ஃபிட் பிட் ( FITBIT )

                                                     4/25 

ஃபிட்  பிட் என்பது ஒரு  சிறிய எலெக்ட்ரானிக் கருவி. ஒரு பென்  டிரைவ் ( pen drive )வடிவத்தில் இருக்கும் . அதை நம்முடைய பாக்கெட்டிலோ கையிலோ கட்டிக் கொண்டால் அது நம்  உடம்பின் அசைவுகளைக்  கணித்து அதன் மூலம் நமது சுறுசுறுப்பை அளக்க உதவும்.

image

நாம் எவ்வளவு அடிகள் நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம்,  எவ்வளவு கலோரி செலவழிக்கிறோம் என்பதை சுலபமாகச் சொல்லும் கருவி.

தூங்கும் போது அதைக் கட்டிக் கொண்டு (?) படுத்தால் , நாம் எப்படித் தூங்கினோம், எவ்வளவு தடவை புரண்டு படுத்தோம் என்று நமது தூக்கத்தின் தன்மையை அறிய உதவும்.. 
நமது தினசரி நடவடிக்கைகளைக்   கம்ப்யூட்டரில் WI-FI மூலமாக அப்டேட் செய்து கொள்ளும். (அதற்கு  fitbit.com இல் பெயர்,பாஸ்  வேர்டைப் பதிவு  செய்து கொள்ளவேண்டும்)

image

வாரா வாரம்  நம்முடைய சுறுசுறுப்பின் ரிபோர்ட்டும் கிடைக்கும்.  நமது  ஃபிட்  பிட் நண்பர்களையும் இந்த சைட்டில் இணைத்துக் கொண்டால், நமது காலடித் தூரங்களை அவர்களுடன்  ஒப்பிட்டுiப்  பெருமைப்படலாம் அல்லது இன்னும் தீவிரமாக முயற்சிக்கலாம். 

இதை  நாள் முழுதும் கட்டிக் கொள்ளலாம். தூங்கும்போதும் குளிக்கும்போதும்  கூட கட்டிக்  கொள்ளலாம். 

2008ல் அறிகுமாகப் படுத்தப்பட்ட கருவி இது.   இதில் ஒரு பூங்கொடியின்  படம் உள்ளது. நம் சுறுசுறுப்பின் அவதாரம் அது. நமது நடைகள் அதிகமாகும்போது பூங்கொடி   படர்ந்து மலர் விரிந்து காணப்படும்.சோம்பல் அதிகமாக இருந்தால் கொடியும் வாடிக் கிடக்கும்.  

மொத்தத்தில் இது ஒரு தேக ஆரோக்கியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டக்  கருவி. நம்மை சுறுசுறுப்பாக மாற்ற அருமையான உறுதுணை. 

image

image