(http://kuzhalinnisai.blogspot.com/2015/09/1954.html)
உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்
கல்கி எழுதி சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி என்ற படத்தில் ‘வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்.
உமர் கய்யாமின் ஒரிஜினல் வரிகள்:
Here with a loaf of bread beneath the bough,
A flask of wine, a book of verse – and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise now
கவிமணி அவர்களின் மொழிபெயர்ப்பு :
“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவி உண்டு
கலசம் நிறைய அமுதுண்டு
தெய்வ கீதம் பல உண்டு
தெரிந்து பாட நீ உண்டு
வையம் தரும் இவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ”
“வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு” எனும் கவிமணியின் பாடலை திரை படத்தில் பயன்படுத்திக் கொண்டமைக்காக அதற்கு கொடுப்பதற்காக, ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு, சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும், கவிமணியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கவிமணி சிவாஜியைப் பார்த்து தம்பி யார் ? என்று கேட்டார். பதட்டத்துடன் சின்ன அண்ணாமலை இவர்தான் சிவாஜி கணேசன் என்று சொல்லவும் கவிமணி ‘அப்படியா தம்பி என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்டார்.
கவிமணிக்கு சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. அதனால் அவருக்கு சிவாஜி கணேசனைத் தெரியவில்லை.பாடலுக்காக ஒரு பெருந்தொகையை சிவாஜி கொடுக்கவும் அதை வாங்க மறுத்து ‘இந்தப் பாடல் நான் எப்போதோ எழுதியது அதற்கு இது தேவை இல்லை தம்பி ‘ என்று மறுத்து விட்டார்.
நல்ல பதிவு
உமர் காயம் அவர்களின் பாடலை தமிழாக்கம் அருமை.
கவிமணி ஐயாவின் எளிமை, பாட்டுக்கு பணம் வாங்க மறுத்தது அவரின் பெருந்தன்மை.
LikeLike
அருமையான பதிவு நண்பரே.சிந்து பைரவி திரைப்படம் பற்றிய விமர்சனம் குவிகம் மின்
இதழுக்கு எழுதி அனுப்பி விட்டேன் எப்போது வெளியாகும் என்று தெரிவிக்க
வேண்டுகிறேன் நன்றி நன்றி ரங்கராஜன் சென்னை அம்பத்தூரில் இருந்து 9113988739
LikeLike