பேருந்து நிலையத்தில் இருவர்
ஏற்கனவே பஸ்ல சில்லறை கொடுக்கமாட்டாங்க ….இப்ப டிக்கெட்டே கொடுக்கமாட்டாங்க …
பிரெஸ்டிஜ் பத்மநாபன் :
அடியேய் ….ஏற்கனவே atm லே 20000 பணம் எடுத்தாந்து கொடுத்தா 20ம் தேதி வந்தா முழிப்பே…இனிமே முதல் தேதியிலிருந்தே முழிக்க வேண்டியதுதாண்டி …
atm லேருந்து அடுத்தவாரம் பணம் எடுத்து தாரேண்டின்னு சொன்னா இவ கேக்கல ..இப்ப 1000…500..கையில வச்சுண்டு ..அல்லாடுறா …
கவுண்டமணி …செந்தில்பற்றி…காமெடி
பதுக்கறத 100 . 50 ன்னு பதுக்குடான்னேன்…கேட்டானா ..இப்ப எப்புடி முழிக்கிறான் பாரு ?…
சிங்கம் 1
கூட்டத்தை தெரு வரைக்கும் சினிமாக்கொட்டயில …ரேஷன் கடையில …டாஸ்மாக் கடையிலே பாத்திருப்பே…இப்புடி பேங்கல பாத்திருக்கியா …
பாத்திருக்கியா ..500டா …1000டா …
சினிமா …சினிமா ..
500 வித்த டிக்கெட் இனி 100 ஆஹா ..
பிச்சைக்காரன்
ஏன்யா..நான்தான் 500…1000.தை செல்லாதாக்கினேன் ..100 பிச்சை கேட்டா 1000 போடுரியே ..என்கிட்டயேவா …
தங்க மார்க்கெட் [500…1000..பாதுகாப்பாக வந்து சேர்ந்தது…தங்கம் விலையும்
உயர்ந்தது ..}
நான் நிரந்தரமாவன் ..அழிவதில்லை ..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
கோடீஸ்வரன் ஸ்டோர்
அதிரடி ஆபர் …
1000 க்கு சில்லறை கொடுப்பவருக்கு ரெண்டு 1000 கொடுக்கப்படும் …
பாத யாத்திரை :
என்ன எல்லாம் கூட்டமா நடந்து எங்கே பாத யாத்திரை போறாங்க ?..
அட நீங்க ஒன்னு ..அப்பிடியே எங்காவது சில்லறை மாத்த முடியுமான்னு
போய்கிட்டே இருக்காங்க …
மெகா exchange ..one day ஒன்லி
கிவ் 400 கெட் 500
கிவ் 800 கெட் 1000
veg பாயிண்ட் ஒன் டே ஒன்லி
400 vegetables ஒன்லி 500
800 vegetables ஒன்லி 1000
அப்பா …
அப்போ..2000
எப்ப செல்லாம போகும் …?
அப்புடியெல்லாம் கேக்கப்படாது..தெரியுதா…?
அப்டின்னா எனக்கு இனிமே கிப்ட் 50 கொடு போதும் ..என்ன ..?