
காலையில் விழுந்தடித்து
எழவைக்கும்
கடிகார அலறல் சத்தம்
அரைகுறையாய் உண்டு
பரபரப்பாய் பயணித்து
அட்டவணை வாழ்க்கையில்
அடைபட்ட அலுவலகசிப்பந்தியான
அந்தக் கணவன்
அடுப்படி உஷ்ணத்தில்
புழங்கியும் புழுங்கியும்
பாத்திரங்களோடு
அழுக்குகளையும் குப்பைகளையும்
அவ்வப்போது இலவசமாய் கிடைக்கும் வசவுகளையும்
துடைத்துத் துடைத்து
களைத்துப்போன
அந்த குடும்பத்தலைவி
பட்டப்படிப்பை முடித்தபின்
கனவுகள் பொய்யாகிட
வேலைதேடியே வெறுத்துப்போன
ஒரு இளைஞன்
குனிந்த தலை நிமிராமல்
குறுக்கும் நெடுக்குமாய்
விரல் தேய்த்தபடி
குட்டித் திரையில்
சிறைப்பட்ட ஒரு சிறுமி
இவர்களையெல்லாம்
அப்படியே விட்டுவிட்டு
விடுதலையாய்
உற்சாகமாய்
உல்லாசமாய்
பயணிக்கும்
அவனுடன்
அழகாய் உடுத்தியபடி
அவ்வப்போது
புன்னகைத்தபடி
ஒரு பெண்மணியும்
சிறகு முளைத்த பறவைகளாய்
சிரிப்பும் கும்மாளமுமாய்
அண்ணனும் தங்கையும்.
‘கவிதைக்குள் குடும்பம்’ இருந்தாலும் அதில் மீண்டு நீந்தி, பறக்கும் இருவரில் ஒருவராய் இருக்க விழையும் ஆசையைய் தூண்டுதே கவிதை.
LikeLike