‘ரொம்ப தர்மசங்கடமா இருக்கே..! ஒரு கட்சி ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. இன்னொரு கட்சி
2000 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க.. மூன்றாவது கட்சி 3000 ரூபாய் கொடுத்துருக்காங்க. யாருக்கு ஓட்டுப் போடறது..?’ என்று புலம்பிக் கொண்டிருந்தேன் மனைவியிடம்.
அருகிலிருந்த என் ஐந்து வயது மகள் மிதிலா. ‘கவலையேபடாதீங்க அப்பா… நீங்க போய் ஓட்டுப் போடலேன்னா
யாராவது உங்க ஓட்டைப் போட்டுடுவாங்க.. அதனாலே நமக்குக் காசு கொடுக்காத ‘நோட்டா’ வுக்கு ஓட்டுப் போட்டுடுங்க. இப்படிப் பணம் கொடுத்தவங்களுக்கும் இது ஒரு பாடமா இருக்கும்’ என்றாள் சர்வ சாதாரணமாக.
திகைத்துப் போய் நின்றோம் நானும் என் மனைவியும்.