23/25

image

ஏறுதப்பு     ஏறுதப்பு     ஏறுதப்பு
 யாரு தப்பு   யாரு தப்பு   யாரு தப்பு
 
ரெண்டு  பெக்  வாயில்     போட்டாலே
        ஏறுதப்பு – சுதி    ஏறுதப்பு
ரெண்டு மண்டை சண்டைபோட்டாலே
       யாரு தப்பு  – அது யாருதப்பு
 
மனுஷனும் சைக்கிளும் மோதிக்கிட்டா
         யாரு தப்பு  – அது யாரு தப்பு
         சந்தேகமில்லை    சைக்கிள்    தப்பு
சைக்கிளும்  ஸ்கூட்டரும் மோதிக்கிட்டா     
          யாரு தப்பு – அது   யாரு தப்பு
          சந்தேகமில்லை    ஸ்கூட்டர்   தப்பு
ஸ்கூட்டரும் காரும்  மோதிக்கிட்டா     
           யாரு தப்பு – அது   யாரு தப்பு
           சந்தேகமில்லை    காரு        தப்பு
காரும்      லாரியும்     மோதிக்கிட்டா     
            யாரு தப்பு – அது   யாரு தப்பு        
            சந்தேகமில்லை    லாரி        தப்பு

பெண்ணின்  கண்ணைக்   கண்டாலே   
            கண்ணில் போதை     ஏறுதப்பு
            ஏறுதப்பு  அது ஏறுதப்பு     
பெண்ணின்  சேலை      பட்டாலே    
            நெஞ்சில்  சூடு   ஏறுதப்பு
           ஏறுதப்பு  அது ஏறுதப்பு 

பொண்ணும் ஆணும்     காதலிச்சா  
              யாரு தப்பு   – அது  யாரு தப்பு
             சந்தேகமில்லை    ஆம்பிளை   தப்பு
காதல் பொண்ணு   கர்ப்பம் ஆனா
              யாரு தப்பு  –  அது        யாரு தப்பு
              சந்தேகமில்லை    பொம்பளை  தப்பு !!