நவீன வாழ்க்கை
2009
Brian Judd
This 2009 photograph captured a sneeze in progress, revealing the plume of salivary droplets as they are expelled in a large cone-shaped array from this man?s open mouth, thereby, dramatically illustrating the reason one needs to cover hios/her mouth when coughing, or sneezing, in order to protect others from germ exposure.
How Germs SpreadIllnesses like the flu (influenza) and colds are caused by viruses that infect the nose, throat, and lungs. The flu and colds usually spread from person to person when an infected person coughs or sneezes.
How to Help Stop the Spread of Germs
Take care to:
– Cover your mouth and nose when you sneeze or cough
– Clean your hands often
– Avoid touching your eyes, nose or mouth
– Stay home when you are sick and check with a health care provider when needed
– Practice other good health habits.
“ஹாய் ரேணு,” என்றபடி உள்ளே நுழைந்தாள் உஷா. கணவர், இரு டீன் – ஏஜ் குழந்தைகள் உட்பட எல்லாரும் வராந்தாவில் நின்றுகொண்டு தங்கள் காலணிகளைக் கழற்ற முற்பட்டனர். “பரவாயில்லை உஷா, கழற்ற வேண்டாமே,” என்றவளை, “நாங்கள் எங்கள் வீட்டில் செய்வதைத்தான் இங்கும் செய்கிறோம்,” என்று கூறினாள் உஷா. மும்பையில் வாழும் ரேணுவின் தோழி உஷா சிகாகோவில் வாழ்பவள். அமெரிக்காவிலிருந்து வரும் தோழியின் குடும்பத்தை சிரமப்படுத்த வேண்டாமே என்பது ரேணுவின் நல்லெண்ணம், தனது வீட்டின் விதிகளைத் தளர்த்திக்கொள்ள அவள் தயங்கவில்லை! உஷாவும் அவள் கணவரும் அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்! “ரேணு, நாங்கள் பரிசோதனை செய்யும் அறைக்குள் நுழைவதற்குக் கூட காலணிகளை மாற்றிக்கொண்டுதான் செல்லவேண்டும் என்பது சட்டம். அவற்றிற்குக் கொடுக்கும் மரியாதை கூடவா மனிதர்களுக்குக் கிடையாது?” என்று நட்போடு சிரித்தாள் உஷா.
‘இந்தக் காலணிகளை அணிந்துகொண்டு எங்கெல்லாம் சென்று வருகிறோம்? பல ஊர்களின் பல தெருக்கள், பொதுக் கழிப்பிடங்கள், குப்பைகூளங்கள், தெருக்களின் அசிங்கங்கள் இவற்றை மிதித்துக் கொண்டல்லவா நடக்கிறோம்? நமது கால்களில் அவை பட்டுவிடக் கூடாதென்றுதானே காலணி அணிகிறோம்? பின்பு அவற்றுடன் பெருக்கித் துடைக்கப்பட்ட நமது வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் எப்படிச் செல்லலாம்?’ உஷா வாய்விட்டுச் சொல்லவில்லை! தனக்குள் கூறிக் கொண்டாள். யோசியுங்கள்!!
நவீன வாழ்க்கைமுறையில் நாம் நவீனம் என எண்ணிக்கொண்டு செய்யும் இந்தவிதமான தவறுகள் நம் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்றன. கோவிட் சமயத்தில் முகக்கவசம் அணிந்துகொள்ள நாம் ஒருவருமே தவறவில்லை. அதனைப்பற்றி அறிந்துகொண்டதும், எவ்வாறு தொற்றுகள் பரவுகின்றன எனத் தெரிந்துகொண்டதும் அப்போதுதானே! பின்பு திரும்பப் பழைய பல்லவியையே பாடுவானேன்? இவை வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளல்லவா?
நண்பர் ஒருவர் எங்கள் வீட்டில் சில தினங்கள் தங்கினார். அவர் தங்க விருந்தினர் அறையைக் காண்பித்தோம்; நிதானமாகத் தனது சூட்கேசை சுத்தமான விரிப்பு விரித்திருந்த படுக்கைமீது வைத்தாரே பார்க்கலாம். விமான நிலையத்தில், சர்வதேசங்களின் பலவிதமான பொது இடங்களில் வைக்கப்படும் அந்தப் பெட்டி, சர்வதேச அழுக்குகளுடன், கிருமிகளுடன் இப்போது அவர் உறங்கப்போகும் விரிப்பின்மீது சமர்த்தாக கிருமிகளை வாரித் தெளித்தது. காலையில் எழுந்ததும் சோர்வு, உடல் அரிப்பு, இன்னபிற. என்னத்தைச் சொல்வது?
நம்மில் பலர் சர்வசாதாரணமாக மார்க்கெட் சென்றுவந்ததும் காய்கறிகளை, உணவுமேஜையின்மீது கொட்டிவைத்துத் தரம்பிரித்துப் பைகளில் போட்டு குளிர்பதனப் பெட்டியில் வைப்போம். இவற்றைக் கழுவி உலர்த்தி வைக்கலாமே! கிட்டத்தட்ட முக்கால்வாசி வேண்டாத கிருமிகளை அவை நீக்கிவிடுமே! இப்போதெல்லாம் பெரிய கடைகளில் காய்கறிகளைக் கழுவக் கிருமிநாசினிகள் விற்கிறார்கள்! அவையும் வேண்டாம். வீட்டில் உள்ள கல் உப்பை ஒரு பெரிய கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, ஒரு இரண்டு லிட்டர் நீரில் கரைத்து, பச்சைக் கொத்தமல்லி, காரட், திராட்சைப்பழம், இவற்றை முதலில் நீரில் கழுவிவிட்டு அந்த உப்புநீரில் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்தாலே போதும், பின் கழுவி உலர்த்தித் துணியில் சுற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். இந்த அதிகப்படியான உப்புக் கரைசல் கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. ஆனால் பதினைந்து நிமிடங்கள் கட்டாயம் தர வேண்டும். (சமைக்கும்போது உப்பைக் கொஞ்சம் ருசி பார்த்துச் சேர்க்க வேண்டும்; இல்லாவிடில் கரிக்க வாய்ப்புண்டு!)
எனது பள்ளிப்பருவத்தில் பள்ளியிலிருந்து வந்ததும் உடைமாற்றிக்கொள்ள வேண்டும், முகம், கைகால்களைக் கழுவிக்கொண்ட பின்பே சாப்பிட அமர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத சட்டம். பக்கத்து வீட்டு டாக்டர் மாமா ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பியதும், குளித்துவிட்டுத் தான் உணவருந்த உட்காருவார். இன்று, எல்லாம் தலைகீழ்!
மருத்துவப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பின் போதுகளில், ‘லாப்கோட்’ (Lab Coat) எனும் மேலே அணிந்துகொள்ளும் ஒரு அங்கி உண்டு. நம்மைத் தொற்றுகளிலிருந்து காப்பதற்கும், நாம் கொண்டு செல்லும் தொற்றுகள் நோயாளிகளையும் நமது ஆராய்ச்சிகளையும் பாதிக்காமல் இருப்பதற்கும் இவை உதவும். ஆனால், அதனை மாட்டிகொண்டே இருப்பதனால் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளின், ஆராய்ச்சி சாலைகளின் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இந்த லாப்கோட்டில் ஒட்டிக்கொண்டு ஜம்மென்று எங்கும் சவாரிசெய்து எல்லா இடங்களுக்கும் பரவுகின்றன தெரியுமா? ஒரு மருத்துவக்கல்லூரியின் எதிரே உள்ள உணவுவிடுதிகளில், மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்த லாப்கோட்டுடனும் தங்களது தொழிலின் முக்கிய உபகரணமான ஸ்டெதாஸ்கோப்புடனும் பீடுநடை போடுவதைக் கண்டு முகம் சுளித்ததுண்டு. ஊர் உலகம் தங்களைக்கண்டு பிரமிக்க வேண்டும் என்பது இவர்களது எண்ணம்! இவர்களே மருத்துவ வார்டுகளில் பலவிதமான வியாதிகளுக்கு உட்பட்ட நோயாளிகளைப் பார்த்துவிட்டு, கிருமிகள் படிந்த தமது மேலங்கிகளுடன் உலகை (உணவுவிடுதிகளை) வலம் வருகின்றனர். யார் இவர்களுக்கு இதனைச் சொல்லிப் புரிய வைப்பது? ‘பிணியே, பிணிக்கு மருந்தே’ என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த மாணவர்களே! அந்தக் கடவுள்தான் உலகை இவர்களிடமிருந்து காக்க வேண்டும்.
எனது பாட்டிக்கு நாங்கள் குளிர்பதனப் பெட்டியில் மிகுந்த உணவை வைத்து மறுநாள் சாப்பிடுவதென்பது பிடிக்காத சமாசாரம். அவர்கள் காலத்தில் மிகுந்த உணவு ஏழை எளியவர்களுக்கு அன்றன்றே கொடுக்கப்பட்டுவிடும். என்றுமே புதியதாகச் சமைத்தே உண்பார்கள். ஃப்ரிஜ்ஜில் பாக்டீரியாக்கள் வளர இயலாதே தவிர, இறக்காது. ஆகவே அவற்றைச் சுடவைத்து உண்கிறோம். வீணாகப்போன உணவை இதனால் சில பொழுதுகளில் கண்டறிய முடிவதில்லை.
ஒதுங்குமிடங்களுக்குச் சென்றுவந்தால் கைகளை சோப்புபோட்டுக் கழுவிவிட்டே மற்ற வேலைகள் செய்ய வேண்டும் என்பது ஒரு எழுதப்பட்ட சட்டம். உணவு விடுதிகளில் உணவு பரிமாறுவோர், தயாரிப்போர் ஆகியவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு புதிர்!!
நினைத்த இடங்களில் காறித் துப்புவது, வாயை, மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொள்ளாமல் தும்முவது, இருமுவது ஆகிய செய்கைகள் நம்மிடையே வெகு பிரசித்தம். இந்தச் செய்கைகள் எத்தனை தூரத்திற்குக் கிருமிகளை வீசிப் பரப்புகின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஆறடி தூரம், 75 மைல் வேகத்தில்!! கோவிட் தொற்றின் தாக்கத்தை உணர்ந்தபின்னும் நாம் ஏன் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வியப்பே! ஏனெனில் நாம் இவற்றை நம் தினசரி வாழ்வின் நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்ப்பதேயில்லை!
பெரும்பாலான பொது இடங்களில் (விமான நிலையத்தில், செக்யூரிடி வரிசையில் நிற்கும்போது, சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்கும்போது, ஷாப்பிங் செய்யும் இடங்களின் கூட்ட நெரிசலில்) சில நவீன இளம்பெண்கள் அலைபோல விரித்துவிட்ட தலைமயிரைக் கோதி அதனை உதறிக் கொள்வார்கள்! அதிலிருந்து எத்தனை பாக்டீரியாக்கள் காற்றில் பறக்கும் தெரியுமா? இது நாகரிகத்தின் உச்சமல்ல; அநாகரிகத்தின் வெளிப்பாடு!
இவற்றையெல்லாம் நானும் நண்பர்களும் விவாதித்து மாய்ந்துபோனதுண்டு. நவீன யுகத்தின் விளைவுகள் இவை. நமது வாழ்க்கையில் இவையனைத்தும் நமது இளைய தலைமுறையினருக்கு கற்க, கற்பிக்க மறந்துவிட்ட விஷயங்கள். சிறுபான்மையினர் இன்னும் இவற்றை நடைமுறையில் வைத்துள்ளது பாராட்டுதற்குரியது.
பல ஆண்டுகளாக, பள்ளி, கல்லூரி, அக்கம் பக்கத்து வீட்டார்கள், இவர்களிடமிருந்து கண்டறிந்து கொண்ட சுகாதாரம் பற்றிய நேர்மறை, எதிர்மறை விவகாரங்கள் பல அருமையான பாடங்களை இன்றுமே கற்பிக்கின்றன. இவற்றை நல்லமுறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூறி வளர்ப்பது நம் அனைவரின் கடமையுமாகும். இதுவே நான் கற்றறிந்த சுகாதாரம் பற்றிய அரிய பாட
