Daily Archives: April 15, 2015


ஜெயகாந்தானுக்கு அஞ்சலி!

தமிழ் இலக்கிய வட்டத்தின் ஒரு பெரும் ஆரமாக விளங்கியவர் ஜெயகாந்தன் என்பதில் சந்தேகமேயில்லை!
மீசை வைத்த பாரதியைப் போல் இவரும் மீசை முறுக்கும் எழுத்தாள்மையாளர்.
இவரது படைப்புகள்
வாழ்க்கை அழைக்கிறது, கைவிலங்கு,யாருக்காக அழுதான், பிரும்ம உபதேசம் ,பிரளயம், கருணையினால் அல்ல, பாரிசுக்குப் போ , கோகிலா என்ன செய்துவிட்டாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெய ஜெய சங்கரா, கங்கை எங்கே போகிறாள், ஒரு குடும்பத்தில் நடக்கிறது, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, கரிக்கொடுக்கள், எங்கெங்கு காணிலும், மூங்கில் காட்டினிலே, ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், ஊருக்கு நூறு பேர், ஒவ்வொரு கூரைக்கும் கீழே, பாட்டிமார்களும் பேத்திமார்களும், அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள், இந்த நேரத்தில் இவள், காத்திருக்க ஒருத்தி, காரு, ஆயுத பூசை, சுந்தர காண்டம், ஈஸ்வர் அல்லா தேரே நாம் . ஓ அமெரிக்கா, இல்லாதவர்கள், இதய ராணிகளும் இஸ்பேட்டு ராஜாக்களும், காற்று வெளியினிலே, இன்னும் ஒரு பெண்ணின் கதை, ரிஷிமூலம், சினிமாவுக்குப் போன சித்தாள், உன்னைப்போல் ஒருவன், அற்புதம்,
பாரதி பாடம், இமயத்துக்கு அப்பால், கட்டுரைகள் எழுதியவர்.
சில கதைகள் அருமையான திரைப்படங்களாகவும் வந்துள்ளன.
மற்றும் எண்ணற்ற சிறுகதைகள்.அவற்றுள் முக்கியமானவை அக்கினிப் பிரவேசம். ஒரு பிடி சோறு. .எல்லா சிறுகதைகளிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர்..
பத்ம பூஷண், ஞானபீடம் ,சாகித்ய அகாடமி, மற்றும் பல உலக விருதுகள் பெற்றவர்.
ஜெயகாந்தனின் சுய சரிதைப் பாடலைக் கேளுங்கள்!
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
பொன்னியின் செல்வன்
இந்தக் கோடையில் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!
இரண்டு அணிகள் பொன்னியின் செல்வன் நாடகத்தை மேடையேற்றப் போகிறார்கள்.
1999 இல் முதல் முறையாக மேடையேற்றினார்கள். அதன் புகைப்படம் கிடைக்கவில்லை!
அதைப் போல் TKS புகழேந்தி அவர்களும் ’ பொன்னியின் செல்வன் – நந்தினியின் பார்வையில்’ என்ற நாடகத்தை 2005 லிருந்து நாலைந்து முறை மேடையேற்றியிருக்கிறார்களாம். அதுபற்றி புகைப்படமோ மற்ற தகவலோ இல்லை!
இது சிகாகோ தமிழ்ச்சங்கம் 2014இல் மேடையேற்றியபோது எடுத்த படம்.!

இது 2014இல் சென்னையில் மேஜிக் லேண்டர்ன் மேடையேற்றிய வெற்றிப் படைப்பில் எடுத்த புகைப்படம் !

இது இந்த மாதம் மேடையேற்றப்பட்ட ஸ்ரீதேவி ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கும் ஆடுதுறை SSN சபாவின் தயாரிப்பு!
பொன்னியின் செல்வன் கதையைப் படிக்காதவர் ஒருவர் நாடகத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட ஒருவரை குவிகம் ஆசிரியர் அழைத்துச் சென்று SSN சபாவின் நாடகத்தைப் பார்க்க வைத்தார். அவரின் விமர்சனத்தை அடுத்த பக்கத்தில் பாருங்கள்!
அந்த நாடகத்தில் வந்தியத் தேவனும் ஆதித்திய கரிகாலனும் உரையாடும் இடம் இது!


மறுபடியும் மேஜிக் லேண்டர்ன் 2015 ஜூலையில் மேடையேற்றுகிறார்கள்!

இன்னுமொரு இனிக்கும் செய்தி!
பொன்னியின் செல்வன் கிராஃபிக்கில் வலம் வரப் போகிறது! சென்னையின் REWINDA MOVIETOONS ‘நந்தினி கலைக் கூடம்’ என்ற பலகையில் பொன்னியின் செல்வனை 2 டியில் கொண்டு வருகிறார்கள்!
ஏழு வருட உழைப்பு! 15 டிவிடிகள்! இந்த மாதம் ஏப்ரலில் வெளிவர இருக்கிறது!
வாங்கத் தயாராகுங்கள்!
அதன் டிரைலர் இதோ!
பொன்னியின் செல்வன் – நாடக விமர்சனம் (எஸ்.கே.என் )

நாடகத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் முன் :-
‘கிடுக்கிப்பிடி எழுத்தாளர்’ என்றும்
அறியப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்திராத ஒருசிலரில் நானும் ஒருவன்.
சுத்தமாக கதையும் தெரியாது. ஆகவே கல்கியின் படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும்,
நாடகத்தில் சொல்லப்படும் முறையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய சிரமம்
இல்லை. கதை புரியவேண்டும் நல்லமுறையில் சொல்லப்படவேண்டும் அவ்வளவுதான்.
பிரபலமாகிவிட்ட நாவல்களை நாடகம் அல்லது
சினிமாவிற்கு கொண்டுவரும்போது வேறொரு சிக்கலும் உள்ளது. சில பாத்திரங்களை வாசகர்கள் மனதில் உருவகப்படுத்தி
இருப்பார்கள். நடிப்பவர்கள் அந்தக் கற்பனைக்குச் சமீபமாக இல்லாவிட்டால் அந்த
சினிமாவோ நாடகமோ அவர்களைக் கவராது.
அதிலும் கல்கிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் லட்சக்கணக்கில் அபிமானிகளும்,
ஆயிரக்கணக்கில் உபாசகர்களும் உண்டாயிற்றே..
‘மோகமுள்’ ஜமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர்,
‘தில்லானா மோகனம்பாள்’ வைத்தியாக நாகேஷ், பாரதியாக சயாஜி ஷிண்டே. என்று மிகப்
பொருத்தமான நடிகர்கள் அப்படத்தின் வெற்றிக்கு ஓரளவிற்குக் காரணமாகிறார்கள்
பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்
படுத்திய அளவில் ஆடுதுறை எஸ்.எஸ்.என் சபாவின் நாடகத்தைப்
பற்றி எனது கருத்துக்கள்.
ஐந்து பாகங்கள், ஏகப்பட்ட கதை மாந்தர்கள்,
அதிகமான நிலை களங்கள், மூன்று
க்ளைமாக்ஸ்கள், இரண்டு சஸ்பென்ஸ்கள், என்று பல சவால்களைக் கொண்ட இந்த பெரும்
படைப்பை மூன்றரை மணிநேர நாடகமாக்கிய
முயற்சி பாராட்டத்தகுந்ததே..
ரசித்தவை:
- சிக்கலான இந்தக் கதை புரியும் வகையில் விறுவிறுப்பாகவே சொல்லப்பட்டு இருக்கிறது
- சரித்திர நாடகமாகையால் வசனங்கள் இலக்கணத் தமிழில் நெருடல் இல்லாமல்
எழுதப்பட்டுள்ளன. உச்சரிப்பு (இது தற்காலப் பெரிய பிரச்சினை) மிகவும் சிறப்பு.
(‘ழகரம்’ நன்றாகவே அனைவரும் உச்சரிக்கிறார்கள். ‘லகரமும்’ ‘ளகரமும்’ சிலர்
திண்டாடுகிறார்கள்) - காட்சி அமைப்புகளும் அருமை. ‘மூடு பல்லக்கு’ , கடலில் ‘படகு’, ‘யானை’,
‘கப்பல் விபத்து’ ஆகியவை சிறப்பாகவே மேடையில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. - இரண்டு “FLASH BACK”
மட்டுமே. நன்றாகவும் வந்திருக்கிறது - எல்லா நடிகர்களுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதிலும் ‘ஆழ்வார்க்கடியான்’, ‘நந்தினி’ இரு சவாலான
பாத்திரங்களை இயக்குனரும் அந்த நடிகர்களும் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். கடம்பூர் அரண்மனையில் ஆதித்ய கரிகாலன் நடிப்பும்
வசனங்களும் மிகச் சிறப்பு. - எல்லாவற்றிற்கும்
மேலாக பார்வையாளர்கள் நிறைந்த அரங்கம்
கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.
சில நெருடல்கள்.
- நாடகத்தின் இறுதி அரைமணிநேரத்தில் நாடகம் இரண்டு மூன்று முறை முடிவடைந்து மீண்டும்
தொடங்குவதுபோல் இருக்கிறது. - கதையை நகர்த்திச் செல்ல வரும் வசனங்களில் ரவிதாசன் என்னும் பாத்திரம்
மூலமாக வரும் இடங்கள் சற்று குழப்பம். “Dialogue Delivery” பிரச்சினையாக
இருக்கலாம். - ஒரு சில இடங்களில் “எடிட்டிங்” தேவைப்படலாம். ஆதித்ய
கரிகாலனின் மறைவின் சோகம், யாருக்கு மகுடம் ஆகிய இடங்களில் அவரவர் கருத்துக்கள்
என்பவை நாடக பாணியில் ஒருவர் ஒருவராக அனைவரும் பேசுகிறார்கள். மதுராந்தக சோழன்
மனமாற்றம் சற்று நீளம். - “Loose Ends” ஒரு
சில உள்ளன. இவை நாடக வடிவத்திற்கு மாற்றியதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்த அளவில் நாடகம்
ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது.
மன்மத வருட தணிகை பஞ்சாங்கம்
இந்த ஆண்டு ஏப்ரல் 14 செவ்வாயன்று தமிழ்ப் புத்தாண்டு மலர்கிறது!
இந்த ஆண்டுக்குப் பெயர் மன்மத வருடம்.
கேட்பதற்கே ஜாலியாக இருக்கிறதல்லவா?
மேலே உள்ள லிங்க்கை கிளிக்கினால் வருட பஞ்சாங்கம் உங்கள் முன் விரியும்! (நன்றி: தணிகை பஞ்சாங்கம்!)


வானமென்னும் வீதியில் ஓடும் கிரகங்களின் நிலையை இவ்வளவு துல்லியமாக எப்படி இவர்களால் கணிக்க முடிகிறது?
இதைப் பற்றி யாராவது வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்.
என்னை ஈர்த்திடும் அந்த இரண்டு!

என்னை ஈர்த்திடும்அந்த இரண்டு – நல்ல
பொன்னைப்பழித்து வருகுது உருண்டு
பொன்னையேஉருக்கிடும் அந்த இரண்டு – தினம்
என்னையே மயக்கும் நெருப்பிடைத் துண்டு
மூடித் திறந்தஅந்த இரண்டு – எந்தன்
நாடி எகிறுது
அழகினைக் கண்டு
கருப்பு
வண்டினம் அந்த இரண்டு – என்னை
விருப்புடன்
அழைத்து மிரளுது மருண்டு
தனம் தனம்
என்ற அந்த இரண்டு – என்னை
தினம் தினம்
கொஞ்சி நெகிழ்ந்திடும் திரண்டு
இரும்பிடைக்
காந்தமோ அந்த இரண்டு – என்னை
துரும்பென
மாற்றி சுழலுது அரண்டு
சிலையென
நிற்கும் அந்த இரண்டு – பெரும்
மலைதனில்
வெடித்திடும் நாட்டுவெடிக் குண்டு
கண்ணைப்
பறித்திடும் அந்த இரண்டு – -மணப்
பெண்ணைப்
போல் நாணிக் கோணுது மிரண்டு
கொள்ளை அடித்திடும் அந்த இரண்டு –நல்ல
கொள்கைப்
பிடிப்பில் பொங்கிடும் வண்டு
சூரிய சந்திரனோ
அந்த இரண்டு – நல்ல
நேரிசை வெண்பாபோல்
அழகிய செண்டு
துள்ளிக்
குதிக்குது அந்த இரண்டு – என்னை
அள்ளிச்
சொருகிடும் பெருங்கடல் நண்டு
அகத்தைக்
காட்டிடும் அந்த இரண்டு – உன்
முகத்தின்
இருவிழிகள் தான்அந்த இரண்டு !
அன்பு கொஞ்சும் விழி இரண்டு
ஆசை காட்டும் விழி இரண்டு
இன்ப மூட்டும் விழி இரண்டு
ஈகை தரும் விழி இரண்டு
உண்மை பேசும் விழி இரண்டு
ஊஞ்சல் ஆடும் விழி இரண்டு
என்னை ஈர்க்கும் விழி இரண்டு
ஏக்கம் தரும் விழி இரண்டு
ஐயமில்லா விழி இரண்டு
ஒற்றிக் கொள்ளும் விழி இரண்டு
ஓங்கார விழி இரண்டு
ஔவை கண்ட விழி இரண்டு
முருகா உனக்கு விழி
பன்னிரண்டு !

ஷாலு மை வைஃப்

“‘அட ராவணா ’ – ஷாலு இது மட்டும் வேண்டாம் . இது ஆபத்தில் கொண்டு போய் விடும்” என்று அலறினேன்.
‘ஏன் இப்படி நான் கொலை செய்யப் போவது போல் துடிக்கிறீர்கள்?’ என்று அமைதியாகக் கேட்டாள்.
இந்த குருஜினியிடம் போக ஆரம்பித்த பிறகு ஷாலு ரொம்பவே மாறிப் போய் விட்டாள். முன்னை மாதிரி அவள் எதற்கும் அதிகமாக உணர்ச்சி வசப் படுவதில்லை. முன்பெல்லாம் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவள் தான் ‘அட ராவணா ’ என்று அடிக்கடி கத்துவாள்.
பால் பொங்கி வழிந்தால் – ‘அட ராவணா ‘
தோசை கரிஞ்சு போனால் ‘அட ராவணா ’
ஹிந்து பேப்பர் காலையில் வரலை என்றால் ‘அட ராவணா ’ ’
பையன் மூன்றாவது ரேங்க் வாங்கி வந்தால் ‘அட ராவணா ’
நான் பல்தேய்க்காம பெட் காபி கேட்டால் ‘அட ராவணா ’
கரண்ட் கட் ஆனா ‘அட ராவணா ’ அதைவிட, கரண்ட் திரும்ப வந்தாலும் அதே ‘அட ராவணா ’ தான்.
இந்த மாதிரி ராம நவமி அன்றைக்குப் பானகம் பண்ணீயிருந்தாள். கொஞ்சம் பக்கத்து வீட்டு மாமிக்கும் மிச்சம் வையுங்கோ என்று அவள் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளே நான் வழக்கம் போல் எல்லாத்தையும் காலி பண்ணிட்டேன். ‘அட ராவணா ’ என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.
அதை மறந்து போய் என் நண்பன் வீட்டுக்கு வந்திருந்த சமயம் ‘கொஞ்சம் பானகம் கொண்டுவாயேன் ’. என்று குரல் எழுப்பினேன். அவளுக்கு செம கோபம் . நான் வேண்டுமென்றே கேட்கிறேன் என்று எண்ணி ‘அட ராவணா ’ ‘அட ராவணா ’ ‘அட ராவணா ’ என்று கத்திக் கொண்டு அடுப்படியிலிருந்து ஓடி வந்தாள். என் நண்பன் பதறிப் போய் விட்டான். அவன் பேர் ராவணன். அப்பக் கூட மாறாமல் ‘அட ராவணா ’ ராவணன் சார் வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டாமோ? நான் காபி எடுத்து வருகிறேன் என்று போய் விட்டாள்.

ஆனா இப்போ ரெண்டு மாசமா அந்த ‘அட ராவணா ’ வார்த்தையைச் சொல்வதேயில்லை. அதைக் கேட்காமல் எனக்கு அவள் கூட பேசினமாதிரியே இல்லை. நான் சிலசமயம் வேண்டுமென்றே அந்த மேஜிக் வார்தையைச் சொல்லிக் காட்டுவேன். டெலிபோன் அடித்து அதை எடுக்கப் போகும் முன் நின்றுவிட்டால் அவளைப் பார்த்துக் கொண்டே ‘அட ராவணா ’ என்று சொல்வேன். அவள் என்னைப் பார்த்து அமைதியா ஒரு புன்னகை பூப்பாள். எனக்கு ’ ஏ! அற்பப் பதரே"’ ன்னு சொல்ற மாதிரி இருக்கும் .
தாங்க முடியாமல் அவளிடமே கேட்டேன் ’ நீ எப்படி ‘அட ராவணா ’ வை விட்டு விட்டாய்?’ என்று.
எல்லாம் குருஜினியின் பயிற்சி! "ஏதாவது தப்பு நடந்து விட்டால் ஷாக் அடிச்சா மாதிரி அலறக் கூடாது. – ‘நோ மோர் (க்)நீ ஜெர்க் ரியாக்ஷன்!’ என்று குருஜினி மாதிரியே சொல்லிவிட்டு ‘அந்த மாதிரி சமயத்தில் மனுசுக்குள் ஒரு வித்தியாசமான பூவை நினைத்துக் கொள்ளவேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார். நான் எருக்கம் பூவை நினைத்துக் கொள்கிறேன். பிள்ளையாருக்கு பிடிச்ச பூ இல்லையா?“
எருக்கம் பூவா/ இதுக்கு ‘அட ராவணா ’ வே தேவலாம் என்று நினைத்துக் கொண்டேன் இருந்தாலும் அவளிடம் சொல்லி அவள் சாபத்தை வாங்கிக் கொள்ளும் தைரியம் எனக்கு அப்போது இல்லை.
ஆனால் இந்த மாதம் அவள் செய்யப் போகும் வேலையைச் சொன்னதும் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டு ‘அட ராவணா ’ என்று அலறினேன்.
"ஷாலு , இது ஆபத்தில் கொண்டு போய் விடும். போலீஸ் வந்து நம்மை அரெஸ்ட் செய்தாலும் செய்வார்கள்..”
நீங்கள் எப்பவும் இப்படித் தான் எல்லாத்துக்கும் நெகட்டிவ் வைப்ஸ் காட்டுகிறீர்கள்.உங்கள் ‘ஆனால்’ ‘முடியாது’ ,’ஏன்’ , ‘நாளைக்கு’ ‘வேண்டாம் ‘என்ற வார்தைகளை உங்கள் வீட்டு பாத் ரூம் பிளஷ்ஷில் போட்டுத் தண்ணீரைத் திறந்து விடுங்கள் ! (உபயம் குருஜினி)
‘லுக் ஷாலு! இந்த லெக்சர் எல்லாம் ஓகே . கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. நாம இருக்கிறது நாலாவது மாடி. இங்கே வந்து அந்த பூஜையெல்லாம் பண்ணனும்னா முடியுமா? ’ ஏற்கனவே இந்த செக்ரட்டரி நம்மை விரட்ட பிளான் போட்டுகிட்டிருக்கார். இத மட்டும் பண்ணினோம்னா போலீஸ் கிட்டே போட்டுக் கொடுத்திடுவார் – சந்தேகமேயில்லை.’
செக்ரட்டரி பத்திக் கவலைப் படாதீங்கோ! அவர் வைஃப் கிட்டே அனுமதி வாங்கிட்டேன். செக்ரட்டரி ஏதாவது சொல்வாரோ என்று கேட்டதுக்கு அந்த மாமி என்ன சொன்னா தெரியுமா? ’ அவர் கிடக்கார்! அச்சு பிச்சு! இந்த மாதிரி காரியம் செய்யறது காசி ராமேஸ்வரம் போறது போல நீங்க செய்யுங்கோ! ஏதாவது பிரச்சனைன்னா நான் பாத்துக்கறேன்.’
அந்த மாமிக்கு ஏற்கனவே பார்வை மட்டு. என்னத்தைப் பாத்துக்கப் போறா? ஷாலு! வேணும்னா காசி ராமேஸ்வரம் பத்ரி கேதார்நாத் எல்டிசி போட்டு போயிட்டு வருவோம். இதை விட்டிடலாமே?
‘நீங்க கொஞ்சமும் கவலைப் படாதீங்கோ! குருஜினி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு தருவாங்க. ஒரே நாள் பூஜை!“
அதென்ன ஆமாதா பூஜை?
கோமாதா பூஜை தான். கோ என்றால் மாடு. அதை இங்கிலீஷிலே ‘போ” என்று சொல்ற மாதிரி நெகடிவா இருக்கும். அதனாலே அதைத் தமிழ்ப் படுத்தி ‘ஆமாதா’ அப்படின்னு குருஜினி சொன்னாங்க! தமிழில் ‘ஆ’ என்றால் பசு. மணிமேகலையில ஆபுத்திரன் கேள்விப் பட்டதில்லே?
அதெல்லாம் சரி! இந்த கோமாதா பூஜை வீட்டுக்குள்ளே தான் வைச்சுக்கணுமா? நம்ம காம்பவுண்ட் கிட்டே ஒரு ஷெட் இருக்கே அதிலே வைச்சுக்கிட்டா என்ன?
வீட்டில வைச்சிக்கிட்டா தான் முழுப் பலனும் கிடைக்குமாம். பின்னே எதுக்காக கிரகப் பிரவேசத்தில பசு மாட்டை அழைச்சிக்கிட்டு வர்ராங்களாம்?
அது சரி. பசுக்கு எங்கே போறது? அது எப்படி லிப்டிலே ஏறி நம்ம நாலாவது மாடிக்கு வரும்? பசுக்கு ஏதாவது ஆச்சுன்னா நம்மளை மிருகவதை தடைச் சட்டதில போட்டு சல்மானுக்குப் பக்கத்தில கூண்டில ஏத்திடுவாங்க!
“மறுபடியும் எதிர்மறை எண்ணங்கள்! நல்லா கேளுங்க! குருஜினியின் சொந்தக்காரர் ஒரு பசுவை இந்த பூஜைக்கென்றே வளர்க்கிறாராம். போன வாரம் மைலாப்பூரில பூஜை நடந்ததாம். ஒரு அதிசயம் தெரியுமா? அன்னிக்கு ஒரு பெரிய கட்சி ஊர்வலம் . எப்படி கோமாதாவை பூஜைக்கு அழைத்துச் செல்வது என்று பயந்த போது கட்சித் தலைவரே வந்து கோமாதா போன வண்டிக்கு வழி விடச் சொல்லி உத்தரவு போட்டாராம்."
"இவளை மாற்ற முடியாது! ஆபீஸ் வக்கீல் கிட்டே கலந்து ஏதாவது ‘ஆன்டிசிபேடரி பெயில்’ கிடைக்குமான்னு பாக்கச் சொல்லணும்.

வழக்கம் போல் எங்கள் ஆபீஸ் காலிக் கும்பல் ( ஷாலு என் ஆபீஸ் நண்பர்களுக்கு வைத்த செல்லப் பெயர்) கூட கலந்து ஆலோசித்தேன்.. அன்றைக்கு ஆபீஸில் இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவேண்டியது-நண்பர்களும் அதற்கு ஒத்துப் பாடுவது என்று தீர்மானம் போட்டோம். அப்போது மேனேஜர் கூப்பிடுவதாக இண்டர்காம் ஒலித்தது.
"வர்ற வெள்ளீக்கிழமை உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.” ‘யெஸ் சார்’ என்று ரொம்ப சந்தோஷத்துடன் சொன்னேன். என் குரலில் தனி உற்சாகம் தெரிந்தது. அன்னிக்குத் தான் கோமாதா -சாரி – ஆமாதா பூஜை.
‘யெஸ் சார் சொல்லுங்க முடிச்சிடலாம்’ என்றேன்.
அன்னிக்கு நானும் என் வைஃபும் உங்க வீட்டுக்கு கோமாதா பூஜைக்கு வருகிறோம். உனக்குத் தான் தெரியுமே! எனக்கு இரண்டு பசங்க! அடுத்தது பொண்ணு பிறக்கணும்னு வேண்டிக் கிட்டிருக்கோம்.ஆமாதா பூஜையில தம்பதி சமேதரா கலந்துகிட்டா அது நிச்சயம் நடக்குமாம். உன் வைஃப் இப்பத்தான் போன் பண்ணி சொன்னா.’
ஷாலு எந்தக் கல்லையும் எறியத் தயங்க மாட்டாள் என்பது புரிந்தது. எனக்கு சாய்ஸே இல்லாமல் பண்ணிவிட்டாள்.
‘யெஸ் சார்’என்று சொல்லி விட்டு மனதுக்குள் அழுதுகொண்டே வெளியே வந்தேன். என் காலிக் கும்பலும் கட்சி மாறி விட்டது. அத்தனை பேரும் குடும்பத்தோட வரத் தயாராகி விட்டார்கள். மச்சினி கல்யாணம், குழந்தைக்கு பேச்சு வரலை, குழந்தை இல்லை, தாத்தாவுக்கு காது கேட்கலை , மாமியாருக்கு மூட்டு வலி -இது அததனைக்கும் சகல ரோக நிவாரணி ஆமாதா பூஜையாம். பசு மாட்டைக் கூட சமாளிச்சடலாம் இந்த எருமை மாடுகளை எப்படி சமாளிப்பது? அன்னிக்கு எங்க ஆபீசுக்குப் பொது விடுமுறையே விட்டுட்டாங்கன்னா பாத்துக்கங்க!
அப்புறம் என்ன? நானும் பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு வாசலில் நின்னேன்.எல்லாரும் கோமாதா கோமாதா .. என்று சொல்ல அவசர அவசரமாக ஓடி வந்தோம். ஸ்வாமினி என்று சொல்கிற குருஜினி தான் வந்தார்கள். நல்ல உயரம் . நல்ல கலர். காவி கலர் புடவை தலையை முடிந்து நெற்றியை முழுதும் அடைத்து மாபெரும் குங்குமப் பொட்டு. கொஞ்சப் அசப்பில் பார்த்தால் கே பி சுந்தராம்பாள் மாதிரி இருந்தார்கள். விடு விடுவென்று நடக்கும் போது காஞ்சனா சரத் மாதிரி . கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
அவரது சிஷ்ய கோடிகள் ஐந்தாறு பேர் கூடவே வந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு ஷாலு வீட்டிற்குச் செல்வாள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்று கொண்டு யாருடைய வருகைக்காகவோ காத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவேளை குருஜினியின் பாசினி (BOSS இன் பெண்பால்) வருகிறார்களோ என்று எட்டிப் பார்த்தேன். ஒரு பெரிய வேன்! அமெரிக்காவின் ரிக்ரியேஷன் வெகிகில் என்று சொல்வார்களே அந்த மாதிரி பெரிய வண்டி அத்துடன் ஒரு டிரைலர். அதில் ஒரு கன்டைனர். அந்த வேன் அபார்ட்மெண்ட் வாசலில் நின்றது.
வண்டியை ஒட்டி வந்தவர் வினோதமாக இருந்தார். நார்த் இந்தியர் மாதிரி பஞ்சகச்சம் ஜிப்பா .தோளில் காவி கலர் துண்டு தலையில் சிகப்பு கலர் துணித் தொப்பி புருவ மத்தியில் ஆரம்பித்து தலையின் பாதி வரை நீண்ட ஒரு இன்ச் அகலமான குங்குமப் பொட்டு. கீழே இறங்கியதும் “தாயே ” என்று அழைத்துக் கொண்டு இன்னும் குப்பை வாராமல் இருந்த எங்கள் அபார்ட்மெண்ட் வாசலில் குருஜினி காலில் . தடாலென்று 90 டிகிரி கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணினார் – அவர் வெள்ளை ஜிப்பா கருப்புக் கலர் ஆவதைப் பற்றிக் கூட கவலைப்படாமல்.
ஷாலுவும் மற்ற பிளாட் பெண்களும் அவர் விழுந்த தோரணையைப் பார்த்து பயத்தில் துள்ளிக் குதித்தனர். ’ உனக்கு மங்களம் உண்டாகட்டும் ஆனந்தா ’ என்று சொல்லியும் அவர் எழுந்திருப்பதாக் காணோம். அவருடைய உதவியாளர்கள் வந்து தூக்கி நிறுத்தியதும் தான் தெரிந்தது – அவரால் தனியே எழு ந்திருக்க முடியவல்லை என்று.
“தாயே என்ன இது! மற்றவர்கள் என்னை ஆனந்தா என்று அழைக்கலாம்! நீங்கள் என்னை அப்படி அழைக்கலாமா ? பழைய பெயரைச் சொல்லி அழைத்தால் தான் என் ஜென்மம் சாபல்யம் அடையும் ”
என்னடா சேட்டு இவ்வளவு அழகா மகாபாரதம் சீரியல் மாதிரி தமிழ் டப்பிங் பேசராறேன்னு ஆச்சரியப் பட்டுக்கொண்டிருந்தேன்.
குருஜினியும் ‘ஆயுஷ்மான் பவ’ ஸ்டைலில் “வா ஆனந்தக் கோனாரே! உன் வரவு நல் வரவாகுக! நம் அன்னையை அழைத்து வந்திருக்கிறாய் அல்லவா? ’ என்று கேட்டார்.
அட நம்ம மாதவரம் கோனார். அதானே எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். என்ன ஸ்டைல்! என்ன பந்தா!
பின்னாலிருந்த ஷாலுவின் அண்ணா ’ இவர் தான் கோனார் நோட்ஸ் போட்டவரா? நான் கேள்விப்பட்டிருக்கேன்!; என்று என் காதில் ஓதினார். இவர் மாட்டுக்குப் புல் போடற கோனார் நோட்ஸ் போடற கோனார் இல்லை என்று மெதுவாகச் சொன்னேன்.
கோனாரோட உதவியாளர் ஒரு தாமிரப் பாத்திரத்தையும் வெள்ளிப் பேலாவையும் கொண்டு வந்ததை கோனார் வாங்கி குருஜினிக்குக் கொடுத்தார். கங்கா ஜலமும் சந்தனமும் என்று நினைத்துக் கொண்டேன். குருஜி அவற்றை வாங்கி அனைவருக்கும் வழங்கினார். எல்லோரும் அவற்றை வாங்கிக் குடித்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். அப்போது தான் தெரிந்தது அவை கோமீயமும், பசுஞ்சாணியும் என்று.
"அன்னையை அழைத்து வா கோனார் ” என்று குருஜினி உத்தரவிட்டதும் பின்னால் உள்ள கன்டைனர் கதவைத் திறந்தார். ஏர் கண்டிஷன் செய்த அறை போல் இருந்தது. முதலில் அதிலிருந்து ஒருவர் இறங்கி ஒரு சிவப்புக் கம்பளத்தை விரித்துக் கொண்டே அபார்ட்மெண்ட் உள்வரை சென்றார். அதற்குப்பின் ஐந்தாறு பேர் இறங்கினார்கள். அவர்கள் கையில் நாதஸ்வரம் தவில் கஞ்சீரா பேண்ட் , கிளாரினட் .இவர்கள் இறங்கி ரத்னக் கம்பளத்துக்கு இரு பக்கமும் நின்று வாசிக்க ஆரம்பித்தார்கள். டெல்லி கல்யாண ‘பராத்’ பாணியில் இருந்தது. கோனார் கஞ்சீராவை வாங்கி அவரே உடுக்கு மாதிரி அடிக்க ஆரம்பித்தார். நடுநடுவில் ‘அம்மா.. தாயே.. ’ என்று வசனம் வேற. பிறகு கோனார் உள்ளே சென்று ஜல் ஜல் என்ற சத்தத்துடன் கோமாதாவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார். ‘கெட்டி மேளம்’ கெட்டி மேளம்’ என்று ஒருவர் சொல்ல வாத்யக் கோஷ்டி உச்ச நிலைக்குப் போயிற்று. குருஜினி மட்டும் அதன் அருகில் போய் அதை மூன்று முறை வலம் வந்தார்.

சும்மா சொல்லக்கூடாது ! கோமாதா மிகவும் அழகாக இருந்தார். நல்ல பட்டு போன்ற வெள்ளை உடம்பு. கொம்புக்கு வர்ணம். கழுத்தில் தங்கச் சங்கிலி. காதில் வைரத் தோடு ! உடம்பைச் சுற்றி ஒரு வெல்வெட் கோட்டு! கால்களுக்கு கொலுசுடன் சலங்கை. கழுத்தில் மணி. வால் பகுதிக்கு மஞ்சள் பட்டுத் துணி.
நெற்றியில் சந்தனம் மற்றும் குங்குமம்.குளம்புக்கு வர்ணம்.
“அன்னையை மேலே அழைத்து வா கோனார்” என்று சொல்லிவிட்டு குருஜினியும் சீடர்களும் மெல்ல நடக்க வாத்யங்கள் தொடர்ந்து முழங்க கோமாதா மெல்லத் தலையாட்டிக்கொண்டே நடந்து வர ஆரம்பித்தார். பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நீங்களும் ஆனந்தாவும் கோமாதாவை பத்திரமாக நான்காம் மாடிக்கு அழைத்து வாருங்கள் -நாங்கள் பூஜைக்கு தயார் செய்கிறோம் என்று சொல்லி விட்டு ஷாலுவும் குருஜினியும் படியில் ஏறிச் சென்றுவிட்டனர்.
நானும் கோனாரும் கோமாதாவும் லிப்டில் தனியாகவா என்று எனக்கு உள்ளூர நடுக்கம் தான். லிப்டில் ஏதாவது கோமாதாவுக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது! மகாராஷ்ட்ராவிலிருந்து பசு காப்போர் சங்கம் வந்து நம்மை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் என்று பயத்துடன் மூவரும் லிப்டில் எறினோம். கோனார் கொம்புப் பக்கம் இருந்தார். நான் வாலருகே இருந்தேன். லிப்ட் புறப்படும் பொது ஒரு ஜெர்க். கோமாதா ‘அம்மா’ என்ற உரத்த குரலிட்டார். எனக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்செரிய ஆரம்பித்தது. எனது இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டேன். இரண்டாவது மாடி அடையுமமுன்னே சட்டென்று பவர்கட். லிப்ட் நின்றது. முதல் முறையாக கோனார் குரலில் நடுக்கம் தெரிந்தது. ஜெனரேட்டர் இருக்கிறது ஐந்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நான் சொன்னதும் தான் அவருக்கு உயிர் வந்தது. அதற்குள் கோமாதா ஏழு முறை “அம்மா” என்று அழைத்தார்.
ஜெனரேட்டர் ஆன் செய்வதற்கு முன் கரண்டே வந்து லிப்ட் நான்காம் மாடிக்குச் சென்றது. ஒரு வழியாக கோமாதாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும் பயத்தில் எனக்கு பாத் ரூம் போகவேண்டும் போலிருந்தது. கோமாதாவும் வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் கோமீயத்தையும் பசுஞ்சாணியையும் இறக்கினார். “ஆஹா! அருமையான சகுனம்! யாருக்கும் கிடைக்காத பாக்கியம்! இந்த வீட்டுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கப் போகிறது ” என்று குருஜினி மனமுருகிக் கூறினார். எல்லோரும் கோமீயத்தைப் பிடித்துத் தலையில் தெளித்துக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து “ஆமாதா பூஜை” கொண்டாடினார்கள்.குருஜினி கோமாதாவுக்கு ஒன்பது கஜத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவையைக் கட்டி விட்டார். குருஜினி வேத மந்திரங்கள் சொல்ல கிட்டத்தட்ட அரை மணி நேரம் பூஜை நடைபெற்றது. நல்ல பழக்கப்பட்ட கோமாதா! அமைதியாக அனைத்தையும் ரசித்தது. வெள்ளிப் பாத்திரத்தில் சக்கரைப் பொங்கலும் வாழைப்பழங்களும் பெண்மணிகள் தந்தவண்ணமே இருந்தனர்.
பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பேட்ஜ் பேட்ஜாக இலைபோட்டு சாப்பாடு போடப்பட்டது. முதல் பந்தியிலே கோமாதாவுக்கும் கோனாருக்கும் இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். இலையோடு எதையும் விடாமல் கோமாதா அழகாகச் சாப்பிட்டது கண் கொள்ளக் காட்சி! பிறகு கோனாரும் சாப்பிட்டுவிட்டு தக்ஷிணை ( பத்தாயிரம் ரூபாய்) வாங்கிக் கொண்டு குருஜினிக்கு மூணு முறை நமஸ்காரம் செய்துவிட்டு கோமாதாவை அழைத்துக் கொண்டு லிப்டில் போனார். ‘அவர் தான் எக்ஸ்பர்ட் அவரே கூடப் போகட்டும்’ என்று குருஜினி சொல்ல நான் பழையபடி கோமாதாவுக்குத் துணையாகச் சென்றேன்.லிப்டில் போகும் போது தான் கோனார் சொன்னார். இந்த கோமாதா நாலைந்து தமிழ் தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறாராம். சினிமா உலகில் இவருக்குப் பெயர் ஜோதிலட்சுமியாம். அதைத் தவிர ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத் , ஜோதிகா இவர்களுக்கெல்லாம் பூஜைக்கு பசும் பால் சப்ளை செய்கிறாராம். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

அபார்ட்மெண்ட் வாசலில் கோமாதாவைப் பார்க்க பெரிய கூட்டம். சினிமா ஷூட்டிங் என்று நினைத்துவிட்டார்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீஸ் கூட வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூஜை முடித்து குருஜினியும் மற்றவர்களும் கிளம்பிப் போனார்கள்.
ஃபென்டாஸ்டிக் ஷாலு! கோமாதா பூஜையைக் கலக்கிட்டே" என்றேன்.
அவள் அதற்குப் பதில் சொல்லாமல் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கோமாதா பூஜை செய்ததற்கு உடனே பலன் வந்துவிட்டது என்றாள்.
‘என்ன என்ன’ என்று ஆவலோடு கேட்டேன்.
மெல்லச் சிரித்துக் கொண்டே காதில் சொன்னாள்.
அதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
.
நான் ரசித்த படைப்பாளி – ஆ மாதவன்( எஸ். கே.என்)
திருவனந்தபுரத்தில்
வசிக்கும் திரு ஆ.மாதவன், ஐம்பதுகளிலிருந்து சிறுகதைகளும் நாவல்களும் படைத்துவரும்
எழுத்தாளர். இவரது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவல் பெரிதும் பேசப்பட்ட நாவலாகும். இவரது
சிறுகதைகளில் பெரும்பாலும் திருவனந்தபுரம் சாலைத்தெரு என்னும் கடைத்தெருவைக் களமாகக்
கொண்டு இருக்கும். இவரை ‘கடைத்தெருவின்
கதைசொல்லி’ என்று குறிப்பிடுவார்கள்.
இவரது கதை மாந்தர்கள், ‘எங்கோ
இது போன்ற ஆளைப் பார்த்திருக்கிறோமோ’ என்று தோன்றவைப்பார்கள்.
இவரது ‘விருந்து’ கதை
தினசரிப்பாடே தகராறில் இருக்கும்போது இலக்கிய நண்பர்களுக்கு விருந்தோம்பல்
செய்யும் ஒருவரின் கதை.
****
**** **** ****

குருவிற்கு பட்டணத்திலிருந்து இலக்கியமேதையும், சிந்தனையாளருமான திரு ஆனந்தனிடமிருந்து,
திருவனந்தபுரத்திற்கு வந்து இவருடன்
நான்கைந்து நாட்கள் தங்கவிருப்பதாகக் கடிதம் வருகிறது.
(‘நீங்கள் முன்னைப்போல
பெரிய விவசாயம், அறுவடை அது இதுன்னு
பிரமாதமாக இன்னும் இருப்பதாக உங்கள்
இலக்கிய நண்பர் நினைத்துக் கொண்டிருப்பார் . இங்கே, வந்து பார்க்கும் போதல்லவா
தெரியும் அய்யா சண்டை பிரசண்டம்’ – இது குருவின் மனைவி பார்வதி)
சிநேகிதம், விருந்தாளி,
கதை, கண்ட கண்ட புஸ்தகம் என்று சரியாகத்
தொழிலைக் கவனிக்காமல், வீட்டைக்
கவனிக்காமல், வெளியூரில் வேலையிலிருக்கும் மகன் அனுப்பும் கொஞ்சம்
பணத்தில் ஒப்பேற்றிக்கொண்டு
இருக்கிறார்கள். அந்த மகனுக்கு திருமணமானதும் என்னவாகுமோ என்ற கவலையும் உண்டு.
ஏதோ காலம் ஓடிக்கொண்டு
இருக்கும்போது மிகுந்த தெளிவும் ஞானமும் கொண்ட பல பரிசுகள் பெற்ற அந்த நண்பர்
வருகிறாரே, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் .
வந்தும் விடுகிறார்
அந்த நண்பர். சிறப்பாக அதையும் இதையும் செய்து விருந்து உபசாரம் நடக்கிறது. இலக்கிய
கர்த்தாவின் தத்துவ விசாரங்களும் ,
இலக்கியச் சர்ச்சையும் என்று ஆனந்தமாக
பொழுது கழிகிறது.
(என்னதான் தங்கரேக்கிலே
முகப்பட்டமும் , முதுகு மேல அம்பாரியும், பரிவட்டமும் வச்சாலும், யானைங்கறது அந்த
அலங்காரங்கள் இல்லையே. அப்போ, உண்மை என்ற அமைப்பின் முன்னால் தொங்கு தோரணம் எல்லாம் சும்மா)
பேச்சு மும்மரத்தில்
இருக்கும் இருவரையும் உணவு வேளைகளில்
பார்வதி தான் வந்து அழைக்க வேண்டியிருக்கும். வழக்கம் போல,
இரவு உணவிற்கு தோசை சாப்பிட
பார்வதி அழைக்கிறாள்.
இருவரும்
திருப்தியாகச் சாப்பிட்டபிறகு
தற்செயலாகத்தான் மனைவிக்கு சாப்பிட ஒன்றுமில்லை என்று கவனித்து திடுக்கிடுறார் குரு.
வருத்தப்படும் குருவிற்கு
சமாதனம் சொல்கிறாள் பார்வதி.
(நாளைக்கு ஊர்
திரும்புற மனுஷனுக்கு காதிலெ விழப் போவுது, இன்னைக்கு ஒரு நாள் ஏகாதசி விரதம்னு
நினச்சுண்டாப் போச்சு)
பேச்சு, தத்துவ விசாரம், ஆச்சாரக்கலை,
ரியலிசம் அது இது என்று யாருக்கு எடுத்துக்காட்டி என்ன பிரயோசனம் ? வீட்டு வட்டத்தில் நடக்கும் ரியலிசம் மறந்து
போவது என்னவொரு மடத்தனம்? என்ன அசகாய
காரியங்கள் செய்து மனைவி இந்த நாலைந்து நாட்களை ஒப்பேற்றினாளோ? இன்று இரவு அவள்
பட்டினி. என்றெல்லாம் யோசிக்கிறார் குரு.
மறுநாள் காலையில்
ஊருக்குப் புறப்பட்டுப் போகிறார் நண்பர். ஒரு மழை மேக மறைப்பு விலகியது போன்று
தோன்றுகிறது பார்வதிக்கு.
கணவர் திரும்பிவருவதைப்
பார்க்கும் அவளுக்கு ஒரு பேரதிர்ச்சி. கூடவே நண்பரும். ரயில் புறப்படும் நேரம் மாறிவிட்டதால் இவர்கள்
போவதற்குள் வண்டி போய்விட்டது மறுநாள் இரவு வண்டிக்குத்தான் போக முடியும்.
சமையற்கட்டில்
நுழைகிறார் குரு.
(சோற்றுப்பானை,
குழம்புப் பாத்திரம், கிண்ணங்கள், கரண்டிகள்..
பாத்திரங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்த ‘ஆதிதேயன்’ குருவிற்கு உண்மை
பயங்கரமாக உருவெடுத்து – அடிவயிற்றையே ஓங்கி உதைத்தது – அய்யோ!)
எதிரே பார்வதி
முகத்தைமூடி விசும்பிக்கொண்டிருந்தாள்
****
**** **** ****
நண்பர்கள் இருவரின்
உரையாடலில் இலக்கியச் சர்ச்சைகளும் தத்துவ
விசாரங்கள் ஏராளம். பார்வதியின் சங்கடமும்
சமாளிப்பும் படம் பிடித்துக் காட்டப்
படுகிறது. கணவன் மனைவி இருவரின் பாத்திரப்படைப்பும் குறிப்பிடும்படியாக உள்ளது
இணையத்தில் கிடைக்கும்
இவரது பிற கதைகள்
தேசிய விருது -தமிழ் சினிமா
62வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ்ப் படங்கள்:
பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ராவுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது -சைவம் படத்தில் பாடியதற்காக! அந்தக் குட்டிப் பெண்ணின் பேட்டியையும் பாடலில் சில வரிகளையும் மேலே உள்ள லிங்கில் கேளுங்கள்!
அந்தப் பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது! போன வருடமும் “ ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலுக்கு பரிசு வாங்கியவர்!

ஜிகிர்தண்டாவில் நடித்த பாபி ஸிம்கா சிறந்த துணை நடிகர் விருது!
ஜிகிர்தண்டாவின் படத் தொகுப்பாளர் தனஞ்செயன் கோவிந்துக்கு விருது!
சிறந்த தமிழ்ப் படமாக “ குற்றம் கடிதல்” என்ற படத்தையும் சிறந்த குழந்தைகள் படமாக “காக்கா முட்டை” ( தயாரிப்பு – நம்ம தனுஷ்) என்ற படமும் தேர்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன.


வாழ்த்துக்கள்!
மக்களை ஈர்த்த மகராசர் – தி.ஜானகிராமன்

விமானம் தரை தட்டிற்று. ஓடி நின்றது. ‘இங்கு ஐம்பது நிமிஷம் நிற்கும். தொடர்ந்து பிரயாணம் செய்பவர்கள் இறங்கி, ட்ரான்ஸிட் கூடத்தில் இளைப்பாறி திரும்பி வரலாம். ‘ என்று பெண் குரல் அறிவித்தது. அவர் வெள்ளைகாரர் படிக்கட்டில் இறங்கினார். நடந்து ‘ட்ரான்ஸிட் ‘ கூடத்திற்குப் போனார்.
இன்று என்ன விசேஷம் இந்த ஊரில் ? ஏன் இவ்வளவு இரைச்சல். ‘ ஏன் இத்தனை கூட்டம் ?
கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்தார் வெள்ளைக்காரர். தலை, தலை, எங்கும் தலைகள் ‘
பத்தாயிரம் தலைகள். ஆமாம் பத்தாயிரம் பேருக்குக் குறையாது. மேலும் மேலும் கார்கள் வந்து கொண்டிருந்தன. சின்னக்கார்கள், பெரிய கார்கள், உள்நாட்டு கார்கள். வெளிநாட்டு கார்கள் கதவுகள் திறந்தன. மனிதர்களைக் கொட்டிவிட்டு அப்பால் கார் கூட்டத்தோடு சேர்ந்து நின்றன.
பத்தாயிரம் பேர் கூட்டத்தின் முன் வரிசையில் ஒரு முந்நூறு பேர் ரோஜா மாலைகளும் கைகளுமாக நிற்கிறார்கள். ஒரு மொத்தமான மனிதரின் கழுத்தில் மாலையைப் போட்டு கும்பிடுகிறார்கள். பின்னே போகிறார்கள். மாலைகளுக்குள் உடல் மறைந்தது, முகம் மறைந்தது, சுமை தாங்காமல் போனதும், மொத்தமான மனிதர் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார்.
பக்கத்திலிருப்பவர்களிடம் பார்க்காமலேயே கொடுக்கிறார். பக்கத்திலிருப்பவர் இன்னொருவர். மாலைகளை மூன்று அல்லது நான்காகச் சேர்த்துக் கழற்றிக் கழற்றி உதவுகிறார். இன்னொரு குழு முன்னால் வருகிறது. மாலைகளைப் போடுகிறது. மீண்டும் மாலைகளுக்குள் உடல் மறைகிறது. தோள் தாங்க முடியவில்லை. மொத்தமான மனிதர் தானாகவும், பக்கத்திலிருப்பவர்கள் உதவியுடனும் மாலைகளை எடுத்து கொடுக்கிறார். அவர் முகத்தில் மாறாத புன்னகை, கை குலுக்கல், கும்பிடுகள். சிலர் குழந்தைகளிடம் மாலையைக் கொடுத்து, குழந்தைகளையே உயரத் தூக்கி மாலைகளை அணி விக்கச் செய்கிறார்கள்.
போலீஸ்காரர்கள் தடியும் கையுமாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். எம்பிஎம்பியும் குதித்துக் குதித்தும் கூட்டத்தின் நடுவில் உள்ளவர்கள் மொத்தமான மனிதரைப் பார்க்க முயலுகிறார்கள். மாலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. போட்ட வண்ணமும் கழன்ற வண்ணமும் இத்தனை மாலைகளையும் போட இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகுமே என்று கணக்குப் போடுகிறார் வெள்ளைக்காரர். அரைமணி ஆகிவிட்டது. அவர் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறார். படபட வென்றும் சடசட வென்றும் விறுவிறு வென்றும் கூட்டம் நகர்ந்து நகர்ந்து வேகமாக, விரைவாக, நொடிக்கொன்றாக மாலைகளைப் போட்டுவிட்டது.
‘உலகம் காணும் உத்தமனே சென்று வா. ‘
‘திருமகனே வெற்றி கொண்டு திரும்பி வா ‘
‘அயல் நாடு காணும் ஆண்டகையே
புயல் பிரயாணம் கண்டு வா ‘
நாடு போற்றும் நாயகா
நீடு புகழ் பரப்பி வா. ‘

இப்படி நூற்றுக் கணக்கான வெவ்வேறு வகை கோஷங்கள் விமான நிலைய வெளியை நிரப்ப, போலீஸ்காரர்கள் பாதை விலக்க மக்கள் கூட்டம் முண்டி முண்டிப் பின் தொடர, மொத்தமான மனிதர், காக்கி உடை பாதுகாப்பாளர் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிவிடும் பரிசோதனையினின்றும் விலக்குப் பெற்று விமானத்தை நோக்கி நடந்தார். அவர் பின்னால் போக ஐந்தாறு பேர்தான் அனுமதிக்கப்பட்டார்கள்.
வெள்ளைக்காரரும் மற்றவர்களும் உடலைத் தடவும் பாதுகாப்பாளரிடம் உடலைக் காட்டி அனுமதி பெற்று விமானத்திற்குத் திரும்பினார்கள். அதே கோஷங்கள் விமானம் வரையில் வானைப் பிளந்தன. மொத்தமான மனிதர் உடல் முழுதும் ரோஜா இதழ்கள். கோட்டு கால் சட்டை தலை–முகம்–காது மேல் இமை தோள்–எங்கும் ரோஜா இதழ்கள். இரண்டு மாலைகளை மட்டும் கழற்ற விடாமல் அணிந்து கொண்டே இருக்குமாறு கூட்டம் வற்புறுத்திற்று.
‘யார் இந்த ஜென்டில்மேன் ? ‘ என்று பக்கத்தில் நடந்து வருபவரிடம் கேட்டார் வெள்ளைக்காரர்.
‘தெரியவில்லை யாராவது மந்திரியாக இருக்கலாம். ‘
‘என்ன தெரியவில்லை ? இவர் ரொம்ப பெரிய வி.ஐ.பி. போலிருக்கிறதே ? ‘ என்று கேட்டார் வெள்ளையர்.
‘அதான் சொன்னேனே. மந்திரியாக இருக்கலாம் ‘ என்று.
‘மந்திரி என்றால் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே ‘
‘இந்த் நாட்டில் பல ராஜ்யங்கள் உள்ளன. சில ராஜ்யங்களில் முப்பது நாற்பது மந்திரிகள் உண்டு. மொத்தம் கணக்குப் பார்த்தால் ஐந்நூறு மந்திரிகளுக்கு மேல் இருக்கலாம். நான் எண்ணியதில்லை. அந்தக் காலத்தில் படிப்பு முடிந்ததும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சைகள் எழுதுவதற்காக காபினெட் மந்திரிகள், ராஜ்ய மந்திரிகள், உதவி மந்திரிகள், ஏழு உலக அதிசயங்கள் —என்றெல்லாம் பெயர்களை மனப்பாடம் பண்ணியதுண்டு. இப்போது யார் எதற்கு மந்திரி என்றெல்லாம் தெரிந்து கொள்ள நேரம் இல்லை. ‘
‘வாஸ்தவம், இந்தியா மிகப் பெரிய நாடுதான். ‘
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஐயாயிரம் ஜனங்கள் போலீஸ் பந்தோபஸ்துகளை மீறி உள்ளே திமுதிமுவென்று ஓடி வந்தார்கள்.
‘செல்வமே சென்று வா ‘
‘பாரதத்தின் திருமணீ ‘
வான் ரதம் ஏறிவா ‘
என்றெல்லாம் கூட்டம் மீண்டும் கோஷங்கள் எழுப்பிற்று. இளைஞர்கள் குரல் கம்ம, கழுத்து புடைக்க உரக்க உரக்க கோஷமிட்டனர். சில இளைஞர்கள் பூமியிலிருந்து எம்பி எம்பிக் குதித்து கோஷம் எழுப்பினார்கள்.
வெள்ளையர் படிக்கட்டில் ஏறி தன் இருக்கையில் அமர்ந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தார். விமான நிலைய அதிகாரிகள் கூட்டத்துக்கு நல்ல வார்த்தை சொல்லி விமானம் புறப்பட வசதி செய்து கொடுக்குமாறு வேண்டிக்கொள்வதைப் பார்த்தார். கடைசியில் ஒருவழியாக மொத்தமான மனிதர் மூன்று மாலைக் கழுத்தும் மேனிமுழுதும் பூவிதழ்களுமாக உள்ளே வந்தார். விமான அழகி, வழிகாட்டி இடம் காட்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
வெள்ளையருக்கு ஆச்சரியமாகி விட்டது. அவருக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொண்டார் மொத்தமான பிரமுகர்.
விமானம் புறப்பட்டது. தரையை விட்டு எழும்பிற்று.
‘ரொம்ப அழகான மணமான ரோஜாக்கள் ‘ என்று பூமணத்தை முகர்ந்து பாராட்டினார் வெள்ளையர். இந்தியப் பிரமுகர் சிரித்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘நான் பசுபதிநாத். பாலிடிக்ஸில் பதிமூன்று வருஷமாக இருக்கிறேன். தேசிய உளுந்து வாரியத்தின் தலைவனாக சென்ற வாரம் நியமித்தார்கள் என்னை ‘
‘உளுந்து ? ‘
‘உளுந்து என்பது ஒருவகைப் பருப்பு, கறுப்பு நிறம் ‘ என்று ப்ரீஃப்கேஸைத் திறந்து ஏழெட்டு பொட்டலங்களைக் காண்பித்தார் பசுபதிநாத். ஒரு பொட்டலத்தை கிழித்து ஒரு தேக்கரண்டி யளவு உளுந்தை வெள்ளையர் கையில் போட்டு வாயில் போட்டு மெல்லச் சொன்னார். வெள்ளையர் மென்றார்.
‘மொட்டுக் மொட்டுக்…. ப்சப் சப்சப்சப் ‘ என்று ருசி பார்த்தார். ‘ம்…குட் ‘ என்றார்.
‘இது அப்படியே ப்ரொட்டான். கோழி, முட்டை, மாமிசத்தில் உள்ள புரதம் எல்லாம் இதில் உண்டு. தோசை, இட்லி, வடை, அடை, கொழுக்கட்டை என்ற பெயர்களைக் கேட்டிருக்கிறீர்களா ? ‘
‘அப்படி என்றால் ? ‘
‘பரவாயில்லை ‘ என்று உளுந்து தேன் குழல் ஒன்றை ஒரு பையை கிழித்து எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார் பத்ரிநாத்.
‘கரக், கரக் கரக் கரக் ப்சப் சப்சப் ? ‘ என்று வெள்ளையர் ருசி பார்த்தார். ‘நைஸ், தாங்க்யூ ‘ என்றார்.
‘எங்கள் ஊரில் தென்னாட்டு சைவர்கள் வட நாட்டு வைஷ்ணவர்கள் என்ற சாகபட்சிணிகள் இதைத் தான் புரதத்துக்காக உண்பார்கள். இந்த உளுந்தை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று பார்க்கத்தான் நான் இப்போது பல மேல் நாடுகளுக்குப் பயணம் தொடங்கியிருக்கிறேன். ‘
‘நல்லது. அதிருக்கட்டும், நீங்கள் மிகமிகப் பெரிய பிரமுகர் என்பதை அறிந்து கொண்டேன் பல்லாயிரக்கணக்கில் வந்து மக்கள் வழி அனுப்புகிறார்களே ‘ என்ன கூட்டம் என்ன கூட்டம் ‘ எத்தனை நூறு மாலைகள். ‘
‘ஹி ஹி ஹி. என்ன பிரயோசனம் ? பதிமூன்று வருஷம் ஆச்சு, அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள. பத்து லட்சம் தேர்தலுக்கு கொடுத்தேன். ஒன் மிலியன் டாலர். இல்லாவிட்டால் இந்த உளுந்து போர்டு தலைமை கூடக் கிடைத்திராது. ‘
‘ஓ….வாட் எ பிட்டி ‘ ‘
எட்டு மணி நேரம் இறங்காமல் பறந்தது விமானம். பிறகு இறங்கிற்று. இறங்குகிற வரையில் ஷாம்ப்பேன் விஸ்கி பீர் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டார் பசுபதிநாத். வெள்ளையருக்கும் உபசாரம் செய்தார். ஒரு பெக் விஸ்கி சாப்பிட்டு நன்றி கூறி விட்டுத் தூங்கினார்.
பசுபதிநாத் இன்னும் தொடர்ந்து பறக்க வேண்டும். வெள்ளைக்காரர் ‘நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. ‘ என்று விடை பெற்றுக் கொண்டார்.
பசுபதிநாத் ‘நானும் ட்ரான்ஸிட் லெளஞ்சிலிருந்தே உங்கள் நாட்டை பார்க்கிறேன் ‘ என்று இறங்கி கூடவே வந்தார். திடீரென்று ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? பிஸினஸா. சர்க்கார் வேலையா ஒன்றும் கேட்கவில்லை. கேட்கலாம் என்றிருந்தேன். தூங்கிவிட்டீர்கள். ஸாரி. நீங்கள்…. ? ‘
‘நான் இந்நாட்டின் உதவிப் பிரதம மந்திரி ‘
‘ஆ ‘ இந்த நாட்டுக்கு உதவிப் பிரதம மந்திரியா ? ‘
‘ரொம்ப ஆச்சரியப் படாதீர்கள். உங்கள் இந்தியாவில் எட்டில் ஒரு பங்குதான் எங்கள் நாடு. ஜனங்கள் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இராது. ‘
‘அது சரி. நீங்கள் உதவிப் பிரதமர் என்கிறீர்கள்: உங்களை யாரும் வரவேற்க வரவில்லையா ? ‘
‘அதோ என் மனைவி — அதோ பாருங்கள் — அப்புறம் என் செக்ரட்டரி. பக்கத்தில் நிற்கிறார் பாருங்கள் ‘
‘போலீஸ் கீலீஸ் ஒன்றும் வர வில்லையா ? ‘
‘போலீஸ் எதற்கு ? — வரவேற்கவா ? ‘
‘உங்கள் நாடு ஜனநாயகம் இல்லையா ? ‘
‘ஜனநாயகம் தான் ‘
‘பின்னே மக்கள் யாரும் வரவேற்க வரவில்லையா ? ‘
‘ஜனநாயக நாடல்லவா ? அதனால்தான் யாரும் வரவேற்க வரமாட்டார்கள்…. நான் வருகிறேன். ஹாப்பி லாண்டிங்க்ஸ்… அப்புறம் மறுமடியும் ஒரு தாங்க்ஸ். உங்களோடு டிரிங்ஸ் சாப்பிடும் வாய்ப்பை அளித்ததற்கு. ஓ ‘ இவர் என்னுடைய பர்சனல் அஸிஸ்டண்ட் — இவர் மிஸ்டர் பசு….. ‘ என்று விமானத்தின் பின்பக்கத்திலிருந்து இறங்கி பின்னால் வந்த ஒரு இளைஞனை அறிமுகப் படுத்தி விட்டு மறுபடியும் ‘ஹாப்பி ‘ லாண்டிங்ஸ் மிஸ்டர் பசு ‘ சொல்லிவிட்டு நடந்தார் வெள்ளையர் ‘
‘ஜனநாயகமா…. பூ ‘ என்று மனதுள் சிரித்துக் கொண்டு ட்ரான்ஸிட் கூடத்துக்குள் நுழைந்தார் ‘ தேசீய உளுந்து வாரியத்தலைவர்.
வாலி

கண்ணதாசன் வரிகளுக்குக் கொஞ்சமும் இளைத்ததல்ல என்று வாலி அவர்கள் எழுதிய நயம் மிக்க வரிகள்! வாலி என்றுமே வாலிப வாலி. எம்ஜிஆருடன் அவரது புகைப் படத்தைப் பாருங்கள்.
இவற்றின் முதலடியையும் அமைந்த திரைப்படங்களையும் கண்டுபிடியுங்கள்!
——————————————————————————————-
1)
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆளவந்தான் பெண்மையை வாழ வைத்தான்
2)
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்பாடும்
மான்குட்டிக் கேட்டுக் கண் மூடும் -ம்ம்
3)
பழரசத் தோட்டம் பனிமலர்க்கூட்டம்
பாவை முகமல்லவா?
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா
4)
வானில் விழும் வில்போல்
புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம்
கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
-கொஞ்சம்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
மானின் இனம் கொடுத்த விழியாட
-அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட
5)
செக்கச் சிவந்தன விழிகள்
– கொஞ்சம்
வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம்
-நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைக்கும்
– மனம்
உண்மையை மூடி மறைக்கும்
6)
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
7)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்
(இன்னும் வரும்)

மயிலையில் அறுபத்து மூவர் !
“புன்னாக வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”






அறுபத்து மூவர் விழா என்று அழைக்கப்படும் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயில் நடத்தும் பங்குனிப் பெருவிழா மாற்று விடையாற்றி காலை விழா இந்த ஆண்டும் வழக்கம் போல் கோலாகலத்துடன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றது.
முக்கியமான நிகழ்ச்சிகள்
- கொடியேற்றம்,
- அதிகார நந்தி காட்சி,
- திருத் தேர் வடம் பிடித்தல்,
- வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சி ,
- ஐந்திருமேனி திருவீதி உலா,
- மறையோதல்,
- திருமுறையோதல்
- தேவாரப் பண்ணிசை
- சொற்பொழிவு,
- கலை நிகழ்ச்சிகள்
கண் கொள்ளாக் காட்சிகள்! பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
கவிதைப் பூங்கா ( கோவை சங்கர்)

சித்தர்களில் நம் மனத்தைத் தொட்டவர் பட்டினத்தார்.
அவரது ’ ஒரு மட மாது ’ என்ற தத்துவப் பாடல் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்தது. டிஎம்எஸ் பாடிய அந்தப் பாடலைக் கேளுங்கள்! (மேலே உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்)
தாயாருக்குத் தகனகிரியை செய்கையிற் பாடிய வெண்பா.
ஐயிரண்டுதிங்களாவங்கமெலாநொந்துபெற்றுப்
பையலென்றபோதேபரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்திலேந்திக்கனகமுலைதந்தாளை
யெப்பிறப்பிற்காண்பேனினி. 1
முந்தித்தவங்கிடந்துமுந்நூறுநாட்சுமந்தே
யந்திபகலாச்சிவனையாதரித்துத் -தொந்தி
சரியச்சுமந்துபெற்றதாயார்தமக்கோ
வெரியத்தழன்மூட்டுவேன். 2
வட்டிலிலுந்தொட்டிலிலுமார்மேலுந்தோண்மேலுங்
கட்டிலிலும்வைத்தென்னைக்காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக்காப்பாற்றிச்சீராட்டுந்தாய்க்கோ
விறகிலிட்டுத்தீமூட்டுவேன். 3
நொந்துசுமந்துபெற்றுநோவாமலேந்திமுலை
தந்துவளர்ந்தெடுத்துத்தாழாமே – யந்திபகல்
கையிலேகொண்டென்னைக்காப்பாற்றுந்தாய்தனக்கோ
மெய்யிலேதீமூட்டுவேன். 4
அரிசியோநானிடுவேனாத்தாடனக்கு
வரிசையிட்டுப்பாத்துமகிழாம – லுருசியுள்ள
தேனேயமிர்தமேசெல்வத்திரவியபு
மானேயனவழைத்தவாய்க்கு. 5
அள்ளியிடுவதரிசியோதாய்தலைமேற்
கொள்ளிதனைவைப்பேனோகூசாமன் – மெள்ள
முகமேன்முகம்வைத்துமுத்தாடியென்றன்
மகனேயெனவழைத்தவாய்க்கு. 6
விருத்தம்.
முன்னையிட்டதீமுப்புரத்திலே
பின்னையிட்டதீதென்னிலங்கையி
லன்னையிட்டதீயடிவயிற்றிலே
யானுமிட்டதீமூள்கமூள்கவே. 7
வெண்பா.
வேகுதேதீயதனில்வெந்துபொடிசாம்ப
லாகுதேபாவியேனையகோ – மாகக் குருவிபறவாமற்கோதாட்டியென்னைக்
கருதிவளர்த்தெடுத்தகை. 8
வெந்தாளோசோணகிரிவித்தகாநின்பதத்தில்
வந்தாளோவென்னைமறந்தாளோ – சந்ததமு
முன்னையேநோக்கியுகந்துவரங்கிடந்தென்
றன்னையயீன்றெடுத்ததாய். 9
வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் – பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
ஷேக்ஸ்பியர் சொன்னது போல “ If you have tears shed them now”
மீனங்காடி
‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘

அடுத்து வந்தது ‘ அந்த நாள்
ஞாபகம் நெஞ்சிலே ‘ அணி !
“ நண்பர்களே ! எங்கள் நிகழ்ச்சி இன்னும்
பத்து நிமிடத்தில் ஆரம்பமாகும் . அதுவரை
நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, பக்கத்தில் உள்ள கேண்டீனில் உங்களுக்கான காபி
தயாராக இருக்கிறது. குடித்து விட்டுப்
பத்தே நிமிடத்தில் வாருங்கள் ! உங்களுக்குப் பல அதிசயமான செய்திகள் காத்துக்
கொண்டிருக்கின்றன “ என்று அந்தக் குழுவின் தலைவி
அறிவித்தாள். வேறு யாரும் அல்ல
சுஜாதா தான்.
எல்லோரும் திரும்பி வந்தபோது
அரங்கத்தில் ஐந்தாறு இடங்களில் வட்ட வட்டமாக நாற்காலிகள் போடப் பட்டிருந்தன .
“ நண்பர்களே ! இப்போது நீங்கள்
உங்களுக்குப் பிடித்த நாற்காலி வட்டத்தில் அமருங்கள். ஒவ்வொரு வட்டத்திலும் எங்கள் அணி ஆட்கள்
உங்களுக்கு உதவ இருப்பார்கள். உங்கள் வேலை
என்னவென்றால் இன்னும் பதினைந்து நிமிடத்தில் நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு
என்னென்ன சேவை செய்யலாம் என்பதைச் சொல்லுங்கள் ! உங்கள் கருத்துக்களைத் தொகுத்து
நாங்கள் வழங்குவோம் ! அதற்கு முன்னால் …….
சில வினாடிகள் மௌனம்.
ஒரு பயங்கரத்திற்குத் தயாராக
இருங்கள் !
கடந்த ஒரு மாதமாக நாங்கள் எடுத்த ‘
வாடிக்கையாளர் ‘ சர்வேயிலிருந்து, அவர்கள் நம்மைப்
பற்றிக் கூறிய கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம் ! எங்களைப் போல
உங்களில் பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கக் கூடும் ! தயாராயிருங்கள் ! மேடையிலிருந்து திரையில்
முதல் ‘ ஸ்லைடு ‘ வந்தது ! அனைவருக்கும் ‘ ஷாக் ‘ அடித்தது
போல் இருந்தது! அதற்கேற்றபடி அரங்கத்தில் இருட்டு ! அனைவருடைய பெருமூச்சும் பலமாக
ஒலித்தன !

வாடிக்கையாளர்
சர்வேயின் முடிவுகள்
முக்கியக் கருத்து ‘ ஸ்லைடிலும்
‘ பின்னணியில் சுஜாதாவின் குரலும்
தோன்றின.
“ நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்முடன்
வேலை செய்வதை கசப்பான அனுபவங்களாக உணருகிறார்கள் ! நம்மை அவர்கள் ‘ தூக்கத்தில்
நடக்கும் பிராணிகள் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்!
“ சண்டை போடுபவர்களைக் கூடப் பொறுத்துக்
கொள்ளலாம் , ஆனால் இப்படி ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கும்பலை எப்படி
சகித்துக் கொள்வது ? “ என்று
கேட்கிறார்கள்!.
“ நாம் நமது வேலையைச் செய்வது பற்றித்
தான் யோசிக்கிறோமே தவிர வாடிக்கையாளர் திருப்தியைப் பற்றிக் கவலைப்படுவதே
கிடையாது. அவர்கள் சந்தோஷத்திற்காக ஒரு
துரும்பைக் கூட நாம் அசைப்பது இல்லை “
“ நாம் நமது வாடிக்கையாளர் அனைவரையும்
நமக்குத் தொந்தரவு தருபவர்களாக எண்ணுகிறோம்!
குறித்துக் கொள்ளுங்கள் ! இதெல்லாம்
அவர்களின் கருத்துக்கள் ! நம்மைப் பற்றி ! “
“ நாம் வாடிக்கையாளர்களை ‘ இங்கே வா ! அங்கே
போ ! என்று துரத்துகிறோமே தவிர அவர்களது
பிரச்சினையை சரி செய்ய முயற்சிப்பதில்லை “
மாலையில் – அதாவது ஆபீஸ் நேரம்
முடிவடைகையில் நாம் பஸ் பிடிப்பதற்காகப் பிடிக்கும் ஓட்டத்தைப் பற்றி
வாடிக்கையாளர்கள் பலவிதமாக ‘ ஜோக் ‘ அடிக்கிறார்கள் ! நமது ‘ ஓட்டம்
திண்டாட்டம் ‘ அவர்களை வேதனையோடு சிரிக்க வைக்கிறது.
நமக்கு நம் கம்பெனியின் முன்னேற்றத்தில்
கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது அவர்கள் அபிப்பிராயம் ! நமக்கு மேலதிகாரிகளிடம்
பயம் இல்லை என்பது அவர்கள் கருத்து !
நாம் எப்பொழுதும் பழைய சட்ட
திட்டங்களைச் சொல்லுவதால் ஓட்டு மொத்தமாக நமக்கு அவர்கள் வைத்த பெயர் ‘ பழைய
பஞ்சாங்கம் ‘.
அவர்கள் நம் மேலதிகாரிகளிடம் கேட்க
விரும்பும் ஒரே கேள்வி ! ‘ ஏன் இந்த டிபார்ட்மெண்டை மூடக் கூடாது ?’ இந்த வேலையை மற்ற கம்பெனிக்கு ஏன் ‘ அவுட்
சோர்ஸ் ‘ செய்யக் கூடாது ?

சுஜாதா தொடர்ந்தாள். அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது. “ நம்மைப்
பற்றிய உண்மை சுடுகிறதல்லவா ?
வாடிக்கையாளர்களுக்கு இப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது ! நாம் என்ன சாக்கு போக்கு சொன்னாலும் அவற்றை
அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாம்
மாற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! இனியும் மாறவில்லை என்றால் அது தற்கொலைக்குச்
சமம் ! “
அடுத்து அதே அணியில் இருந்து இன்னொருவன்
தொடர்ந்தான் !
நமக்கு நமது கம்பெனியில் எவ்வளவு
முக்கியத்துவம் இருக்கிறது என்று நமக்குப் புரியவே இல்லை ! நமது செயல் மொத்தமாக கம்பெனியை எப்படிப்
பாதிக்கிறது என்பதையும் நாம் உணரவில்லை.
மற்ற டிபார்ட்மெண்ட் அனைவரும் நம்மைக் கேவலமாகப் பார்க்கிறார்கள் ! நல்ல
சேவையை அவர்கள் தருவதில் நாம் முட்டுக் கட்டையாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்
!
சுஜாதா மீண்டும் வந்தாள் !
“ இப்போது – இதன் பின்னணியில் உங்கள்
யோசனைகள் மிக மிக அத்தியாவசியமாகிறது !
இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசியுங்கள். உங்கள் அனைவரையும் நான்கு அணியாகப்
பிரிக்கிறோம் . இப்போது அந்த வட்ட நாற்காலிகளில் உட்கார்ந்து உங்கள்
யோசனைகளை ஒன்று சேருங்கள். பதினைந்து நிமிடத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் தங்கள்
கருத்துக்களைத் தெரிவியுங்கள்! இது தான் எங்கள் அணியின் தொகுப்பு“.
‘ ஆட்டம்
கொண்டாட்டம் ‘ அணி ஆரம்பித்த உற்சாகம் அவர்களை இன்னும் ஒரு படி மேலே போக
வைத்தது. மிகவும் சுறுசுறுப்பாகத் தங்கள்
வட்டங்களில் அமர்ந்து சுடச் சுட யோசனைகளைக் கூற ஆரம்பித்தார்கள்.!
கடைசியில் மீண்டும் சுஜாதா வந்தாள்.

“ இவ்வளவு யோசனைகள் வரும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை ! உங்கள் அனைவருக்கும்
எங்கள் நன்றி ! இந்த நான்கு அணிகளில்
நான்காவது அணி அங்கத்தினர்கள் அதிக அளவில் சிறப்பான யோசனைகளைச் சொல்லி
இருக்கிறார்கள். அந்த அணியில்
இருப்பவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.! அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புப்
பரிசு வழங்கப் படுகிறது. – ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ அணியின் சார்பாக !
‘ ஹாய் ‘ என்று
கத்திக் கொண்டே அந்த நான்காவது அணி மேடைக்கு வந்தது. ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘என்ற வார்த்தை பொறித்த பெரிய உலோக பேட்ஜ் ஒவ்வொருவருக்கும்
சட்டையில் குத்தப்பட்டது. அதே வாசகம் பொறித்த சிறிய பேட்ஜ் மக்கள் அனைவருக்கும்
தரப்பட்டது.
பிறகு அவர்கள் கூறிய கருத்துக்களைத்
தொகுத்து வழங்கினர். முதலில் ‘ அந்த நாள் நெஞ்சிலே ‘ இருப்பதால்
உண்டாகும் நன்மைகள்.
·
நம்முடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக
இருக்கும் !
·
நமது வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷம் தருவது நமக்கு
உற்சாகத்தைத் தருவதாக இருக்கும்.!
·
நாம் வேலை செய்வதன் பலன் நமக்குக் கிடைக்கும்.
·
நமது முயற்சிகள் வாடிக்கையாளர் பிரச்சினைகளை மட்டுமல்ல நமது
பிரச்சினைகளையும் தீர்க்கும்.
·
பொதுவாக நமது ஆரோக்கியம், சந்தோஷம், சக்தி
எல்லாம் அதிகரிக்கும்.
அது சரி ! ‘ அந்த நாள்
நெஞ்சிலே ‘ திட்டத்தை எப்படி கம்பெனியில் செயல் படுத்துவது ? இதோ
அதற்கான வழிகள் !
·
நாம் ஆபீஸ் நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
மாற்றுவோம். வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக
இதை வரவேற்பார்கள். நமக்கும் இது
சௌகரியமாக இருக்கும். நம்மில் சிலர் சீக்கிரம் வந்து சீக்கிரம் செல்லலாம் .
மற்றவர் லேட்டாக வந்து லேட்டாகச் செல்லலாம்.!
·
நமது அலுவலகத்தில்
சில குழுக்கள் அமைத்து வாடிக்கையாளரின் தேவை என்ன ? எப்படி
சேவைகளை அதிகரிப்பது ? என்பதை ஆராய வேண்டும்.
·
வாடிக்கையாளரின் கருத்துப்படி இந்த மாதம் சிறந்த சேவை
செய்பவர் என்ற விருது வழங்கலாம். அதே போல வருடத்திற்கான சிறந்த சேவைக்கான பரிசும்
தரலாம்.
·
360 டிகிரி அளவில் வாடிக்கையாளர்,
தொழிலார்கள், மேலதிகாரிகள் அனைவரது கருத்துக் கணிப்பைப் பெற்று அவற்றை
தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் !
·
வாடிக்கையாளர்களுக்கு திடீர் திடீர் என்று புதுவித சந்தோஷ
அலைகளைத் தருவதற்கென்றே ஒரு தனி படை அமைக்க வேண்டும்.
·
முக்கிய வாடிக்கையாளர் வரும்போது அவர்களுக்கு நமது
அலுவலகத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும்.
·
சில ஏர்லைன்ஸ் கம்பெனிகள் செய்வது போல நாமும் மனதைத்
திறந்து உண்மையான சேவை புரியத்
தயாராகுவோம்.! நமது ஒவ்வொரு சேவையும்
சிறப்பானதாக அமைய வேண்டும் .! அமையும் !

மேரிக்கு பிரமிப்பாக இருந்தது. சுஜாதாவின் அணி இவ்வளவு தூரம் போக முடியும்
என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை.
அப்படியே ஓரக் கண்ணால் டோனியைப் பார்த்தாள்.! அவன் சந்தோஷம் அவன் முகத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டியது.!
(தொடரும்)
ADUTHTHA VEEDU – அடுத்த வீடு: அமராவதி
ஆந்திராவின் புதுத் தலைநகரின் பெயர் அமராவதி. இதைப் பற்றி அடுத்தவீடு பிளாக்கில் நண்பர் அருமையாக விளக்குகிறார்.
மேலே
படித்து ஆனந்தமடையுங்கள்!
அமராவதி கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே சாதவாகனர்களின் தலைநகரமாகத் திகழ்ந்தது! அதற்குப் பின்னும் முகலாயர் ஆட்சி வரும் வரை அது ஆந்திராவின் பெருமைமிகுந்த நகரமாக விளங்கியது,
பகவான் புத்தர் இந்த இடத்திலிருந்து தான் தன் கால சக்கர உபன்யாசத்தை அருளினார். 2006ல் தலாய்லாமா வந்து இந்தப் புனித மண்ணை வணங்கினார்.
ஆந்திராவின் படத்தைப் பாருங்கள் . ஒரு அழகிய வீணை போல காட்சி அளிக்கிறது. அது மீட்டுமிடம் அமராவதி. தேவேந்திரனின் தலைநகரம் அமராவதிப் பட்டணம் போல இது மலர வேண்டும் என்பது அனைவரது விருப்பம்.


.
கவிதைப் பூங்கா!
மதிப்புற்குரிய பேராசிரியர் திரு மா. வயித்தியலிங்கன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் எழுதிய சிலேடை வெண்பா பற்றிக் குறிப்பிட்டார்.
அதைக் கேட்டு அவர் அனுமதியுடன் இங்கே தந்துள்ளேன்:
மாணவருக்கும் பிரியாணிக்கும் உள்ள சிலேடை !

மட்டனிதம் போடுகையால் மாண் குருமா ராசியினால்
தொட்ட விரும்புகை தோய் மணத்தால் – திட்டமுற
மாணாக்கர் என்றும் பிரியாணி ஆவார்கள்
காணாக்கால் கண்டு கொள்ளப்பா!
மாணவர் : தினம் மட்டம் போடுவர் , குருமார் ஆசி பெற்றவர்கள், புகை பிடிப்பதால் கையைத் தொட்டால் மணம் வீசும்,
பிரியாணி: இதமான மட்டன் போடுவது, குருமாவுடன் வருவது, சாப்பிட்ட கை மணம் வீசும் ,
செல் போனைப் பற்றி அவருடைய இன்னொரு அருமையான வெண்பா!

காது செவிடாகும் காசு பறிபோகும்
வாதோடு வம்பு வளருமே – பேதாய்கேள்
பொய்யே வளரும் பொழுது பழுதாகும்
கையிலே செல்லிருந்தக் கால்!
இந்தக் கவிதைப் பூங்காவில் விவேக சிந்தாமணி என்ற பெயரில் வந்துள்ள சில கவிதைகளைத் தந்துள்ளேன்! படிப்பதற்கு சுலபமாகவும், மிகவும் பொருள் பொதிந்ததாகவும், பஞ்ச் வரிகளுடன் கூடிய பாடல்கள் இவை!
கிட்டத்தட்ட 135 பாடல்கள் கொண்ட இந்த விவேக சிந்தாமணியை எழுதிவர் யார் என்பதே தெரியவில்லை!
ஆனால் அத்தனையும் முத்துக்கள்!
பயனில்லாத ஏழு ஐட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே!
அடுத்த பாடலைப் படியுங்கள்:

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடமைக் கேட்க
குருக்கள் வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கக்
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!
மாடு கன்னு போட, மழை பெய்ய, மழையில் வீடு விழ , மனைவி நோய்வாய்ப்பட, வேலைக்காரன் சாக, நிலத்தில் ஈரம் காயும் முன்னே விதைக்கலாம் என்று போகும் போது கடன்காரன் வழி மறிக்க, அரசாங்க வரிப் பணம் கேட்டு ஆள் வர,குருக்கள் வந்து தட்சிணை கேட்க, புலவர் ஒருவர் பாடிப் பரிசு கேட்க மனுஷன் பட்ட கஷ்டம் பார்க்க சகிக்காது!
இது தான் சோதனை மேல் சோதனை கேஸ் ! It never rains it pours என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒருத்தனுக்கு வரும் தொடர் துன்பங்களைப் பாருங்கள்!:
பெண்கள் மன்னிக்க!

ஆலகால விஷத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
கோலமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம்
கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!
இந்தப் பாட்டைப் படித்தால் தூக்குத் தூக்கிப் படத்தில் வரும் “பெண்களை நம்பாதே "பாடல் ஞாபகம் வரும்!
திருவாசகத் திருவிழா

மறைந்த திருவாசகமணி KM பாலசுப்ரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் அபாரப் புலமை படைத்தவர்.பல வருடங்களூக்கு முன்பே திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர். அந்த நூலின் பிரதிகள் தற்சமயம் கிடைப்ப தில்லை.எனவே அதை மறுபதிப்பு செய்யவேண்டும் என்று “ சிவாலயம்” என்ற அமைப்பின் முன்னவர் எஸ் மோகன் செய்த முயற்சியின் விளைவே இந்த விழா!
அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அறக்கட்டளையால் சிவாலயம் மற்றும் ராமலிங்க பணி மன்றமும் இணைந்து நடத்திய விழாவில் பேசியவர்களின் பேச்சு திருவாசகத்தைப் போலவே உருக்கியது.
ஓதுவாரின் திருவாசகப் பண் என்ன!
குன்றக்குடி அடிகள், ஊரன் அடிகள், ஔவை நடராசன், செல்வகணபதி, சொ
சொ மீ சுந்தரம் சங்கர நாராயணன் ,மாணிக்கம், வயித்தியலிங்கன் ஆகியோரின் சிறப்பான பேச்சு என்ன! .
மனதில் பதிந்து, உருக்கி , கண்ணில் நீரை வரவழைத்தத் திருவிழா இது!
திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்த்தவர் ஜி யூ போப் அவர்கள்! உலகத் தமிழ் மாநாட்டின் போது அவருக்குச் சென்னை மெரினாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது! அவரைப் பற்றி இந்த அவையில்
ஒரு கதை சொல்லப்பட்டது.

இந்தியாவிற்கு கிறித்தவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்று வந்த பாதிரியார் அவர். திருவாசகத் தேனைப் பருகி இன்புற்ற அவர் ஹிந்து மத நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக அளவில் பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இங்கிலாந்து திரும்பியதும் அவர் மேல் ’அவர் உண்மையான கிறித்தவர் இல்லை’ என்று வழக்குப் போட்டார்களாம்.
தீர்ப்பு சொல்லவந்த நீதிபதி அவர் மொழிபெயர்த்த திருவாசகத்தைப் படித்துவிட்டு சொன்னாராம்
’ இவ்வளவு பெருமையான நூலைப் படித்துத் திளைத்து மொழிபெயர்த்தவர் திரும்பவும் இங்கிலாந்து வந்து கிறித்தவராகவே இருக்கிறார் என்றால் அவரை விட சிறந்த கிறித்தவர் இருக்கமுடியாது’ என்று.
முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தாராம் ஜி.யு.போப்.
- இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் (அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
- தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
- கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.
ஜி யூ போப் அவர்களுக்கு கரம் குவிப்போம்! சிரம் குவிப்போம்!
ஆத்திசூடி

32. கடிவது மற / Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி / Abandon animosity.
39. கேள்வி முயல் / Learn from the learned.
40. கைவினை கரவேல் / Don’t hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / Don’t swindle.
42. கோதாட்டு ஒழி / Ban all illegal games.
43. கெளவை அகற்று / Don’t vilify.

தலையங்கம்
தமிழில் சிற்றிதழ்கள் – பத்திரிகைகள் நிறைய வருகின்றன
வார இதழ், இருவார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் ,ஆண்டு மலர், ஒரே ஒரு இதழ் என்று எண்ணற்றவை வெளிவருகின்றன.

இவற்றில் இரண்டு வகை !
- தாள் இதழ்கள்!
- வலை இதழ்கள்!
நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போல் இவற்றை இன்னொரு வகையாகவும் பார்க்கலாம்.
- விவரப் பத்திரிகை
- இலக்கியப் பத்திரிகை
இன்னொரு வகையும் உண்டு !
- வியாபாரப் பத்திரிகை
- கலைப் பத்திரிகை
அமைப்பைப் பொறுத்து வேடிக்கையாக வேறு இரு வகைகளைச் சொன்னார் நண்பர் ஒருவர்.
- ஆடை இல்லாத பத்திரிகைகள் (அம்மணப் பத்திரிகைகள்)
- ஆடை அணிந்த
பத்திரிகைகள்
இவற்றையெல்லாம் ஆய்ந்து ஆராய்ந்து ஒரு திறனாய்வு செய்ய ஆசை. அதனால் குவிகத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு தமிழ்ப் பத்திரிகையைப் பற்றி எழுதுவோம்!
இந்த மாதம் நாம் பார்க்கப் போகும் இதழ் அழகியசிங்கரின் “ நவீன விருட்சம்” !!!
=====================================================
ஆண்டு : 2 மாதம் : 4

Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
நவீன விருட்சம்- இம்மாத இதழ்
அழகிய சிங்கர் நவீன விருட்சத்தின் ஆசிரியர். மற்றும் 36 புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார். அவருக்கென்று அருமையான நண்பர் வட்டம் இருக்கிறது. மாதா மாதம் விருட்சம் இலக்கியக் கூட்டம் வேறு நடத்துகிறார்! நிறைய கதைகளையும் கவிதைகளையும் எழுதிய அழகிய சிங்கர் ( இந்தியன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்) அவர்கள் கைவண்ணத்தில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பத்திரிகை “ நவீன விருட்சம்” . .
நவீன விருட்சம் ஒரு தாள் – இலக்கியக் – கலைப் பத்திரிகை.
வருடத்திற்கு நான்கு இதழ்கள். அடுத்த ஆண்டு நூறாவது இதழைத் தொடப் போகிறது!
டிசம்பர் 2014ல் வந்துள்ள நவீன விருட்சத்தின் 96வது இதழைப் பார்ப்போம்!
முதலில் தன் இதழைப் பற்றி அவரே விமர்சனம் செய்கிறார். இதைக் கொண்டு வந்த அவருக்கும் படிக்கும் வாசகருக்கும் ஒருவிதப் பெருமையை உருவாக்குகிறது என்பதை உறுதியாக நம்புகிறார்!
“உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல் ” என்ற ஒரு கதை! வைதீஸ்வரன் எழுதியது! ஒருவர் கனவில் ஏசுநாதர், சங்கராச்சாரியார், புத்தர், கலைஞர் கருணாநிதி தனித்தனியாக வந்து அவருடன் நண்பர் போல பேசி ,பழகி, அழுது, ஆரவாரித்ததைச் சொல்லுகிறார்.! நல்ல கற்பனை!
“இவனை இப்படியே விடக்கூடாது ”என்று ந . ஜயராமனின் கதை.சுந்தரம் என்ற துருவாசர் மாதிரி இருக்கும் சிறுவன். அவனுடன் எப்படி அவன் அம்மா அப்பா அண்ணா அக்கா பேசிக் கோபப்படுகிறார்கள் என்பது முடிச்சு.
‘பஸ் அடியில் விழவா?’ என்ற குறுங்கதை அசோகமித்திரனின் ஒரு பக்க முத்திரைத் த்ரில்லர்!
ஸீ வை குருஸ்வாமி சர்மா என்பவரால் எழுதப்பட்ட “பிரேம கலா வத்யம்” என்ற தமிழின் மூன்றாவது நாவலைப் பற்றிய விமர்சனத்தைப் பற்றி ஐராவதம் விமர்சனம் செய்திருக்கிறார்.
நாலைந்து வசன கவிதைகள். பொறுமையோடு படித்தேன். புரிய மாட்டேன் என்கிறது. ‘என் குத்தமா ? உன் குத்தமா ?
கள்ள வாரணம் என்ற பெயரில் பிள்ளையார் அமிர்தத்தைத் திருடி திருக்கடவூரில் இருப்பதை கிரிக்கெட் எல்லாம் சேர்த்து –படிக்க ஜாலியாகத் தான் இருக்கு – சொல்லியிருக்கிறார் கணேஷ்ராம்.
ஐராவதம் அவர்களின் மறைவு அனைத்து கதைகளிலும் கட்டுரைகளிலும் தெரிகிறது. அவருக்கான சிறப்பிதழ் என்றே இதைச் சொல்லலாம். சா. கந்தசாமியும் அவரை நினைவு கூர்கிறார். மறைந்த முத்தையாப் பிள்ளையின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இரவில் தூக்கமின்றித் தவித்து நெஞ்சுவலியில் துடித்து மடியும் முதுமையின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் எஸ்..சங்கரநாராயணன் .
அழகியசிங்கரின் சுயசரிதக் கட்டுரை!
எஸ்.வி.வேணுகோபாலனின் கதை – பவழவண்ணன் என்ற கவிதை எழுதுபவரைப்பற்றி. உலகம் நமது பெருமையைப் புரிந்து கொள்ளவில்லை என்ற கற்பனையிலேயே இருந்து வறுமையில் வாடி மடிந்து போகிறார் பவழவண்ணன் . அவர் சாதாரணமானவர் என்ற உண்மையை ஏன் நண்பர்கள் அவரிடம் சொல்லவில்லை என்ற கோபத்தில் அவர் எழுதியவற்றை அவருடன் தகனம் செய்கிறாள் அவரது சகோதரி. ’அளவு கடந்த சுய மதிப்பீடு’ செய்து கொள்ளும் நம் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடி!
மொத்தத்தில் – விருட்சம் ஆட்டுக்குச் சொந்தம் அல்ல. பசுவுக்குச் சொந்தம். அதாவது நுனிப்புல் மேய்பவர்களுக்கு அல்ல. அசை போடுபவர்களுக்கு!
(மறைந்த ஜெயகாந்தன் அவர்கள் விருட்சம் கூட்டத்திற்கு வந்தபோது எடுத்த படம் – வலையில் கண்டெடுத்தேன்! . சிவப்புச் சட்டையில் அழகிய சிங்கர்.
