‘நானும் கல்யாணமாகி வந்த நாளா பார்த்துட்டிருக்-
கேன்.. எதை, நான் கேட்டவுடனே என்னிக்கு வாங்கித் தந்-
திருக்கீங்க…’ என்று பொரிந்து தள்ளினாள் அகிலா.

‘அகி … நான் என்ன வாங்கித் தரமாட்டேன்னா
சொல்றேன். இந்த மாதம் கொஞ்சம் டைட்டா இருக்கு. அது
உனக்கும் தெரியும்.. அடுத்த மாதம் வாங்கலாம்னுதானே
சொல்றேன்…’.

Image result for old brahmin couple 60th birthday

‘நான் அப்படி என்ன பெரிய சாமானா கேட்டுட்டேன்..
ஆ·ப்டர் ஆல் ஒரு பட்டுப் புடவை… அதது ஆசைப்பட்டதும் வாங்கி அனுபவிக்கணும். எப்பவாவது வாங்கினா அதனுடைய த்ரில்லே போயிடும். என் ·ப்ரெண்ட்ஸெல்லாம் அந்த புது மோஸ்தர் புடவையைக் கட்டிட்டு தினம் மீட்டிங்கிற்கு வரும்போது நான் மட்டும் அழுது வடிஞ்சுண்டு… சேச்சே .. என்ன லை·ப்டா சாமி இது..?’ என்று உச்சஸ்தாயியில் கத்தினாள் அகிலா.

திடுக்கிட்டு விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தான்
சபேசன். என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏதாவது
பேசினால் அவள் கத்துவது அதிகமாகுமே தவிர குறையாது.

‘பதில் சொல்றாரா பார் மனுஷன்.. தன் மேலே குற்றத்தை
வெச்சுட்டு எப்படி பதில் சொல்ல முடியும்? வேலைக்குப்
போயிட்டிருந்தப்போ அந்த ·ப்ரெண்டு இதுக்காகப் பணம்
கேட்டான்.. அதுக்காக பணம் கேட்டான்னு இருக்கிறதை
யெல்லாம் தூக்கிக் கொடுத்தாச்சு.. ஒருத்தரும் நமக்கு வேணும்ங்கறப்போ  நம்ம குழந்தை கல்யாணத்துக்கு.., இந்த சின்ன வீடு கட்டறதுக்கு .. பணம் இல்லாம தவிச்சப்ப                திரும்பிக் கூடப் பார்க்கலே… நமக்கு ஒரு சமயம்னா உதவி இருக்கானே.. அவனுக்கு தேவையா இருக்கிறப்போ நாமும்
உதவலாம்னு ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்கலே..
ஏமாந்து போய் அசடு மாதிரி நின்னுட்டிருக்கோம்…’ என்று
புலம்பிக் கொண்டே இருந்தாள் அகிலா.

சபேசனின் குரல் கேட்கவேயில்லை. பேசாமல் மன
வருத்தத்துடன் படுத்துக் கொண்டிருந்தான்.

பக்கத்து ஹாலில் படித்துக் கொண்டிருந்த யமுனாவுக்கு
அவர்கள் பேசுவது எல்லாம் துல்லியமாகக் கேட்டுக் கொண்-
டிருந்தது. வாரத்தில் அட்லீஸ்ட் இரண்டு நாளாவது இரவு
பத்து மணிக்குமேல் பழைய பல்லவிகளைப் பொரிந்து தள்ளுவாள்   அகிலா – அவள் அம்மா. அப்பா பதிலே பேசாமல்
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.
அப்பா பதில் பேசவேயில்லையே என்பதை எல்லாம்
பொருட்படுத்த மாட்டாள் அம்மா. அவள் பாட்டுக்கு ஒரு
தடவை கல்யாணமான நாள்லேருந்து இன்று வரை, கேட்டுக்
கிடைக்காதவற்றையும், தாமதமாகக் கிடைத்தவற்றையும்
பட்டியலிட்டு விடுவாள். அப்பா பேசாமல் இருந்தாலும்
அவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
வேதனையால் வெந்து கொண்டிருப்பார்.

ஒரு நாள் இதைப் பற்றி அவரிடம் கேட்டே விட்டாள்
யமுனா.

Image result for parents fighting while children watch in chennai

‘அப்பா.. உங்களுக்கு இதெல்லாம் வேணுமாப்பா..?
நீங்க ரெண்டு பேரும் இப்படி மனசு கஷ்டப்படறதப் பார்த்தா
எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு… நீங்களாவது இருக்-
கிற பணத்தை யெல்லாம் உங்க ·ப்ரெண்ட்ஸ¤களுக்கு
கொடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா..?’

விரக்தியாகச் சிரித்தார் சபேசன்.. ‘இப்போ அதைப்
பத்தி நினைச்சா நீ சொல்றது சரிதான்மா… இது எல்லாம்
ஒரு ஏஜ்லே நடக்கிறது.. அந்தக் காலத்திலே ஒரு க்ளோஸ்
·ப்ரெண்டு ஒரு ·பங்க்ஷனுக்கோ, மருத்துவச் செலவுக்கோ
பணம் பத்தலைன்னு கேட்கறப்போ நம்ம கையிலே பணம்
இருந்தா கொடுக்கத்தான் தோணிச்சு..ஏன் பணம் இல்லேன்னா
கடன் வாங்கிக் கொடுக்கத் தோணிச்சு. அவ்வளவு
நெருங்கிய பழக்கம் எங்களுக்குள்ளே.. அட, அப்படி
நமக்குத் தேவைப்பட்டா அந்த நண்பர்கள் நம்மளை கை
விட்டுடப் போறாங்களா என்ன என்ற ஒரு அதீத நம்பிக்கை.
அம்மா அடிக்கடி சொல்ற மாதிரி, அந்த நாள்லே அசட்டுத்தனமா இருந்துட்டேனோன்னு இப்போ  தோணுது.. ஏன்னா
நமக்கு ஒரு தேவை வந்தபோது அந்த நண்பர்கள் யாருமே
கண்டுக்கவே இல்லே.. சிலர் பணம் வெச்சுட்டே இல்லேன்னுட்டாங்க. சிலர் கிட்டே பணம் இருக்கலே. ஆனா நான்
செய்த மாதிரி லோன் போட்டு யாரும் உதவி செய்ய முன்
வரலே. நான் கொடுத்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா
திருப்பிக் கொடுத்திருந்தாலும் நமக்கு அது உதவியாய்
இருந்திருக்கும். ஆனா அவங்க பஞ்சப் பாட்டுப் பாடிண்டு
அதையும் தரலே. இப்போ சொல்ற அம்மா அப்போ என்
கிட்டெ மல்லுக்கு நின்னுருந்தா, ஒரு வேளை அவர்களுக்கு
பணம் கொடுக்காமல் இருந்திருப்பேன். இல்லேன்னா நூறு
ரூபாய் கொடுத்த இடத்திலே இருபத்தஞ்சு ரூபாய்தான்
கொடுத்திருப்பேன்’

‘அப்பா.. இதுக்கு என்னதான்பா முடிவு..? அம்மா
இப்படி அடிக்கடி புலம்பிண்டிருந்தா ஒரு நிம்மதியே
இருக்காதேப்பா…!’

‘என்னம்மா செய்யறது.. உப்பைத் தின்னவன் தண்ணி
குடிச்சுத்தானே ஆகணும். என் தலை விதி. நடக்கறபடி
நடக்கட்டும்…’

யமுனா யோசனையோடு உட்கார்ந்திருந்தாள்.
அகிலா ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.
யமுனாவும் அருகில் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

‘நான்ஸென்ஸ்.. இதைப் பார்த்தியா.. பல ஆண்டுகளுக்கு
முன்னால் பாபர் மசூதியை இடிச்சுட்டாங்க.. அதையே
சொல்லிச் சொல்லி இந்த முஸ்லீம் இனத்தினர் கலவரம்
பண்ணிட்டே இருக்காங்க. அன்னிக்கு ஏதோ ஒரு மாஸ்
ஸைகாலஜிலே. எமோஷனலா நடந்து போச்சு. அது தப்புன்னு அந்த பார்ட்டி லீடர்ஸ¤ம் ஓபனா மன்னிப்புக்கேட்டாச்சு.
அப்படி இருக்கும்போது அது மாதிரி நடக்காமல் இருப்ப-
தற்கும், ரிலீஜியஸ் ஹார்மனி நம் நாட்டிலே இருப்பதற்கும்
என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இன்று
அதை முன்வெச்சு கலவரம் செய்துட்டிருந்தா அது புத்தி-
சாலித்தனமா என்ன… முஸ்லீம் மன்னர்கள் நம் நாட்டை
முற்றுகையிட்டு எத்தனை கோயில்களை இடிச்சிருக்காங்க..
அதைக் காரணம் காட்டி இந்துக்களும் கலவரம் பண்ண
ஆரம்பிச்சா அதில் அர்த்தம் இருக்கா. அழிச்சதைத்
திருப்பி ஒரிஜினல் ரூபத்தில் கொண்டு வா என்றால் முடியற
காரியமா..?’

Image result for teenage brahmin girl

லேசாகச் சிரித்தாள் யமுனா.

‘ஏண்டி.. நான் சீரியஸா ஏதோ சொல்லிட்டிருக்கேன்..
நீ பாட்டுக்கு சிரிக்கிறே..’

‘அம்மா.. இது வரை நீ கேட்ட  எதையாவது  அப்பா
வாங்கித் தராமல் இருந்திருக்காரா..?’

‘இல்லை..’ என்று இழுத்தபடி கூறினாள் அகிலா,
எதற்காக திடீரென்று பேச்சை மாற்றுகிறாள் என்று
புரியாமல்.

‘அ·ப் கோர்ஸ்.. நீ ஆசைப்பட்டதை நீ கேட்டவுடனே
வாங்கித் தராமல் இருந்திருக்கலாம். ஆனா அதை நெனவு
வெச்சுண்டு வெகு சீக்கிரத்திலே, முடிஞ்சபோது வாங்கித்
தந்திருக்காரா இல்லையா..?’ என்று அகிலாவை உறுத்துப்
பார்த்தாள் யமுனா.

‘ஆமா நீ சொல்றது சரிதான்.. ‘ என்றாள் அகிலா
ஏதும் புரியாமல்.

‘அப்படி இருக்கும்போது ஏன் அப்பாகிட்டே வாரத்திலே
ரெண்டு நாளாவது பழைய பல்லவியையே பாடிப் புலம்பறே.
உன்னுடைய நிம்மதி போறது.. அப்பாவுடைய நிம்மதி
போறது.. ஏன் எனக்குக் கூட என்னவோ போல இருக்கு..’

‘ஓ.. அதுவா சேதி… அப்பாவுக்கு வக்காலத்து வாங்கறியா..? நான் வேணும்னு கேட்டதை என்னிக்காவது அவர்
உடனடியா வாங்கித் தந்திருக்காரா சொல்..’

‘இருக்கலாம்… தாமதமா, பணம் வந்தபோது வாங்கித்
தந்திருக்கலாம். ஆனா உனக்கு என்ன தேவையோ அதைப்
பார்த்துப் பார்த்து செஞ்சிட்டுத்தானேம்மா இருக்கார்..’

‘ஆமாமா.. அசடு மாதிரி இருக்கற பணத்தை யெல்லாம்
இந்த நண்பன் கேட்டான் அந்த நண்பன் கேட்டான்னு
கொட்டிக் கொட்டிக் கொடுக்காம இருந்திருந்தா எனக்கு
வேண்டியது அப்பப்போ கிடைச்சிருக்கும் இல்லையா..?’

‘அம்மா அப்பா அப்படிக் கொடுக்கும்போது என்னிக்-
காவது நீ வேண்டாம்னு தடுத்திருக்கியா…’

‘அதெப்படி முடியும்..? க்ளோஸ் ·பாமிலி ·ப்ரெண்ட்ஸ்
அண்ணா அண்ணான்னு பழகினப்புறம் கல்யாணத்துக்கும்,
மருத்துவச் செலவுக்கும் கேட்கும்போது எப்படீடி இல்லேன்னு
சொல்ல முடியும்..?

‘எக்ஸாக்ட்லி… அப்பாக்கும் அந்தத் தயக்கம் இருந்திருக்கலா     மில்லையா..? நம்ம கஷ்ட காலம்.. நமக்கு தேவைன்னு வந்தபோது அந்த நண்பர்களெல்லாம் சமத்தாயிட்டாங்க.
சுண்டு விரலைக் கூட அசைக்கலே.. அப்படி இருக்கும்போது
அப்பாவைக் குறை கூறிட்டிருந்தா அது சரியா அம்மா..?’

அகிலா மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.

‘அம்மா.. நான் உன் மனதைப் புண்படுத்தணும்னு
இதையெல்லாம் சொல்லலே.. நாம விரும்பினாலும் அந்தக்
கடந்த காலத்தை நம்மாலே திருப்பிக் கொண்டு வர முடியுமா
அம்மா..? வீ கான்ட் புட் தி க்ளாக் பாக்.. நடந்தது நடந்து
போச்சு.. நடந்தது நடந்ததுதான்… அது சரியா தப்பான்னு
இப்போ விவாதித்துப் பிரயோஜனமில்லே.. இனி தப்புப்
பண்ணாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம். அந்தக்
கடந்த காலத் தப்புக்களையே அடிக்கடி பட்டியலிட்டு
தன்னையும் வருத்திண்டு, மற்றவர்களையும் வருத்திண்டு
நிகழ்காலத்துலே உள்ள வசந்தங்களை அனுபவிக்காமல்
விட்டுட்டிருக்கறது புத்திசாலித்தனமா அம்மா.. கொஞ்சம்
யோசித்துப் பாரும்மா… கடந்த காலத்தை மறக்க முயற்சி
செய். நிகழ்காலத்திலே, எதிர்காலத்திலே வாழப் பார்…
நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடும்மா..’
என்றவாறு யமுனா உள்ளே சென்றாள்.

யோசனையோடு அமர்ந்திருந்த அகிலாவுக்கு ஏதோ
புரிவது போலிருந்தது.