Diwalis Origins a Mythological View - Mythology Vault

 

மக்களெல்லாம் ஆடுகிறார் மண்ணுலகில் தீபாவளி

மகேசர்களும் ஆடுகிறார்  விண்ணுலகில்   தீபாவளி

 

Why Bhagwan Shiva Killed Jalandhar The Asura Born from His Third Eyeசிவபெருமான் முக்கண்ணால்  மன்மதனை எரித்துவிட்டு

நெற்றியிலே காமன்சாம்பலை இட்டுக்கொண்டவந்தபின்னர் 

பார்வதி தேவியுடன் குடங்குடமாய் எண்ணை மொண்டு

யானைத்தலையையும் ஆறுமுகத்தையும் குளுப்பாட்டும் தீபாவளி

 

Using AI to generate images of Trimurti and their consorts celebrating Deepavali– Brahma & Saraswati, Vishnu & Lakshmi, Shiva & Parvati – who together represent creation, prosperity, transformation, and the beauty ofபட்டாடை தான் உடுத்தி லக்ஷ்மிவெடி கை சேர்த்து

சக்கரத்தைச்  சுற்றிச்சுற்றி  பரந்தாமன் வருகையிலே 

கலைமகளும் கைமலரில் ஓலைவெடி எடுத்துவர

நான்முகனின்  நான்முகமும்  மயங்கி நின்ற  தீபாவளி !

 Palani, the Sacred Abode of Lord Murugan - Arulmigu Dandāyudhapani Swāmi Temple, Palaniநாரதரும் ஞான வெடி கொண்டுவந்து கலகமிட

முருகனும் மயில் மார்க்கம் சென்றுலகை வென்றுவர

கணபதியோ சிவசக்தி அருளினால் சிவகாசி பெற்றுவிட

முருகனவன் கோபித்து பழனியில்  நிற்கையிலே

அவ்வையவள்  அள்ளித்தந்த தமிழென்னும் மத்தாப்பில்

சினம்தணிந்த குமரனும்  சிரித்துவிட்ட தீபாவளி

 The Killing of Kamsaகண்ணனைக் கொன்றுவிடக் கம்ஸனின் கோடிவெடி

கண்ணனே செய்துவிட்டான்  அத்தனையும் தவிடுபொடி

பூதனையை  கொக்கை காற்றை பனம்பழத்தை  

கம்ஸனுடன் வெடித்தது    கண்ணனவன் தீபாவளி

 

 நவகிரக மந்திரங்கள் - Navagraha - برنامه‌ها در Google Playசூரியன்  நெருப்புச்  சக்கரமாய்  பொறிபறக்க

சந்திரன் மேகச் சக்கரமாய்  சரசரக்க  

அங்காரகன் சிவப்பு மத்தாப்பைப்  பொறிபறப்ப

புதனவன்  பச்சை மத்தாப்பைக் சுழற்றி கரகரக்க

குருவியாழன் சாட்டை மத்தாப்பை வீசி பரபரப்ப

சுக்கிரன் கம்பி மத்தாப்பை சுற்றி பொறிபெருக்க  

சனியும் கறுப்புப் புகையைப்  பெருக்கி கருகருக்க

ராகுவும் கேதுவும்    திரிதிரிக்கும்  நவகிரகத் தீபாவளி

 

Iṇḍra • Airāvata - trita bharatiya paramparaஇந்திரன் வஜ்ராயுதத்தால் அசுரரைப் பொடிபொடிக்க

வாயு மேகத்தில் மின்னல்  பொறி தெறிக்க

வருணன் மேகத்தில்  வெடிபோல்  இடிஇடிக்க

அக்னி மத்தாப்பிலும் திரியிலும் சிரிசிரிக்க

குபேரன் பொன்னை  வாரிவாரி  இறைக்க  

வெடித்துச்  சிரித்தது விண்வெளித் தீபாவளி

 

Kevat Ram Boat Ride - Ramayana Story - A True Devotee Enslaves Godகூனி வத்திவைக்க கைகேயி பத்தவைக்க

தசரதன் துடிதுடிக்க வெடித்ததோர்  அணுகுண்டு

ராமனும் சீதையும் கங்கையில் குளிகுளித்து

கானகத்தில்  குதூகலித்த கனிந்ததலை தீபாவளி  

 

Hanuman Burns Lanka - Sawan Booksராமஜானகியை இராவணன் சிறையெடுக்க

ராமனும் மனம் வெடித்து உலகமெலாம் தேடிவர

இந்திரஜித் அனுமனுக்கு வால்திரியில் தீவைக்க

இலங்கையையே எரித்து பொறிபறந்த  தீபாவளி

 

sri-ram-vanar-sena.jpgஅனுமனும் சுக்ரீவனும்அங்கதனும் வாலுயர்த்தி 

ஆயிரம் வாலாக்கள் ராமனுக்கு உதவி வர

இராமபாணம்  விடுத்து இராவணன் உயிர் பறித்து

பட்டாசு அபிஷேகம் கண்டுகொண்ட தீபாவளி

 

ஐந்தாம் வேதம்: திகுதிகுவென எரிந்த அரக்கு மாளிகைபாண்டவர்  அழிந்துபட அரக்கினிலே வீடுகட்டி

மீண்டுவர இயலாமல்  கண்ணிவெடி சேர்த்துவைத்த

துரியனின் சதியினை உணர்ந்துவிட்ட பாண்டவரும்  

சொக்கப்பனை கொளுத்தி தப்பிச்சென்ற தீபாவளி !

 

Three Symbolic Aspects To The Draupadi Sari Incident – Krishna's Mercyதருமனவன் சூதுவெடி பாண்டவர்க்கு பழிசேர்க்க

கருமனத்தான்  துரவுபதியை  துணிபற்றி இழுத்துவர

மனம்பதைத்த  பாஞ்சாலி கையேந்தி உனையழைக்க

கண்ணா உன் கைவெடிப்பில் சேலைவந்த தீபாவளி !

 

பார்த்தன்  அம்பினிலே நெருப்பாறு  பொறிபறக்க

பீமனின் கதையினிலே இடிபோல  வெடிவெடிக்க

கண்ணனின் கைச்சாட்டை பம்பரத்தை ஆட்டிவைக்க

பாரதப் போர்முடித்து குழல்முடித்த தீபாவளி !

 

imageஈன்றமகன் நரகனைத் தந்தையே கொல்லவந்து

தானும் துணைநின்று கொன்றோமே என்றழுது

பூமித்தாய் நெஞ்சினிலே வெடித்துவந்த கோபத்தீ

பொறிபொறியாய் வெடிவெடியாய் துடிப்பதுவே தீபாவளி !