நீண்ட இடைவெளிக்குப் பின்
தற்செயலாய் சந்தித்துக்கொண்டோம் வங்கியில்.
நல்ல படைப்பாளி நண்பர் அவர்.
கொரானா, பொதுமுடக்கம்,
ஊதிய இழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள்,
அரசியல், சமூகம்,
போராட்டங்கள், தொழிற்சங்கங்கள்,
ஆசைகள், இலக்குகள்,
குடும்பம், நண்பர்கள்
இப்படியாக நிறைய பேசினோம்.
வீடு கட்டவிருப்பதாகச் சொன்னார்.
பழைய மகிழுந்தின்
மூன்றாவது உரிமையாளராகவிருப்பதை
கொஞ்சம் கூச்சத்தோடு சொன்னேன்
பின் ஆளுக்கொரு
கடன் படிவத்தை எடுத்து
நிரப்பத் துவங்கினோம்.
தொடர்ந்து என் கவிதைகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தும் குவிகம் இதழுக்கும் அதன் தேர்வுக்குழுவிற்கும் நன்றி! நன்றி! நன்றி!
LikeLike