எஸ். கண்ணன்அவர்களுக்குஅஞ்சலி


மியூசிக் கண்ணன்  என்று அழைக்கப்படும் எஸ் கண்ணன் அவர்கள் என்னுடன்  பாங்க ஆப் பரோடா வங்கியில் பணி  புரிந்தவர். தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் ஆன்மீக சித்தாந்தங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தமிழ் ஹெரிடேஜ் என்ற நிறுவனத்தின் அறங்காவலர்களில் ஒருவராக இருந்து திறமையுடன் அதனை நடத்திச் சென்றவர். 

மதிப்பிற்குரிய நல்லி  குப்புசாமி அவர்களுக்கு வலது கரமாக இருந்து  டிசம்பர் மாதம் சங்கீதக்  கச்சேரிகளுக்கு அட்டவணை தயார்செய்து சங்கீத  ரசிகர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்தவர்.   

குவிகத்தின் பல கூட்டங்களுக்கு வந்து அமைதியாக ரசித்து நிறை குறைகளைச் சொல்லிவிட்டுப் போகும் நல்ல நண்பர். 

அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

==============================================================================

இரா இராசு அவர்களுக்கு அஞ்சலி

 

திரு ராசு என்றதும் நமக்கு  நினைவிற்கு வருவது

  • ‘சென்னை நலத் தகவல்’ என்ற  புத்தகம்
  • திரு வி க பேச்சு பயிலரங்கம் ,
  • தீ விபத்துக்களைத் தடுக்க அவர் நடத்தும் பாதுகாப்புக்  கூட்டங்கள் 
  • ஜீவா பூங்காவில்  திருக்குறள்  எழுதி வைப்பது
  • பசுமையைப் போற்ற மரம் நடுதல் 

இப்படிப் பல நல்ல முயற்சிகளையே தன் வாழ்வின்  லட்சியங்களாகக்  கொண்ட அவர் குவிகம் இல்லத்து நிகழ்வுகலில் முக்கிய பங்கேற்றவர். 

அவரது திடீர் மறைவு ஈடு செய்ய முடியாது. 

குவிகத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.