“சார், முருகேசன் இருக்காறா?” ஒரு தாடி வைத்த பெரியவர் அழைப்புமணியை அழுத்தியபின், வெளிப்பட்டவரிடம் கேட்டார். உடுத்திய உடையும் சரி தலை முடியும் சரி சுத்தமாக கலைந்திருந்தது. பஞ்சத்தில் அடிபட்டவர் என்பது தெளிவாக தெரிந்தது, யாரோ யாசகம் கேட்டு வந்துவிட்டாரென நினைத்து “இப்ப ஒண்ணும் கிடையாது போயிட்டு வாங்க” என்றார் முருகேசன்.
“இது முருகேசன் வீடுதானே?” பெரியவர்.
“உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்?” முருகேசன்
“நான் பட்டவாத்தலை குமாரசாமியோட நண்பன், அவரோட பிள்ளை முருகேசனை பாக்கத்தான் வந்தேன், ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும்… அதுதான் கேட்டேன்” பெரியவர் மென்னு முழுங்கினார்.
அப்பா எதோ கடன் கிடன் வாங்கி பாக்கியை வசூலிக்க என்னை கை காட்டி விட்டார் போல என முருகேசன் நினைத்து “என்ன பெரிசு அந்த பட்டவாத்தலை ஆளு பணம் பாக்கி ஏதாவது வச்சிருக்கரா ?”
“இல்லிங்க தம்பி, முருகேசன் ஐயாவைத்தான் பார்த்தது ஒன்னு சொல்லணும்” பெரியவர்
“இப்ப அவரை பாக்க முடியாது, வேலை விஷயமாய் வெளியூர் போகப்போறார் “ முருகேசன்
“அவங்கப்பா இறந்து போய்ட்டாரு” பெரியவர்
.
“அப்படியா, அவரை புதைக்க காரியம் செய்ய ஒரு இரண்டாயிரம் தரேன், போய் கருமாதி எல்லாம் செய்துடுங்க” முருகேசன்.
அவர் முருகேசனை ஒரு மாதிரி பார்த்தார்
அதற்குள் அடுத்த அறையிலிருந்து ஒரு பெண் குரல் “என்னங்க” அழைத்தது. “என்ன” என்று பார்த்தபடி அறைக்குள் நுழைய மனைவி புருவத்தை சுருக்கியபடி பார்த்தாள். “அப்பா இறந்துட்டாராம்”
“ஹூம் கேட்டது, இரண்டாயிரம் ரொம்ப அதிகம் ஒரு ஆயிரம் கொடுத்து ஆனுப்புங்க போதும்”
வெளியே ஆயிரம் பணத்துடன் பெரியவரிடம் வந்தான், பெரியவர் பணத்தை வாங்க மறுத்துச் சொன்னார், நானே என் செலவில அடக்கம் செய்துடறேன்.
“முருகேசன் இருக்காரா ” என்று முனகியபடி சென்றார்