இம்மாதக் கவிஞர் பழனி பாரதி       – முனைவர் தென்காசி கணேசன்

Palani Bharathi | Tamil Juke Box | பழனிபாரதி | Mass ...

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான  இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதை நூல்கள் பல எழுதிய  இவர் போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். இவரை உவமைக் கவிஞர் சுரதா “இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்” என்று பாராட்டியுள்ளார்.

பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதித் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

டியுனைக் கேட்டாலே பாட்டு எழுதும் திறமைசாலி பழநிபாரதி என்ற பெயர் வாங்கியவர்.ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்து எழுதிய கவிஞர்களில் இவர் பெயரும் உண்டு.

பழனிபாரதிக்குச் சொந்த ஊர் காரைக்குடி அருகில் உள்ள செக்காலை. இவருடைய தந்தை தவத்திரு  குன்றக்குடி அடிகளாரின் உதவியாளராக இருந்தவர். மற்றும் அக்காலத் திறவிடத் தலைவர்களுடனும், கவியரசுடனும் தொடர்பு கொண்டவர்.

பெரும்புள்ளி படத்தில்,

 

இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள்

பௌர்ணமி ஆகிறதே

மரங்களின் கிளைகளில் குயில்களின் சுரங்களில்

சூரியன் மலர்கிறதே,  

என்ற வரிகள் இவருக்குப் புகழ் தந்தது.

விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம் மற்றும் பொன்வண்ணன் இயக்கிய  அன்னை வயல் ஆகிய இரண்டு படங்களிலும் பாடல்கள்  எழுதினார். அன்னை வயலின் ‘மல்லிகைப் பூவழகில்’ என்ற பாடல், கோகுலம், புதிய மன்னர்கள் , மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, பெரிய குடும்பம், மக்களாட்சி, பூவே உனக்காக,  போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதினார்.

1996, 1997 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார் புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்ணினைத் தமிழாக்கம் செய்தவர்களுள் இவரும் ஒருவராவார்..அதுபோலவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக் கீதம் ஒன்றினையும் இயற்றியவர்.

கோலங்கள் தொடர் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் ஆகும்  இதற்குப் பாடல்கள் இவர்தான் எழுதினார்.        

 

இவரின் கவிதைகளும்  மிக அழகு.

வெளியில் இருந்து வந்த கிளியை

வீட்டுக்குள் வளர்த்தோம்

அது எங்கள் மொழியைப் பேசுவது

இனிமை தான் என்றாலும்

வருத்தம் தான்

தாய் மொழியை மறந்தது.

நாம் அடிக்கடி மனதுக்குள் முணுமுணுக்கும் பல ஹிட் பாடல்கள் இவர் எழுத்தில் உருவானவையே.

அடடா பூவின் மாநாடா  –  வீசும் காற்றுக்குக் பூவைத் தெரியாதா

என்னைத் தாலாட்ட வருவாயா

நீ கட்டும் சேலை மடிப்பினிலே நான் கசங்கிப் போனேண்டி

அழகிய லைலா  – அவள் இவளது ஸ்டைலா

சுடிதார் அணிந்துவந்த சொர்க்கமே

சொல்லாமலே யார் தந்தது

 

இளங்காத்து வீசுதே  – இசை போல பேசுதே

என்னவளே என்னவளே

ஒளியிலே தெரிவது தேவதையா

பாட்டு சொல்லி பாடச் சொல்லி

முன் பனியா முதல் மழையா

 

ரோஜா பூந்தோட்டம்காதல் வாசம் காதல் வாசம்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

சிக்காத சிட்டொன்று கையில் வந்தா திக்காம பாட்டு வரும்

மச்சினிச்சி வநத நேரம் மண் மணக்குது

நீ வெட்டி வெட்டிப் பொடும் நகத்தில் எல்லாம்

ஓ குட்டி நிலவு  தெரியுதடி

 

சொல்லாமலே யார் பார்த்தது

மழை சுடுகின்றதே அது காதலா  – தீ குளிர்கின்றதே அது காதலா

மலரே நீ வாழ்க – மஞ்சள் நிறம் வாழ்க  – வண்ணக் கனவெல்லாம் வாழ்கவே

என இவரின் பல பாடல்கள் தரமான வரிகள் கொண்டவை.

மனசு ரெண்டும் பார்க்க

கண்கள் ரெண்டும் தீண்ட

உதடு ரெண்டும் உரச

காதல் வெள்ளம் பொங்குதே , என்றும்

உன் பார்வையில் என்னைக் கொன்றுவிடு பெண்ணே

உன் கூந்தலில் என்னைப் புதைத்துவிடு கண்ணே ,என்றும்,

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

உயிர் நனைகிறதே , என்றும்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

 என்றும்  பல பாடல்கள் அருமை.

சேலையிலே வீடு கட்டவா என்ற பாடல் வந்தபோது, மிகச் சிக்கனமான கொத்தனார் பழனி பாரதிதான் என்று ஜோக் எல்லாம் வெளிவந்தது.

இப்படிப் பல அருமையான பாடல்கள் தந்தவர் கவிஞர் பழனி பாரதி.  அடுத்தமாதம், இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி.

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.