pirantha kuzhanthayai epadi paramaripathu: பிறந்த குழந்தையை எப்படி தூக்கி  பாலூட்ட வேண்டும்... பல பராமரிப்பு விஷயங்கள் இதோ - Samayam Tamil

அத்தனை விளையாட்டுப் பொருட்களையும்
நிராகரித்துவிட்டு
தவழ்ந்து வந்து
அடம்பண்ணுகிறாள் பாப்பா
கையிலிருக்கும் புத்தகம்தான் வேண்டுமென்று

வராத அழுகை அழுதும்
செல்லச் சிணுங்கல்களுமாய்
கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் வேறு

பாப்பாவை அரட்டவும்
குறும்புசெய்து சிரிக்கவும்
உப்பு மூட்டை ஏறவும்
“அம்மா வஞ்சிட்டா” எனப்
புகாரளிக்கவுமாய்
இடையிடையே வந்துபோகிறான் மித்திரன்
‘விளம்பர இடைவேளைகளில்’

“வெங்காயம் கூட வெட்டித் தருவதில்லை”
“பாப்பாவையாவது பாத்துக்கோங்களேன்”
“சம உரிமை பற்றி பேச்சு மட்டும்தானா”
சமையலறையிலிருந்து கிழத்தி…

தெரியாத வார்த்தைகளை
கவிதைகளில் எழுதியிருக்கிறார்
மௌனன் யாத்திரிகா
அடிக்கடி அகராதி புரட்டவேண்டியுள்ளது

மீண்டுமொரு விளம்பர இடைவேளையில்
காகிதம் எடுத்துவந்து
கப்பல் செய்துதரக் கேட்கிறான் மித்திரன்

கவிதை படித்தலும்கூட
எளிதான காரியமாயில்லை.
எங்கிருந்து படைப்பது?