, குங்குமம் போன்ற பத்திரிகை பெயரிலிருந்து திருடியதா என்று கேட்கலாம் .
நிச்சயமாக இல்லை.
குவிகம் என்பது புதியதாக தமிழில் செதுக்கப்பட்ட தலைப்பு.
எண்ணங்கள் குவியும் தளம் குவிகம் !
கருத்துக்கள் குவியும் களம் குவிகம்!
குதூகலம் குவியும் இடம் குவிகம் !
மொத்தத்தில் – நாம் குவியும் இடம் குவிகம் !!
வரப்போகும் படங்கள்
வாதவூரன் – நாடக விமரிசனம்
வாதவூரன்
நரியை பரியாக்கி வாதவூரானை மணிக்கவாசகமாகப் புடம் போட்டு திருவாசகத்தை பாடி உருக்க வைத்த காவியக் கதையை மேடையில் நாடகமாகப் போட்டிருக்கிறார்கள்!
முயற்சியைக் கண்டிப்பாகப் பாராட்டத் தான் வேண்டும்!
பாண்டியமன்னன் வரகுணன் ஆணைப்படி குதிரை வாங்க பொற் குவியலோடு சென்றார் பாண்டிய முதலமைச்சர் வாதவூரார் . வழியில் சிலையே இல்லாத ஆவுடையார் கோவிலில் ஈசனை அருவத்தில் ஆனந்த தரிசனம் காண்கிறார். ஈசன் ஆணைப்படி குதிரை வாங்கக் கொண்டுவந்த பொன்னை கோவிலைச் சீரமைக்க செலவிடுகிறார்.
செய்தி அறிந்த பாண்டியன் வாதவூரரை சித்திரவதை செய்கிறான். குறிப்பிட்ட நாள் அன்று குதிரை வரும் என்று உறுதியாகக் கூறினார் வாதவூரர். குதிரைகளும் வந்தன. ஆனால் ஓரிரவில் அவை நரிகளாக மாறிவிட்டன. வாதவூரார் பல கொடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிறார். அவரது உடல் வேதனை எல்லாம் தமிழ்ப் பண்ணாக -திருவாசகமாக உருகும் வடிவில் வெளிவருகின்றன!
வானாகி மண்ணாகி….
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே….
பேசப்பட்டேன் ..
பால் நினைந்தூட்டும் தாயினும் சால …..
கோணிலா வாளி அஞ்சேன் …..
முடிவில் மன்னன் அவரை பொள்ளும் வைகை சுடு மணலில் நிற்க வைத்துக் கொடுமைப் படுத்துகிறான். இறைவனின் கருணை வைகையின் வெள்ளமாய் வந்து அவரைக் காத்து அவர் பெருமையையும் திருவாசகத்தையும் உலகத்திற்குப் பறை சாற்றியது.
அந்தத் திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்!
இந்த காவிய நாடகத்தை M G W Productions & ABBAS Cultural இணைந்து தயாரித்திருக்கிறார்கள்!
வாதவூரன் சுவாமிநாதனின் நடிப்பு மிகப் பிரமாதம். முழுக்க முழுக்க அவர் தான் வருகிறார். அவரது துன்பம் – உள்ளக் குமுறல் தான் திருவாசகமாக உருக்கியது என்பதைச் சொல்லுவதில் வெற்றி காண்கிறார்கள்.
எஸ். பி. பாலசுப்பிரமணியன் மற்றும் கிரிதரன் அவர்களது நெகிழும் திருவாசகப் பாட்டுக்கள் நம்மை ‘சிக்கெனப் பிடித்து’ விடுகிறது என்பது உண்மை.
இருப்பினும் மனோகர் நாடகத்தில் இருக்கும் வேகமும் ஆக்ரமிப்பும் தந்திரக் காட்சியமைப்பும் வசனங்களும் இல்லாதது குறையாகத் தான் தோன்றுகிறது! அவை இருந்தால் மீண்டும் மீண்டும் பார்க்க வைத்திருக்கும்!
ஒருமுறை பார்க்கலாம் !
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடலில் பிடித்த வரிகள்
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
மனிதனாக வாழ்ந்திட வேண்டும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும் பொன்னே ஏனிந்த சிரிப்பு ?
நான் கருங்கல்லு சிலையோ – காதல் எனக்கு இல்லையோ
வரம்பு மீறுதல் முறையோ
துன்பக்கடலைத் தாண்டும் போது தோணி யாவது கீதம்
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்து மகா சமுத்திரத்தை இங்கேயிருந்து தாண்டிடுவேன்
இரைபோடும் மனிதற்கே இரையாகும் வெள்ளாடே
காடு விளஞ்சென்ன மச்சான் – நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும்
சித்திரக் கைத்தறி சேலையடி
தமிழின் அழகே எழில் ழகரம்
தமிழின்அழகேஎழில் ழகரம்
ழகரம் ழகரம் தமிழகரம்
தமிழின் அழகே எழில் ழகரம்
- விழியில் வழியும் அமிழ்தே ழகரம்
- ஆழியில்பொழியும் மழையே ழகரம்
- மகிழ்ச்சியில் பழுக்கும் பழமே ழகரம்
- நெகிழ்ச்சியில் தழைக்கும் நிழலே ழகரம்
- உழவும் தொழிலும் கமழ்ந்திடும் ழகரம்
- மழுவும் கழிவும் கழிந்திடும் ழகரம்
- வாழ்வும் தாழ்வும் பிறழும் ழகரம்
- பழுதும் விழுதும் ஒழியும் ழகரம்
- தொழுகையும் அழுகையும் வாழ்வின் வழக்கம்
- எழுகையும் முழுகையும் முழவின் முழக்கம்
- வாழையும் தாழையும் செழிப்பின் பழக்கம்
- கோழையும் மோழையும் அழிவின் புழுக்கம்
- வாழ்வென்னும் வழியில் குழிகள் பழிகள்
- காழ்ப்பென்னும் சுழியில் பழுதுகள் விழுதுகள்
- தாழ்வென்னும் தகழியில் தழைகள் பிழைகள்
- வீழ்கென எழும்பும் வேழமும் சூழுமும்
- தாழ்ப்பாழ் அழுந்திட நழுவிடும் பொழுதினில்
- கொழுந்தென எழுந்திடும் விழியின்பொழில்கள்
- தழுவிடத் தழுவிட அவிழ்ந்திடும் எழில்கள்
- வழிந்திடும் விழியில் அமிழ்ந்திடும் அமிழ்து
- வாழைப் பழச்சாறோ இதழின் உமிழ்ச்சாறோ
- தாழைப் புழையூரில் பொழியும் கூழாறோ
- தாழப் பழுவூரில் இழையும் குழலேறோ
- ஆழப் புகழூரில் தழையும் மழை ஊற்றோ
- நிகழும் பொழுதெல்லாம் உழைப்பின் இழையன்றோ
- திகழும் செழுப்பெல்லாம் மழையின் பொழிவன்றோ
- மழலைச் சிமிழ்எல்லாம் மகிழ்வின் விழையன்றோ
- தமிழின் புகழ்எல்லாம் செம்மொழி வழியன்றோ
மெட்ராஸ் ஐ ஜோக்ஸ்
மெட்ராஸ் ஐ ஜோக்ஸ்
சில வருடங்களுக்கு முன்னாலே இந்த வியாதிக்கு மெட்ராஸ் ஐ என்று பேர் இருந்தது. தற்சமயம் இதை ‘சென்’ ஐ ‘ என்றே அழைக்கிறார்கள்.
1. சென்னைக்கு ஏன் சென்னை என்று பேர் வந்தது என்று பிற்கால சரித்திர ஆசிரியர்கள் இவ்வாறு எழுதக்கூடும்.
“ மெரினா என்ற கடற்கரைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் மக்கள் எப்போதும் ‘சென் ஐ ‘ என்ற நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர் போலும். அதனால் தான் அந்த ஊருக்கு சென்னை என்று பேர் வந்திருக்கலாம்.”
2. ஏய் ! எனக்கு பத்து ‘பாய் பிரண்ட்ஸ் ‘ இருக்காங்கன்னு சொன்னா நம்ப மாட்டேன்னு சொன்னியே !. இப்போ பாரு. எனக்கு வந்த ‘சென் ஐ’ நம்ம கிளாஸ்மேட் பத்து பேருக்கு வந்திருக்கு பாரேன்!
3. என்ன வாயெல்லாம் சிவந்திருக்கு? ஜர்தா போட்டியா?
சே ! சே! ‘சென் ஐ’ மாதிரி ‘சென் வாய்.’
4. பண்டிகை நாளும் அதுவும் இப்படி குடிச்சுட்டு வந்திருக்கியே நீ உருப்படுவியா?
சும்மா கத்தாதே கஸ்மாலம் ! கண்ணுலே ‘சென் ஐ’
5. லல்லி! நாய்க்குட்டியோட ரொம்ப கொஞ்சாதேன்னு சொன்னேனே கேட்டியா?
ஏன் ! என்னாச்சு?
உனக்கு வந்த ‘சென் ஐ’ நாய்க்குட்டிக்கும் வந்துடிச்சு.
6. டெலிவெரி சமயத்திலே ஜாக்கிரதையா இருன்னு சொன்னேன். கேட்டாத்தானே?
ஏன் ! என்னாச்சு?
குழந்தைக்கு பிறக்கும் போதே ‘சென் ஐ’.
7. எதிர் கட்சித் தலைவர் மேலே 101வது கேசைப் போடுங்க! குடிச்சுட்டு சட்ட சபைக்கு வந்திருக்கிறாராம்.
சாரி மேடம்! நீங்க நினைக்கிறாப்போலே இல்லை. அவருக்கு கண்ணிலே ‘சென் ஐ’.
8. முதலமைச்சர் வேலை செய்யாத அமைச்சரை எல்லாம் முறைத்துப் பார்த்தார். அவ்வளவு தான். அனைவருக்கும் ‘சென் ஐ’ வந்துவிட்டது.
10. மகாபாரதத்திலே காந்தாரிக்கு ‘சென் ஐ’யாம்மா? எப்பவும் கண்ணைக்கட்டிக்கிட்டே வர்ராங்களே!
11. ராமர் எத்தனை முறை அம்பு விட்டும் ராவணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் அயோத்யாகுப்பத்திலே செய்த அம்பை எடுத்து விட்டார். ராவணனுக்கு இருபது கண்ணிலும் ‘சென் ஐ’ – தோற்று விட்டான்.
12. சிவனால் நக்கீரனை எரிக்க முடியவில்லையா! ஏன்?அவருக்கு நெற்றிக்கண்ணிலே ‘சென் ஐ’.
13. திரௌபதிக்கு பஞ்ச பாண்டவரில் யாரை ரொம்ப பிடிக்கும் என்று குந்திக்கு சந்தேகம். கிருஷ்ணனிடம் கேட்டாள். இன்னிக்கு திரௌபதிக்கு ‘சென் ஐ’ வர வைக்கிறேன். நாளைக்கு யாருக்கு அது வருதோ அவரைத்தான் திரௌபதிக்கு ரொம்ப பிடிக்கும். என்றான். மறு நாள் துச்சாதனுக்கு சென் ஐ வந்தது. ஏனென்றால் அவன் அவள் மேலே எப்போதும் ஒரு கண்ணை வச்சுக்கிட்டே இருந்தான் .
வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்!
வீரபாண்டிய கட்டபொம்மன் லோன் வாங்க வருகிறார்! பராக்!
மேனேஜர் : ஏது வெகு தூரம் வந்து விட்டீர்?
கட்டபொம்மன் : லோன் தருவதாக அறிந்தேன். அதனால் நானே வந்தேன்.
மேனேஜர் : லோன் வேண்டுமானால் அதற்குப் பழைய லோனைத் திருப்பிக்கட்ட வேண்டும்.
கட்டபொம்மன் :லோன் வாங்குவது எங்கள் இனம். அதை திரு ப்பிக் கட்டுவோம் என்று எதிர் பார்ப்பது அறிவீனம்.
மேனேஜர் : உன் மீது குற்றம் சுமத்துகின்றேன்
கட்டபொம்மன் :என்னவென்று?
மேனேஜர் : சொன்னால் எண்ணிலடங்காது!
கட்டபொம்மன் :அது டோட்டல் போடத்தெரியாத குற்றம்.
மேனேஜர் : எனக்கா தெரியாது? கூறுகிறேன் கேள்! மூன்றாம் வருடம் வாங்கிய லோனுக்கு அசல் கட்டவில்லை. அதற்கான வட்டியும் கட்டவில்லை. அதற்கான டாக்குமெண்டிலும் கையெழுத்து போடவில்லை.
கட்டபொம்மன் :அசல், வட்டி, டாகுமெண்ட் – அரசாங்கம் தருகிறது. நாங்கள் அனுபவிக்கிறோம். நீ யார் அதை கெடுக்க? எங்களோடு எம்.எல்.ஏ வீட்டுக்கு வந்தாயா? அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்தாயா? தாசில்தார் பியூனுக்கு சம்திங் கொடுத்தாயா? அல்லது கட்சிப்பணியில் இருக்கும் மகளிர் அணித் தலைவிக்கு ஜிமிக்கி வாங்கி பணி புரிந்தாயா? மானங்கெட்டவனே! யாரிடம் கேட்கிறாய் வட்டி? எவனிடம் கேட்கிறாய் டாகுமெண்ட்?
மேனேஜர் : பழய லோனை கட்டாதவர்களுக்கு புது லோன் தரக்கூடாது. இது ஹெட் ஆபீஸ் உத்தரவு.
கட்டபொம்மன் :அந்தக்கதை எல்லாம் இங்கே விடாதே அப்பனே! ஸாங்ஷன் இல்லாமலே லோன் வாங்கின அனுபவம் நம்மிடம் ஏராளமாக உண்டு. வேறு ஏதாவது புதுக்கதை இருந்தால் கூறு.
மேனேஜர் : முடிவாகச் சொல்லுகிறேன்! பழைய லோனைக் கட்டிவிடு!
கட்டபொம்மன் :ஆ ! என்ன வார்த்தை சொன்னாய்! இதை என் தமிழ் வாத்தியார் கேட்டிருக்க வேண்டும் ! உன் மீது மொட்டை பெட்டிஸன் போட்டு உன்னை இந்த பிராஞ்ச்சை விட்டே மாற்றியிருப்பார். என் அண்ணன் கேட்டிருக்க வேண்டும், தன் தள்ளாத வயதிலும் பொல்லாத ஆட்களை கூட்டி வந்து உன்னை இந்த வங்கியிலே போட்டுத் தள்ளியிருப்பான். என் சின்ன வீடு கேட்டிருக்க வேண்டும். உன்னை இந்த ஊரே நடுங்கும் படி கெட்ட வார்தையால் திட்டி தீர்த்திருப்பாள் .
மேனேஜர் : சரி சரி ! கத்தாதே ! உனக்கு லோன் ஸாங்சண்ட் !!
தஞ்சாவூர் பெயிண்டிங்
தஞ்சாவூர் பெயிண்டிங்
உங்கள் இல்லத்திற்கு தனி மெருகைச் சேர்க்க வேண்டுமா?
தஞ்சாவூர் ஓவியங்களை வாங்கி மாட்டுங்கள்! உங்களுக்கே உங்கள் வீடு பிடித்துப் போய் விடும்.!
கவிதை வரிகள்
முருகா முருகா வருவாயா?
- முருகா முருகா வருவாயா?
- திருவாய் திறந்து தருவாயா?
- உன்னைக் காண ஓடிவந்தேன்
- என்னை நானே தந்துவிட்டேன்
- பழநிப்பழமாய் பிசைந்துவிட்டாய்
- பழமுதிர் சோலையாய் மாற்றிவிட்டாய்
- செந்தூர் அலையில் மிதந்து வந்தேன்
- தணிகை மலையில் தவழ்ந்து வந்தேன்
- சுவாமி மலையைச் சுற்றி வந்தேன்
- குன்றத்து வலையில் சிக்கிக் கொண்டேன்
- வள்ளிக் கணவன் துள்ளி நின்றான்
- வள்ளிக் கிழங்கென அள்ளிக் கொண்டான்
- என்னிரு விழியில் பள்ளி கொண்டான்
- பன்னிரு கரத்தால் பின்னிக் கொண்டான் !
- முருகா முருகா வருவாயா?
- திருவாய் திறந்து தருவாயா?
சிவாஜி படங்களில் பிடித்தது
கௌரவம்!
வேற ஒண்ணும் இல்லேடி! கிளிக்கு றெக்கை மொளச்சுடுத்து! ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு!
‘நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததை எல்லாம் முடித்து வந்தேன்’
‘கண்ணா நீயும் நானுமா?’
மோகன்தாஸ் கேசிலே ஜெயிச்ச பிறகு:
சிவாஜி: ஏண்டா படவா ! மைலாப்பூரிலே என்ன பேசிக்கிறா?
நாகேஷ்: கொழாயிலே ஜலம் வரலைங்கிறா !
I can break it with my tongue power.
யானைக்கும் அடி சறுக்குமா? .. யானை விழுந்தா
எழுந்திருக்கவே முடியாது தெரியுமோ?
வேற கேசை எடுத்துக்கோடா! உனக்கு அட்வைஸ் என்னடா அஸிஸ்டே பண்ணறேன்!
ஏண்டா படவா ! என் பைப்புக்கு நெருப்பு வைக்கிறியா? இல்லை எனக்கா?
ரெண்டுக்கும் நான் தானே பெரியப்பா!
‘தன்னிலை தாழாமையும் அன்னிலை தாழக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’
’அடுத்தது: எம்.ஜி. ஆர்.
கவிதை வரிகள்
எழுது
அஞ்சுகின்ற விழியினிலே கருமை மை எழுது
கெஞ்சுகின்ற இதழினிலே கவிதைப் பொய் எழுது
மிஞ்சுகின்ற நெஞ்சினிலே பஞ்சணையைத் தான் எழுது
விஞ்சுகின்ற இடையினிலே சிந்தனைத் தேன் எழுது
தம்பி சின்னத் தம்பி
வானத்தை பூமியுடன் இணை க்கும் கம்பி –அது
கொட்டுகின்ற மழைத்துளி தான் சொல்லு தம்பி
கானத்தை நெஞ்சுடனே இணைக்கும் கம்பி –அது
மீட்டுகின்ற வீணை தான் சொல்லு தம்பி
மேகத்தில் துடிதுடிக்கும் தும்பி தும்பி – வான்
நட்சத்திரம் என்று நீயும் சொல்லு தம்பி
மோகத்தில் துடி துடிப்பார் வெம்பி வெம்பி – திரை
நட்சத்திரம் என்று நீயும் சொல்லு தம்பி
வானத்தில் நிலவுகின்ற நிலவு தம்பி –அது
போல ஒரு பொண்ணு வந்தா என்னை நம்பி
சொர்க்கத்தைப் பார்த்தோமே எம்பி எம்பி
மிச்சத்தைக் கேட்காதே சின்னத் தம்பி
ராமாயண கிரிக்கெட் – தொடர் கதை
ராமாயண கிரிக்கெட்
அறுபதினாயிரம் டெஸ்ட் ரன்களை குவித்தவரும் இந்நாள் ‘அயோத்யா கிரிக்கெட் கிளப்’ தலைவருமான தசரதன் தன் பிள்ளைகள் ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் நால்வரும் கிரிக்கெட் டில் சிறப்பாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டார். அது சமயம் அங்கே வந்த விஸ்வாமித்ரர் சௌத் ஆப்ரிக்காவில் நடக்கும் லோக்கல் மேட்சில் கலந்து கொள்ள ராமனையும் லக்ஷ்மணனையும் கூப்பிட்டபோது அவர்கள் எதிர் காலம் என்னாகுமோ என்று கவலைப்பட்டார்.
சௌத் ஆப்பிரிக்காவில் சூப்பராக அவர்கள் விளையாடியதைப் பார்த்து மனம் மகிழ்ந்த விஸ்வாமித்ரர் மிதிலையில் நடக்கும் புது வித கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ராம லக்ஷ்மணரை அழைத்துச் சென்றார்.
மிதிலையில் தக தக என்று தங்கத்தினால் ஆன ‘வோர்ல்ட் கப் ‘ ஒன்று பரிசாகக் காத்துக்கொண்டிருந்தது. அருகே மாபெரும் பேட்.. அந்த பேட்டை எடுத்து யார் ஜனகர் போடும் பந்தை சிக்ஸர் அடிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ‘வோர்ல்ட் கப்’.
ராமன் வந்து பேட்டைத்தூக்கி ஜனகர் போட்ட புல்டாஸ்சை வேகமாக அடிக்க பேட், பந்து, ஜனகரின் அரண்மனை ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிப் போயின. ராமனுக்குக் கிடைத்தது வோர்ல்ட் கப் .
தசரதன் மிக மகிழ்ந்து ராமனை அயோத்யா கிரிக்கெட் டீமின் காப்டனாக்க நிச்சயித்து அறிவித்தார்.
உடனே ஏ சி சி யின் மற்றொரு மெம்பர் கைகேயி பரதனைத்தான் கேப்டனாகப் போட வேண்டும் என்று வாதாடினாள் . அதுமட்டுமல்லாமல் ராமன் 14 வருஷம் ‘சென்னை 28ல்’ இருக்க வேண்டும் என்றும் போராடினாள் . கைகேயிக்குக் கொடுத்த சத்தியத்தை எண்ணி கலங்கினான் தசரதன்.
ராமன் தானாகவே சென்னை 28 போவதாக ஒப்புக்கொண்டு வோர்ல்ட் கப்பையும் லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
(தொடரும்)
கவிதை வரிகள்
குருவி குருவி குருவி
- குருவி குருவி குருவி
- கும்பகோணத்துக் குருவி
- குருவி குருவி குருவி
- குளிக்கப் போனது குருவி
- அருவி அருவி அருவி
- குத்தாலத்து அருவி
- அருவி அருவி அருவி
- குருவியை அழைத்தது அருவி
- குளிக்கும் குருவியின் வளைவு நெளிவை
- உத்துப் பாத்தது அருவி
- முறைச்சுப் பாத்த குருவியின் அழகில்
- விறைச்சுப் போனது அருவி
- குருவி குருவி குருவி
- குஷியாய் குளிக்கும் குருவி
- வழுக்கிப் போனது அருவி
- குருவியின் மேனியைத் தழுவி
- அருவி அருவி அருவி
- ஆசையை கொட்டும் அருவி
- குருவியின் மேனியில் பரவி
- சுகத்தில் சொக்குது அருவி
- அருவியின் நீரைக் குடிக்கும் குருவி
- முத்தம் முத்தம் என்றது அருவி
- குருவியின் மேனியில் அளையும் அருவி
- நித்தம் நித்தம் என்றது குருவி
- அருவியின் வேகம் தாங்கா குருவி
- வலியில் கொஞ்சம் துடித்தது குருவி
- ஆசையை அடக்க முடியா குருவி
- அருவியின் மடியில் மடிந்தது குருவி
- குருவியின் அழகை மறவா அருவி
- குருவியின் நினைவை மனதில் மருவி
- குருவியின் கனவை நெஞ்சில் நிறுவி
- பெருகிக் கொட்டுது கண்ணீர் அருவி
சிசு கதை
சின்னஞ்சிறு கதை (சிசு கதை)
ஹெமிங்க்வே எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு வார்த்தை சிசு கதை!
For sale, Baby’s shoes, never worn
விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.
குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம் – செருப்பை விற்கும் அவலம் –
ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!
இன்னொரு திகில் சிசு கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:
தலைப்பு : சத்தம்
The last man on Earth sat alone in a room. There was a knock on the door…“
உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!
இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:
விற்பதற்கு குழந்தை வந்தது
பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !
கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!
பசிக்கு விலை உடல் என்றாள்.
அடுத்த தடவை என்னை கனவில் தான் காண்பாள்!
பால் பொங்கியது- அணைத்தேன்!
நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!
மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!
பிறந்த பெண் குழந்தை மரணம் . கொடுமை -பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!
என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! போஸ்ட் மார்ட்டம் பண்ண வந்த டாக்டர் திணறினார்!
மன்னர் ஜோக்ஸ்
வீரபாகு என்ற மன்னர் பெயரை கல்வெட்டில் யார் மைசூர்பாகு என்று மாத்தியது?
போரில் தானே புறமுதுகு காட்டுவார். அந்தப்புரத்திலிருந்து ஏன் இப்படி தலை தெறிக்க ஒடி வருகிறார்?
மகாராணி வெளக்கமாத்தை எடுத்துக்கொண்டு துரத்தி வருகிறார்களாம்.
பாரி ஓரி காரி வரிசையில் நானும் சேர வேண்டும் அமைச்சரே!
பூதகேசரி என்ற தங்கள் பெயரை பூரி என்று சுருக்கி விடலாம் மன்னா!
வரிக்குதிரை புலவர் அருகே வர ஏன் பயப்படுகிறது?
வரிகளைத் திருடும் புலவர் அல்லவா அவர்!
தினமும் ஒரு ஜைனப் பெண்ணைக் கேட்கிறாரே மன்னர் ?
அவர் ஜைன மதத்தைத் தழுவப் போகிறாராம்!
மந்திரி நமது நாட்டில் ஏன் தோசையே இல்லை?
ஆசையை ஒழிக்கவேண்டும் என்ற அரசாணையில் தவறுதலாக தோசையை என்று அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது மன்னா!
சிபி மன்னர் பரம்பரையில் வந்த நம் மன்னர் என்ன செய்கிறார் பார்த்தாயா? புறாக் கறியை தொடையில் வைத்து வெட்டுகிறார் !
காபி ராகத்தில் பாடும் புலவரிடம் கொஞ்சம் சிக்கரி சேர்த்திருக்கலாம் என்றும் சொல்வது கொஞ்சமும் சரியில்லை மன்னா!
என்னது ! எதிரி நாட்டு யானைப் படையை நமது அரசர் பொடிப் பொடியாக்கி விட்டாரா?
பொடி டப்பாவை நமது மன்னர் தவறிக் கீழே போட்டார். யானைப்படை தும்மித் தும்மி தனக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டு அழிந்து விட்டது.
மன்னர் ஏன் போர் என்றதும் தளபதியை அழைக்காமல் பழ வியாபாரியை அழைக்கிறார்?
போன வாரம் அரண்மனையில் இருந்த அத்தனை வாளையும் போட்டு பேரீச்சம்பழ அல்வா சாப்பிட்டு விட்டாராம்!
மன்னா! நமது ஆட்சியில் மிகமும் கேவலமான ஊழல் ஒன்று நடைபெற்றுவிட்டது !
என்ன அது?
பூஜை வறட்டியில் மாட்டு சாணத்துக்கு பதிலாக யாரோ யானை சாணத்தைக் கலந்து விட்டார்களாம்!
பக்கத்து நாட்டு ராஜா மலிவு விலையில் இட்லிக் கடை, கள்ளுக் கடை வைத்ததைப் பார்த்து நீங்களும் மலிவு விலையில் சலூன் வைப்பது கொஞ்சமும் சரியில்லை மன்னா!
மன்னா நமது மீனவப் படகுகள் கடலில் சென்ற போது எதிரி மன்னன் எல்லாவற்றையும் பிடித்து விட்டான்!
என்ன துணிச்சல்! கடலிலிருந்த எல்லா மீன்களையும் ஏற்கனவே பிடித்து விட்டானா?
சின்னப்பெண்ணே
சின்னப்பெண்ணே
மல்லிகைப் பந்தொன்று தொட்டிலில் கிடக்குது
வாய் விட்டுச் சிரித்து மணத்தைப் பரப்புது
வந்திடும் ஆனந்தம் அன்பே உன்கைவீச்சில்
தந்திடும் இன்பம் எந்நாளும் உன் வாய் எச்சில்
கன்னம் குழிந்திடச் சிரித்திடும் கண்கள்
என்னை ஈர்க்கும் மாணிக்கக் கற்கள்
பொன்னகை பெண்ணின் புன்னகை என்பர் –உன்
சின்னகை பட்டாலே தூசவை என்பர்
உன்னை நான் எடுத்துத் தோளிலே கிடத்தி
கன்னத்தில் கன்னத்தை மெல்லவே இழைத்து
உன்பட்டு முதுகில் என் கையால் தட்டி
ம்ம்ம் என்று நீ ராகமும் இழுக்க
ஓ ஓ ஓ என்று நான் தாளமும் இசைக்க
ஆனந்த கீதங்கள் சங்கமமாகும்
அற்புத சுகங்கள் என்வசமாகும்
பாரதியாரின் பொன் வரிகள்
பாரதியாரின் பொன் வரிகள்
சுவை புதிது போரும் புதிது
வளம் புதிது சொற்புதிது
கடமை யாவென தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
துணையே மணியே அணியே இணையே
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்
பக்தி உடையார் காரியத்தில் பதறார்
செய்க தவம் செய்க தவம் நெஞ்சே
தீ வளர்த்திடு வோம் பெருந் தீ வளர்த்திடு வோம்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே
தமிழ்த்திரை உலகில் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்கள்
N S கிருஷ்ணன் – டி ஆர் ராமச்சந்திரன்
தங்கவேலு- சந்திரபாபு
பாலையா- நாகேஷ்
சுருளிராஜன்- சோ
தேங்காய் சீனிவாசன் – கவுண்டமணி – செந்தில்
விவேக் – வடிவேலு
சந்தானம் – மனோரமா
கோவை சரளா
இவர்களைத்தவிர
துரைராஜ் ,காளி என் ரத்தினம், டி ஏ மதுரம் , எம் சரோஜா, சாரங்கபாணி, கா கா ராதாகிருஷ்ணன் , குலதெய்வம் ராஜகோபால், எஸ் எஸ் சந்திரன், ஜனகராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன், எஸ் வி சேகர், குமரிமுத்து, லூஸ் மோகன், க்ரேசி மோகன், ஓமக்குச்சி நரசிம்மன், எம் எஸ் பாஸ்கர், கருணாஸ், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கமுத்து, மதன் பாப், மயில்சாமி, மனோபாலா, பரோட்டா சூரி, சத்யன்
( படத்தில் யார் யார் இல்லை என்று கண்டுபிடியுங்கள்)
இந்த மாத ஸ்டார் சிறுகதை சுருக்கம்
சுஜாதாவின் “ பேப்பரில் பேர்”
எல்லாருக்கும் சிறு வயதில் கிராமத்தில் கிரிக் கெட் , கபடி, கில்லி தண்டா என்று ஆடிய சுவாரசியமான அனுபவம் இருக்கும். சுஜாதா தன் பாணியில் ஸ்ரீரங்கம் கிரிக்கெட் கிளப்பில் பொடியன்கள் கூட ஆடிய அனுபவத்தைக் கதையாகச் சொல்லுகிறார்.
கே வி தான் ஹீரோ – கேப்டன்
தஞ்சாவூர் டீம் – பெரிய டீம்
நீ நல்லா ஆடுவியோல்லியோ?
சுமாரா ஆடுவேன் – ரங்கராஜன் (சுஜாதா)
மாட்ச் நிஜ மாட்ச்சா ?
உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? பெரிய டீம்னா எங்கேயாவது எக்கச்சக்கமா பந்து போட்டு மர்ம ஸ்தா னத்துல பட்டுரப் போறது.
தஞ்சாவூர் டீம் வந்தபோது வயத்தில் புளியைக் கரைத்தது. ஒவ்வொருத்தரும் மாமா மாமாவாக தடித்தடியாக இருந்தார்கள். ( ஸ்ரீரங்கம் டீமில் பொடியன்கள் தான் ஜாஸ்தி)
முதலில் இவர்கள் கூட ஆட மறுத்தார்கள். கடைசியில் விளையாடி கே வியும் சுஜாதாவும் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆடி 52 ரன் எடுத்தார்கள் ( அதில் சுஜாதா 4 ரன் தான்.) கே வியின் புண்ணியத்தில் அவர்கள் 152 ரன் எடுத்தார்கள். தஞ்சாவூர் டீமை 132ல் சுருட்டினார்கள். ( அம்பயரை வேறு கையில் போட்டுக்கொண்டு எல் பி டபுள்யூ கொடுக்காமல் செய்து விட்டான் கே வி.)
அடுத்த நாள் இந்த வெற்றிச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் மகா ஓரத்தில் “ K V Srinivasan was ably supported by Rengarajan என்ற நியூசும் வந்ததாம்.
சுஜாதா சொல்கிறார்:
“இப்போது எல்லா பேப்பரிலும் எத்தனையோ முறை என் பேர் வருகிறது. ஆனால் அந்த தினம் ஒரு மூலையில் ஒரு வரியில் கிடைத்த துல்லியமான சந்தோஷம் எனக்குத்திரும்பக் கிடைக்கவில்லை”
“பேப்பரில் பேர்” எவ்வளவு நிதர்சனம்!!
கவிதை வரிகள்
நாராணீயாம்ருதம்
நாராயணர் சொன்ன நாராயணீயம்
ஆராதனை செய்யும் புண்யாமிர்தம்
நாராயணீயம் சுவை தேனாமிர்தம்
பாராயணம் செய்ய பாலாமிர்தம்
- சிரக்கம்பம்
இருக்கையில் இருக்கும் வரை
இறக்கைகள் தேவையில்லை
சிரக்கம்பம் செருக்கெடுத்தால்
சிரமே தேவையில்லை
- மம்மத ராசா
வில்லெடுத்து வந்தார் சேர நாட்டு ராசா
நெல்லெடுத்து வந்தார் சோழ நாட்டு ராசா
சொல்லெடுத்து வந்தார் பாண்டி நாட்டு ராசா
செல் எடுத்து வந்தார் நம்ம பெரம்பலூர் ராசா
மத்த ராசாவுக்கு ஜே ஜே போடு!
நம்ம ராசாவுக்கு ஜி ஜி போடு!